VISWA Profile picture
May 1, 2023 10 tweets 4 min read Read on X
#சங்கி_பொய்_தொழிற்சாலை

"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 25 படி ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை"

சிறுமி லாவண்யா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில் இது Image
சந்தேகத்திற்கு இடமான லாவண்யா தற்கொலையை மதமாற்றும் முயற்சி என,
இந்தியா முழுவதும் பரப்பின சங்கீ வார் ரூம் அடியாட்கள் பரப்பிய போது திணறித்தான் போனது தமிழ்நாடு.
ஆனால் விரைவில் உண்மைகளை வெளியில் கொண்டு வந்தது.
தொடர்ந்து பல "மதமாற்ற" கதைகள் பரப்பப்பட்டன
தமிழ்நாடை விட அதிகம் குறி வைக்கப் படுவது கேரளா.
நாட்டின் பிரதமரே, இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் வயநாடு சென்று இருக்கிறார் ராகுல் என்று பரப்பப்பட்டது.
இரண்டு மாநிலங்களிலும் எவ்வளவோ முயற்சி செய்தும் கலவரத்தை உண்டாக்க முடியவில்லை.
மக்களின் தெளிவு அப்படி Image
கேரளா இஸ்லாமியர்கள் ஐஎஸ்ஐ தொடர்பை பற்றி ஆரம்பத்தில் web தொடர் வெளியிட்டார்கள்.
இப்போது அதைவிட அதிக மக்களை சென்றடைய இல்லாத மதமாற்றம் இருப்பதாக படம் எடுத்து கேரளாவின் மத நல்லிணக்கத்தின் மீது தாக்குதல் நடத்தி சங்கிகளின் பொய் பிரச்சாரத் தொழிற்சாலை ஆக திரை துறையை மாற்றி வருகின்றனர் Image
கடந்த நவம்பரில் தீ கேரளா ஸ்டோரிஸ் ட்ரெய்லர் வெளியிட்டபோது அதில் வந்த காட்சிகளை சமய சகிப்பாளர்கள் கண்டு பதறினர்.
இது கேரளாவில் co-exist வாழ்வில் அடிப்படையாகக் கொண்டது என பூசி மெழுகப்பட்டது.
தற்போது மே 5 ல் திரையிட போவதாக அறிவிப்பு வந்திருக்கு Image
படத்தில் 32,000 கேரள இளம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஜிகாதிகளாக ஐ எஸ் ஐ யில் சேர்க்கப்பட்டதாக தகவல். எதிர்பார்த்தபடி கேரளா கொந்தளித்தது காங்கிரஸ் படத்தை தடை செய்ய சொல்லி போராடிக் கொண்டிருக்கு.
முதல்வர் பினராயி RSS ன் இந்த முயற்சி வெற்றி பெறாது எனக் கூறியுள்ளார் Image
காஷ்மீர் பைல்ஸ் படம் இஸ்லாமியர் மீது வெறுப்பைக்கக்கி எடுக்கப்பட்டது

சில மாதம் முன் காஷ்மீர் ஹிந்து பண்டிட் குடும்பம் மோடி அரசை எதிர்த்துப் போராடியது

படம் எடுத்து கோடி கணக்கில் கல்லாகட்டியவனோ, அதை பார்க்க லீவு கொடுத்து டிக்கட்டும் எடுத்துக் கொடுத்தவனோ

எட்டிக் கூட பார்க்கவில்லை Image
மீடியா சமூக ஊடகம் என்பதை தாண்டி வெறுப்பு தூண்டுதல் திரை உலகை அடைந்து விட்டது.

சங்கீமயமாகிவிட்ட RRR தெலுங்கு மசாலாக்கள், பான் இந்திய ரிலீசாக வெளியாக

தள்ளாடும் பாலிவுட் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வெறுப்பு தூண்டும் படங்களைத் தான் நாடும்

பதிலடி கண்டிப்பாக மலையாளத்தில் கிடைக்கும் Image
கேரளா ஸ்டோரீஸ் படம் சென்சாரிடம் போலியான தகவல் தெரிவித்து வெளியாவதாக RTI தகவல்கள் கூறுகின்றன.

கேரளாவில் தற்போது பிஜேபி ஆட்சியில் இருந்தால் இது மாதிரி படம் வெளிவருமா?

குஜராத் கலவரத்தை மையமாக வைத்து பர்சானியா என்ற படத்தை, குஜராத் நிர்பந்தத்தால்
அன்றைய காங்கிரஸ் அரசு தடை செய்தது Image
படத்தை தடை செய்வதில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஒற்றுமையாக குரல் கொடுக்கின்றன

படத்தில் வருவது போல ஒரு ஜிகாதியையாவது அடையாளம் காட்டினால் ₹1 கோடி தருவதாக சசி தரூர் அறிவித்து உள்ளார்

இனி ஒவ்வொரு மலையாளி பெண்களையும் சந்தேக கண்ணுடன் பார்க்கத் தூண்டும் என்பது மட்டும் நிச்சயம் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with VISWA

VISWA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vis1976al

Feb 16
#அறிவியலிடம்_மண்டியிட்ட_மதம்

இத்தாலி நாட்டின் பைசா நகரில், வானவியலின் தந்தை என்றழைக்கப்படும் #Galelio_Galilei ,
15 February1564 பிறந்தநாள்.

மதம் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும். காரணம் ஆதாரமற்ற நம்பிக்கையை விட Image
ஆதாரத்தின் அடிப்படையிலான‌ விஞ்ஞானம் உண்மையானது, பலமானது, நேர்மையானது.

அப்படி மதத்தை மண்டியிட செய்தவர்களுள் #கலிலீயோ மிக முக்கியமானவர்.

நவீன வானவியலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் இவர் இசை கலைஞரின் மகனாகப் பிறந்தார்.

பைசா நகரில் பள்ளி படிப்பை முடித்தார்.
கணிதத்துறை பேராசிரியராக பைசா பல்கலைகழகத்திலும் படூவா பல்கலைகழகத்திலும் பணிபுரிந்தார்.

ஏற்கனவே இருந்து வந்த தொலை நோக்கியைத் தம் ஆய்வுத் திறனால் மேலும் செழுமைப்படுத்தினார்.

உலகம் தட்டை என்றும், பிரப‌ஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன
Read 9 tweets
Jan 24
#சிந்து_முதல்_வைகை_வரை

ஆரியர்களின் வேத காலமே இந்தியாவின் பண்டைய காலமாகக் கருதப்பட்ட நிலையில்

20 ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்க பட்ட ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள்

ஆரியர்கள் வருவதற்கு முன்பாகவே இந்தியத் துணைக்கண்டத்தில் மிக உன்னதமான

மிகப்பெரிய கலாசாரம் விளங்கி வந்ததை உறுதி செய்தன. Image
#சிந்து_சமவெளி_நாகரிகம்

(கி.மு 3300- கி.மு 1900)

எகிப்து, மெசபடோமிய நாகரிகங்களின் காலத்தை சார்ந்தது

12 லட்சத்து 50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்

ஹரப்பா, மொகஞ்சதாரோ, தோலோவீரா, கனேரிவாலா, ராக்கி ஹாரி நகரங்களை கொண்டது.

இத்தகைய மிகப்பெரிய நாகரீகம் மொத்தமாக அழிய வாய்ப்பில்லை Image
அப்படியானால் இந்த மக்கள் என்ன ஆனார்கள்?

இவர்கள் எங்கு சென்றார்கள்?

இந்திய நாட்டின் பூர்வகுடிகள் யார்?

என்ற கேள்விகள் தொல்லியல் & வரலாற்று ஆய்வாளர்களை குடைந்தது.

இடையே, #வால்கா_முதல்_கங்கை வரை போன்ற பொ. செ. தனமான புனைவுகள் குழப்பத்தை உண்டாக்கி போலி வரலாறை பரப்பின Image
Read 17 tweets
Jan 22
#குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு

#நாங்கள்வேறு_நீங்கவேறு

நீங்க கால்நடைகளை நாடோடிகளாக ஓட்டி வந்தபோது

நாங்க பயிர்த்தொழிலில்
நிலைத்து விட்டோம்

நீங்க திரும்ப மாட்டோம் என பிணத்தை எரித்து விட

நாங்க நிலத்துக்குள் விதைத்து
நடுகல் நட்டோம்

நீங்க நீண்ட நாள் தங்கும் கோதுமை உணவை கட்டி வர Image
நாங்க அன்றன்றைக்கு அரிசியை சமைத்து உண்டோம்

நீங்க கொடும் பசியால் குதிரையையும் வெட்டி உண்ண

நாங்க உழவு மாடுகளை
வளர்த்து விட்டோம்

நீங்க வரும் வழியில் பஞ்ச பூதங்களையும்
அஞ்சி வணங்க

நாங்க புதைத்து வைத்த
குல மூதாதையரை
வணங்கினோம்

நீங்க பேசும் போதே
நாங்க எழுத்தை கண்டு விட்டோம் Image
நீங்க சிந்து நதிக்கரையில் கூடாரம் அமைக்கும் முன்பே

நாங்க அங்கே நகர நாகரிகம் கட்டமைத்து விட்டோம்

நீங்க பெண்களை பலவீனமானவர் என்று கை விட்டு வர

நாங்க ஆதியிலேயே தாய் வழி சமூகம்

நீங்க எம் பெண்களை கைப்பற்ற தந்தை வழி சமூகமாக கூட

நாங்க தாய் மாமன் தலைமை ஏற்றோம் Image
Read 6 tweets
Jan 20
#முன்கதை_சுருக்கம்

லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த தேவிந்தர் சொந்தமாக டாக்சி ஓட்டுகிறார்

சில ஆண்டுகளுக்கு முன் அக்கவுன்டிங் படித்த சீமாவை திருமணம் செய்து லண்டனுக்கு அழைத்து வந்திருந்தார்.

தேவிந்தருக்கும் அவர் மாமாவுக்கும் நடந்த உரையாடல் கீழே SS ஆக இருக்கு 👇 Image
சீமாவை எப்படியாவது அவரது தாய் தந்தையரிடம் பேச வைத்து, பிரச்சினையைச் சமாளிக்க

சீமா இருந்த இடத்தில் கெஞ்சி அனுமதி வாங்கி,

இந்தியாவில் இருக்கும் மாமனார் மாமியாருக்கு கான்பரன்ஸ் கால் போட்டு பேச வைத்தவுடன்

சிறை அதிகாரிகள் அழைப்பைத் துண்டிக்கச் சொல்வதற்கும் சரியாக இருந்தது
ஒரு ஆள் அதுவும் டாக்சி ஓட்டிச் சம்பாதிப்பது பத்தவில்லை

அவருக்கு ஒரு பழைய பெட்டிக் கடையை விலைக்கு வாங்கி,

அதில் ஒரு அஞ்சல் அலுவலக பிரான்சைஸ் எடுத்து வைத்துக் கொடுத்திருந்தார் தேவிந்தர்.

இந்தியா போல் இல்லாமல் பிரித்தானியாவில், அஞ்சல் துறையை, போஸ்ட் ஆஃபீஸ் லிமிட்டெட் பெயரில்
Read 12 tweets
Jan 19
#அபாயகரமான_சினிமா

அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.

அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.

+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.

நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும் Image
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.

ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
பின்னாளில் சமூக அறிவியல் எல்லாம் படித்து IPS ஆகும் ஷர்மாவுக்கு அது தன் social capital என கடைசிவரை தெரியவில்லை பாவம்.

ஷர்மாவின் தோழி #ஜோஷி, அவர் காதலை ஏற்றுக்கொண்டு கடைசிவரை கூட இருக்கிறார்.

ஷர்மா IPS ஆனதும் இந்த முற்போக்கு ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறது
Read 16 tweets
Nov 19, 2023
#ஜெய்_ஆஸ்திரேலியா_ராம்

விளையாட்டை விளையாட்டாக பார்க்க தெரியாத வெறி கொண்ட சங்கிகளின் மூஞ்சி மேல பீச்சாங்கையால் வெச்சி வெளுத்து விட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்

எல்லா நாட்டிலும் தன் அணியினர் வெற்றி பெறவே ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள். ஆர்ப்பரிப்பார்கள்.
அது இயல்பு தான் Image
ஆனால் எந்த நாட்டுக்காரனும் எதிரணிக்காரனின் வீழ்ச்சிக்கு
தேங்க்யூ ஜீசஸ் என்றோ

அல்லாகு அக்பர்னு பொதுவெளியிலோ அல்லது அரங்கத்துக்கு உள்ளோ

இந்திய சங்கி மங்கிகளை போல மிக கேவலமான கேடுகெட்ட வேலைகளை செய்வதில்லை.

எதிரணிக்காரனின் தோல்விக்கு ஜெய்ஸ்ரீராம்னு வாய் கிழிய கத்துற நாகரீகம் Image
அற்ற காட்டுமிராண்டிகளை எவன் ஏறி மிதிச்சாலும் அது நமக்கு மகிழ்ச்சியே..

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வாழ்த்துகள் என்று அந்த நாட்டு பிரதமர் வாழ்த்து சொல்வதில்லை.

ஆனால் இங்கே விளையாட்டிலும் சரி விஞ்ஞானத்திலும் சரி மதவெறியும் வன்மமும் அரசியலும் தான் குவிஞ்சி கிடக்கு...
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(