பிரம்மாவின் மகன் சனத்குமார், பெருமாளை மனித ரூபத்தில் காண ஆசைப்பட்டு, பெருமாளை வேண்டி தவமிருந்தார். இவரது பக்தியை மெச்சி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தந்தார்.
2
சனத்குமார், தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவிடம் தான் கண்ட காட்சியை வடிவமைக்கச்
சொன்னார். அவ்வாறு வடிவமைத்த சிற்பத்தை அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர்.
3
இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தலம் கிருதாயுகத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயில். கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் போன்ற நான்கு யுகங்களையும் கடந்து நிற்கிறது.
4
யுகங்களைக் கடந்து நிற்பதால் இக்கோயில் பெருமாள் யுகம் கண்ட பெருமாள் என்று அழைக்கப் படுகிறார்.
5
தலச்சிறப்பு
பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் போன்ற ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
6
எல்லா பெருமாள் கோயில்களிலும், அதிகாலையில் பாடப்படும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற பெரியாழ்வாரால் பாடப்பட்ட திருப்பல்லாண்டு இயற்றப்பட்ட திருத்தலம் இதுவே.
7
மார்கழி மாதத்தில் இத்திருக்கோயில் தரிசனம் மிகவும் சிறப்பு. வைகுண்ட ஏகாதசியும், நவராத்திரி விழாவும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
8
பெருமாள் கோயில்களில் பொதுவாக 96 வகையான விமானங்கள் அமைக்கப் படுவது வழக்கம். அவற்றுள் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
9
108 திவ்யதேச திருத்தலங்களில் இவ்வூரிலும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே அஷ்டாங்க விமானம் அமைக்கப்பட்டு, தலமூர்த்தி அதன் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதன் மேல் உள்ள கலசம் 10 அடி உயரம் கொண்டது.
10
திருக்கோயில் கோபுரத்தின் மேல் கலசம் வைக்கும் போது அவற்றுள் நவதானியங்களை நிரப்பி வைப்பார்களாம். ஏனெனில், இயற்கை சீற்றங்களின் போது, எல்லாம் தண்ணீரில் அடித்துச்சென்றுவிடும் நிலையில்,
11
மிஞ்சி இருக்கும் சில மனிதர்கள் உயிர்வாழ அந்த தானியங்கள் தேவைப்படும் என்பதற்காக கலசத்தில் நவதானியங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் எல்லா செயல்களுமே ஏதோ ஒரு நல்ல நோக்கத்துடனேயே செய்யப்பட்டுள்ளது.
12
பிற சன்னதிகள்
எட்டு பிரகாரங்களுடன் இக்கோயில் அமைக்கப் பட்டுள்ளது. ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவகிரகங்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், மணவாள மாமுனிகள், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணர், கருடர், ஆஞ்சநேயர், லக்ஷ்மி நரசிம்மர் ஆகிய சன்னதிகள் உள்ளன.
13
பெருமாள் கோயிலில் நவகிரகங்களுக்கு சன்னதி இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
14
தலப்பெருமை
இத்தல உற்சவர் சுந்தரராஜன் என்று அழைக்கப்படுகிறார். மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன் இவரை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
15
இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஓவிய வடிவில் காட்சி தருகின்றனர். அதனால் இத்தளம் ஓவிய மண்டபம் என அழைக்கப் படுகிறது.
16
மூன்றாவது தளத்தில் ரெங்கநாதப் பெருமாள் சயன கோலத்தில் தாயார்களுடன் காட்சி தருகிறார். இவ்வாறாக சுவாமி நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களில் முக்கோல முகுந்தன் ஆக இக்கோயிலில் கூடலழகர் காட்சி தருகிறார்.
17
பூவராகர், லக்ஷ்மி நரசிம்மர், நாராயணன், ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றுவதுபோல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள்.
18
திருக்கோயில் விமானத்தை பார்க்க இக்கோயிலில் ரூ. 5/- வசூல் செய்கிறார்கள். இரவு 8:00 மணிவரை விமானத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
19
பாண்டிய மன்னனுக்கு மீன் வடிவில் பெருமாள் காட்சி கொடுத்த காரணத்தினால், பாண்டியர்களது சின்னம் மீனாக அமைந்ததாகச் சொல்கிறார்கள்.
🙏
கொத்தவரை அல்லது சீனி அவரை (தாவர வகைப்பாடு : Cyamopsis tetragonoloba ; ஆங்கிலம்:Guar / cluster bean) என்பது உணவாகப் பயன்படும் காய்களைக் கொண்ட தாவரம் ஆகும்.
உயிரியல்
கொத்தவரை செடி வகையைச் சேர்ந்தது. 3 முதல் 4 அடி உயரம் வளரக்கூடியது. கொத்தவரை மண்ணில் நைட்ரசன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது.
தேவையான காலநிலை
மிதமான சூரிய ஒளியும், அதே நேரத்தில் மண்ணில் ஈரப்பதமான காலநிலையும் தேவை.
தேவையான மண்வளம்
கொத்தவரை பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும் தன்மையுடையது.
இது வடமேற்கு இந்தியாவிலும்
பாக்கித்தானிலும் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது.
இதற்காக பக்தர்கள் அருகிலுள்ள மீமிசல் கடலில் குளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளித்து ஈரத்துடன் கல்யாணராமர் சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகிறது.
மலையை வலம் வர... வாழ்வில் வளம் பெற... கிரிவலம் செல்வோம்... சித்ரா பௌர்ணமியில்!!
கிரிவலம் என்றால் என்ன?
கிரிவலம் என்றால், மலையைப் பிரதட்சிணம் செய்து வருவது. அதாவது கிரி என்றால் மலை, வலம் என்றால் மெதுவாக மலையை சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருவதாகும்.
ஆவணியாபுரம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.....
லட்சுமி நரசிம்மர் திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்....
1
ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.
2
தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்குப்பின் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர்!
சித்திரைத் திருவிழா மதுரையில் களைகட்டியுள்ளது. வைகையில் இறங்க மதுரைக்கு வரும் கள்ளழகர் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
மே 5ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்க உள்ளதை முன்னிட்டு ஆயிரம் பொன் சப்பரம் அற்புதமாகத் தயாராகி உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று, அகிலம் புரக்கும் அங்கயற்கண்ணியாம் மீனாட்சி அம்மைக்குப் பட்டாபிஷேக வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மே 2 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. மே 3 ஆம் தேதி இன்று திருத்தேரோட்டம் .
தண்டுக்கீரை (Amaranthus tricolor) கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். செழிப்பான பகுதிகளில் ஓர் ஆள் உயரம் வரை வளரக் கூடியது. தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது.
ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும். முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது.
தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம்.