*சிக்கலான நோய் தீர்க்கும் சிந்தாமணி வைத்தீஸ்வரர் கோவில்*
பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ் வரன் கோவில்.
1
அம்மனின் பாதங்கள் கொண்ட கோவில், சோழப் பேரரசியின் பெயரால் உருவான திருத்தலம், சித்தர் சமாதி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டத்தினைச் சார்ந்த, சிந்தாமணி வைத்தீஸ்வரன் கோவில்.
2
இந்த இறைவன் முன்காலத்தில் குலோத்துங்கச்
சோழீஸ் வரமுடைய மகாதேவன் என்று அழைக்கப்பட்டதாக குறிப்புகள் சொல் கின்றன.
தின சிந்தாமணி என்ற பேரரசியின் பெயரால் அழைக்கப் பட்ட இவ்வூர், இன்று ‘சிந்தாமணி’ என்று வழங்கப்படுகிறது.
3
ஊரின் கடைக் கோடியில் வயல் வெளிகள் சூழ இயற்கையான சூழலில் ஆலயம் அமைந் துள்ளது. சுற்றுச் சுவர், ராஜகோபுரம் ஏதுமில்லை என்றாலும், விசாலமான இடத்தில் ஆலயம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் வேம்பும், அரசும் காணப் படுகின்றன.
4
அருகே விஸ்வரூப அனுமன் வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். அருகே, நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. சற்று நடந்ததும், அம்மன் சன்னிதி தனிச் சன்னிதியாக கிழக்கு முகமாய்க் காட்சியளிக்கிறது. அன்னை தையல்நாயகி என அழைக்கப்படுகின்றாள்.
5
சன்னிதியின் எதிரில்
அம்பிகை யின் பாதக் கமலங்கள் தனி பீடத்தின் மீது அமைக் கப்பட்டுள்ளன.
இதனைக் கடந்த பின் சுவாமி சன்னிதி வருகிறது. பெரிய நந்திதேவர் இறைவனை நோக்குகிறது.
6
மகாமண்டபம் கடந்ததும், கருவறை முன்மண்டபம், கருவறையில் வட்ட வடிவ ஆவுடையாரில் நீண்ட லிங்கத் திருமேனியராக இறைவன் காட்சி தருகின்றார். குலோத்துங்கச் சோழீஸ்வரமுடைய மகாதேவரின் இன்றைய பெயர் வைத்தீஸ்வரர். இங்கு வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இந்த திரு நாமத்தைப் பெற்றுள்ளார்.
7
இது தவிர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான் சன்னதிகளும் அமைந்துள்ளன. இந்த முருகப் பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும்.
8
சித்திரகுப்தர், விசித்திரகுப்தர் சன்னிதி சிறிய அளவில் உள்ளது. இவர்கள் எமபயம் போக்கி, உடல்நலம், தருபவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
9
ஆலயத்தின் தல விருட்சம் மகிழ மரம். ஆலய தீர்த்தம் திருக் கோவிலின் ஊறல் குளம். இத்தல இறைவனையும்,
இறைவியையும் வணங்கினால், சிக்கலான நோய்கள் கூட விலகி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கை.
10
இந்தக் கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, ஞாயிற்றுக் கிழமை ராகுகால நேரங்களில் துர்க்கை பூஜை, கார்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி, ஐப்பசியில் அன்னா பிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் பால்குட விழா என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.
11
சித்தர் பீடம் :-
ஆலயத்தின் ஈசான்ய மூலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஐக்கியமான ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. இவரின் மீது பஞ்ச பூதேஸ்வரர் திருமேனியும், ஞான விநாயகர், நாகங்கள் திருமேனியும், அரசமரமும், வேப்பமரமும் அமைந்துள்ளன.
12
இவரை பவுர்ணமி தினத்தில் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவரை வணங்கும் போது பலவித வாசனைகள் வருவதைச் சிலரால் மட்டுமே உணர முடியும் என்று கூறுகிறார்கள்.
13
விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத் திற்கு தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சாலையோர ஊராக சிந்தாமணி
அமைந்துள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் இருந்து எண்ணற்ற பேருந்து வசதி உள்ளது. 🙏
ஆவணியாபுரம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.....
லட்சுமி நரசிம்மர் திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்....
1
ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.
2
தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்குப்பின் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர்!
சித்திரைத் திருவிழா மதுரையில் களைகட்டியுள்ளது. வைகையில் இறங்க மதுரைக்கு வரும் கள்ளழகர் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
மே 5ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்க உள்ளதை முன்னிட்டு ஆயிரம் பொன் சப்பரம் அற்புதமாகத் தயாராகி உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று, அகிலம் புரக்கும் அங்கயற்கண்ணியாம் மீனாட்சி அம்மைக்குப் பட்டாபிஷேக வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மே 2 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. மே 3 ஆம் தேதி இன்று திருத்தேரோட்டம் .
தண்டுக்கீரை (Amaranthus tricolor) கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது. தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது.
ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும். முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது.
தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம்.
நமக்கு எதுவெல்லாம் இந்த உலகில் தேவைப்படுகிறதோ அதை நம் மனதில் கற்பனையில் கொண்டு வருவதே ஆசை.
ஆசைகளை பற்றி இன்னும்_
விளக்கமாக கூற வேண்டுமானால் ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரு கயிற்றின் இரண்டு பிரிகளைப் போல, அவை ஒன்றோடோறொன்று பின்னிக்கொண்டு இதயத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிணைந்துகொள்கின்றன
நாம் அவைகளை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்டால் நன்மை விளையும், அளவுக்கு அதிகமானால் அழிவு நிச்சயமாகிவிடும்..
முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.
முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம்.
முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது எனினும், மணல் சார்ந்த அங்ககத் தன்மை அதிகமுள்ள நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிகமுள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.
பிரம்மாவின் மகன் சனத்குமார், பெருமாளை மனித ரூபத்தில் காண ஆசைப்பட்டு, பெருமாளை வேண்டி தவமிருந்தார். இவரது பக்தியை மெச்சி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தந்தார்.
2
சனத்குமார், தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தான் கண்ட காட்சியை வடிவமைக்கச்
சொன்னார். அவ்வாறு வடிவமைத்த சிற்பத்தை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர்.