அன்பெழில் Profile picture
May 2 12 tweets 3 min read Twitter logo Read on Twitter
#பக்தி #தும்பைப்பூ
ஒரு விலைமகள் தன் தொழிலுக்கென தர்மம் வைத்திருந்தாள். அவள் தினமும் காலையில் எழும் போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்கான அச்சாரம் வைக்கப்பட்டு இருக்கும். அதை கையில் எடுப்பவள், இந்த அச்சாரத்தை வைத்தவர் இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு Image
வரலாம் என்று சொல்லி விட்டு சென்று விடுவாள். அன்றைய பொழுது அவளுக்கு அந்த அச்சாரம் இட்டவனோடு தான். அவள் அந்த தர்மத்தில் இருந்து ஒரு போதும் விலகாமல் இருந்தாள். ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார்.
வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள் என்று அனுப்பி விட்டாள். வயோதிகர் சென்று சிறிது நேரத்தில் அந்த தேசத்தின் மன்னன் அங்கு வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், பெண்ணே, உன் மீது கொண்ட அளவுகடந்த காதலால்
உன்னைத் தேடி வந்தேன் என்றான். அதற்கு அவள், இன்று இரவு ஒருவரை நான் கணவராக வரித்து விட்டேன். அதனால் நீங்கள் செல்லுங்கள் என்று மறுத்து விட்டாள். மன்னனோ, நான் ஒரு மன்னன். என்னை ஏற்க மறுக்கிறாயா? உனக்கு பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறேன். ஒப்புக்கொள். இல்லையெனில் உனக்கு மரணம் தான்
தண்டனை என்றான். அரசே! நீங்கள் மன்னன் என்பதால் என்னுடைய தர்மத்தில் இருந்து நான் விலக முடியாது. உங்களுடைய பொன்னும், பொருளும் எனக்குத் தேவை இல்லை. நான் ஒருவரை இன்றைய தினம் கணவராக வரித்துவிட்டேன். ஆகையால் நீங்கள் விலகி விடுங்கள். இல்லை என்னை கொல்ல வேண்டுமானால் கொல்லுங்கள். அதனால்
வரும் பாவம் உங்களைத் தான் சேருமே தவிர, எனக்கு ஒன்றும் இல்லை என்றாள் அந்தப் பெண். என்ன செய்வதென்று தெரியாத மன்னன், அங்கிருந்து அகன்று விட்டான். அன்று இரவு முதியவர் வந்தார். வந்தவர் உடல் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தார். அந்தப் பெண்ணோ கொஞ்சமும்
முகம் சுழிக்காமல், அவரது செயலை சகித்துக் கொண்டு, இடத்தை சுத்தப் படுத்தினாள். இரவு முழுவதும் இப்படியே கழிந்தது. பொழுது விடியும் நேரத்தில் அந்தப் பெண்ணிடம் முதியவர் கேட்டார், பெண்ணே நீ நினைத்தால் மன்னனோடு இன்றைய பொழுதை கழித்திருக்கலாம். ஆனால் என்னோடு இருந்து இந்த இரவை துன்பத்தோடு
கழித்து விட்டோமே என்ற கவலை உனக்கு இல்லையா? அதற்கு அந்தப் பெண், கணவனுக்கு பணிவிடை செய்வதில் கஷ்டம் என்ன இருக்கிறது. இன்று உங்களை
என் கணவனாக வரித்தேன். அதில் இன்பம் இருந்தாலும், துன்பம் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதே தர்மம் என்றாள். அப்போது முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான்
தோன்றினார். “தர்மம் விலகாத உன் நேர்மை என்னை மகிழ்விக்கிறது. உனக்கு வேண்டிய வரம் கேள் என்றார். எல்லாரும் இறைவனின் திருப்பாதத்தில் இருக்கவே ஆசைப் படுவார்கள். அவளுக்கும் அதே ஆசை தான். ஆனால் இறைவனை நேரில் கண்ட பதற்றத்தில், எப்போதும் என் காலடி உங்கள் தலையில் இருக்க வேண்டும் என்று
மாற்றி கேட்டு விட்டாள். பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து, வரத்தை மாற்றித் தரும்படி கேட்டாள். ஆனால் இறைவனோ அவள் கேட்டபடி, அவளது பாதம் தன் தலையில் இருக்கும் வரத்தையே அளித்தார். அதன்படி அவள் அடுத்தப் பிறவியில் ‘தும்பை’ என்னும் மலராகப் பிறந்தாள். தும்பைப் பூவை உற்றுப் பார்த்தால் Image
தெரியும். அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதமும் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய இடம் உண்டு.
அக்ஷரம் விப்ரஹஸ்த்தேன மாத்ருஹஸ்த்தேனபோஜனம்I
பார்யாஹஸ்த்தேன தாம்பூலம் ராஜஹஸ்த்தேன கங்கணம் II

அறிவாளியின் கரத்தால்அட்சரத்தையும்,
அன்னையின் Image
கரத்தால் உணவையும்,
மனைவியின் கரத்தால் தாம்பூலத்தையும்,
அரசனின் கரத்தால் பரிசையும் பெற வேண்டும்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 4
#MahaPeriyava
Author: Raa. Venkatasamy (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

There were a number of shops such as a flower shop, a medical shop and others doing brisk business in front of Kanchi Matham many years back. The bank officials Image
of Indian Bank had a desire to open a branch there and take care of the administration of the revenue and expenses of the Matham. They expressed their wish to the Matham officials and got the approval. The conditions from the Matham was such that the bank should construct their
own building in front of the Matham. And whatever shops were required to be vacated for this purpose, alternate places were compulsorily to be given to the shopkeepers. The conditions were implemented, and the Bank branch was opened. Two years later, a couple came and stood
Read 12 tweets
May 4
#அக்னி_நட்சத்திரம்
இன்று 04.05.2023 தொடங்குகிறது.
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியனின் அதிதேவதை அக்னி. சித்திரை மாத பிற்பகுதி மற்றும் வைகாசி மாத முதல் 2 வாரங்கள் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் இது Image
அக்னி நட்சத்திரம் என்று கூறப்படுகிறது. ஜோதிடப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது சூரியன் உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படுகிறது. சூரியன் பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில்
சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களின் பெயர்தான் அக்னி நட்சத்திரம் ஆகும். வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. புராணத்தில் அக்னி நட்சத்திர காலம் உருவான காரணம் சொல்லப்பட்டுள்ளது. அக்னி தேவன் தீராத வயிற்றுப் பசியால் அவஸ்தைப்
Read 9 tweets
May 4
#மகாபெரியவா ஒரு முறை காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க வந்திருந்தான் பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன். பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தான். அவனை உற்று நோக்கிய ஸ்வாமிகள், “நீ குளித்தலை சங்கரன் தானே? சௌக்கியமா இருக்கியா” என்று விசாரித்தார்.

“உங்க ஆசீர்வாததுலே சௌக்கியமா இருக்கேன் பெரியவா!” Image
என்றான் சங்கரன்.

“அது சரி, உனக்கு இப்போ என்ன வயசாகறது ?”

“30 பெரியவா” என்றான் சங்கரன்.

உடனே பெரியவா, “கல்யாணம் பண்ணிக்காம இப்படியே பிரம்மச்சாரியா காலத்தை ஒட்டிடலாமுனு தீர்மானிச்சுடையாக்கும்!” என்று சிரித்தார்.

“ஆமாம் பெரியவா” என்றான் சங்கரன்.

“சரி சரி. நீ இப்போ
வந்திருக்கறதிலேயே ஏதாவது விசேஷம் உண்டா? விஷயம் இல்லாம நீ வர மாட்டியே” என்று சொல்லி விட்டு சிரித்தார் ஸ்வாமிகள்.

உடனே சங்கரன், “ஆமாம் பெரியவா ! எனக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன்” என்றான்.

ஸ்வாமிகள், “அப்படியா! சொல்லு, சொல்லு நோக்கு
Read 25 tweets
May 3
#ஆன்மீக_அறிவியல்
விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசு Image
பட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள், விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! பொதுவாக, மாதத்துக்கு Image
ஒரு முறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் Image
Read 14 tweets
May 3
#மதுரை_ஸ்ரீமீனாட்சிஅம்மன்_பட்டாபிஷேகம் #மீனாட்சி_அம்மன்_திருக்கல்யாணம் #சித்திரை_திருவிழா #கள்ளழகர்_ஆற்றில்_இறங்குவது
முன்பு மதுரையில் சைவப்பிரிவினர் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தையும் , மீனாட்சி பட்டாபிஷேகத்தையும் சேர்த்து திருவிழாவாகவும் வைணவப்பிரிவினர் அழகர்கோவிலில் ImageImage
இருந்து ஸ்ரீ கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் திருவிழாவையும் தனித்தனியே கொண்டாடி வந்தனர். அந்த காலத்தில் மாசி முதல் ஆடி வரை ஆறு மாதம் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறும். ஆவணியில் ஆட்சி பொறுப்பேற்கும் சுந்தரரேஸ்வரர் மாசி மாதம் வரை ஆட்சி நடத்துவார்.
மாசியில் மீண்டும் பட்டத்து அரசியாக ஸ்ரீ மீனாட்சி அம்மன் பொறுப்பேற்கும் திருவிழா மாசி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. மன்னர் #திருமலை_நாயக்கர் இந்த இரண்டு விழாகளையும் ஒருங்கிணைத்து, சித்திரை மாதத்தில், சித்திரை திருவிழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்
Read 22 tweets
May 2
The differences are how the two schools interpret prapatti, surrender to God, and how this has led to a clear schism on cultural levels. The Vadakalais rest their philosophy on the Sanskrit Vedas, which suggest that existence is rooted in the performance of certain actions for
achieving a certain result. So, it is said that even though Sriman Narayana is kind, he waits for the individual to show some sign of his/her surrender to Him before acting to save one from the sorrows of life. So, prapatti is an action leading to a whole new set of actions,
living a life of strict adherence to Vedas in order to show Him that we are ready to leave the cycle of reincarnation to serve Him in Vykunta.
The Tenkalais place great emphasis on the Azhwars devotional literature, which collectively is called the nAlAyira divya prabhandam.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(