" ஆரியம் என்ற கலாச்சாரம் உழைப்புக்கு மதிப்பளிக்காது. உழைப்பாளிகளிடம் ஆசை காட்டியோ, அச்சமூட்டியோ பொருளைப் பறித்துச் சுகப்படுவதற்காக உள்ள ஒருமுறை!
இந்த முறை பெரும்பாலானவர்களின் உழைப்பைக் கொண்டு, ஒரு சிறு கூட்டம் வாழ்வதாக
அமைகிறது.
இந்தச் சுரண்டும் கூட்டம் ஒவ்வொரு காலத்தில் - ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமான பெயருடன் விளங்கும்.
கிரீசில் மாஸ்டர் (எஜமான்) என்றும், ரோமில் பெட்ரீஷியன் எனவும், பிரிட்டனில் பிரபுக்கள், பிரான்சில் ஐஸ்வர்யவான்கள், ஜப்பானில் சமுராய் என்று இவ்வண்ணம் பெயர்கள் இருந்தன.
இங்கு அதே முறையைத்தான் நாம் ஆரியம் என்று சுட்டிக்காட்டுகிறோமேயன்றி, வீண்வேலை செய்கிறோம் என்றோ, விஷமூட்டுகிறோம் என்றோ யாரும் கருத வேண்டாம்.
உலகின் முதல் வல்லரசு, பணக்கார நாடு, உலகை தனக்குகீழ் வைத்துள்ள நாடு, பெரிய பயங்கரவாதி, என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம், பிரின்சிடோஸ் பல்கலைக்கழகம், ஏல் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம்,
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் ஒடுக்கப்பட்ட இனமான கருப்பர்கள், ஹிஸ்பானிக்ஸ், செவ்விந்தியர்கள்(பூர்வகுடிகள்) மற்றும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த
இடஒதுக்கீடுகள் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி அல்லாமல், பல்கலைக்கழகங்களே தாமாகவே முன்வந்து வழங்குவது தான் சிறப்பிலும் சிறப்பு.
நம்மூர் நிலை என்ன..?
உயர் கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போயிடும், திறமை அழிஞ்சிடும், கல்வியின் தரம் கெட்டுடும்ன்னு சொல்லி சொல்லியே நம்மை
#புத்தர் பார்ப்பனியத்தை வீழ்த்த இயக்கம் கட்டினார்,
புத்தருக்கு பிறகு "பார்ப்பனிய எதிர்ப்பு" சிந்தனை கொண்ட அனைவரும் இயக்கமாக திரண்டு போராடாமல், பாடல்கள் மூலமாகவும், எழுத்துக்கள் மூலமாகவும் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்தனர்.
ஆக, புத்தருக்கு பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த ஓர்
இயக்கம் இந்த 2000 வருடங்களாக இல்லாமல் போனது.
2000 வருடத்திற்கு பிறகு, அதே வரலாற்றுத் தொடர்ச்சி என்பது #பெரியார் அவர்களால் நம்மண்ணில் நிகழ்ந்தது.
புத்தர் கட்டிய #பெளத்தம் என்ற இயக்கமென்பது, புத்தரின் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகளில் #நாகார்ஜுனன் என்ற பார்ப்பனரின் ஊடுருவலால்,
மகாயானம், ஹீனயானம் என இரண்டாக சிதைக்கப்பட்டு, கடைசியில் ஓர் போராட்ட இயக்கமாக இல்லாமல், "பக்திமார்க்கமாக" பார்ப்பன கூட்டத்தால் மாற்றப்பட்டது.
இந்த வரலாற்றை எல்லாம் கணக்கில் கொண்ட பெரியார்,
பார்ப்பனியத்தை எதிர்த்து கட்டப்போகும் இயக்கத்திற்குள் பார்ப்பனர்கள் ஊடுருவாமல் செய்ய
அண்ணாவுடன் 27 ஆண்டுகள் பழகும் வாய்ப்புப் பெற்றவர் "கவிஞர் கருணானந்தம்". பெரியாரின் முழு முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவர், "அண்ணா சில நினைவலைகள்" என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அந்த நூலில் உள்ள முக்கியமான சம்பவம் இங்கே:
அண்ணா முதல்
அமைச்சராகி சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா வீட்டு மாடியில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன், “அண்ணா, ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டுவிட்டீர்களா என்று. கருணாநிதியும் வர
வேண்டுமாம். நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்துகிறார்” என்றார்.
“சரி வாங்க, இப்போது புறப்படாவிட்டால் அவரே நேரில் வந்துவிடுவார். நீயும் வாய்யா” என்றார் என்னைப் பார்த்து. நான் வரலைண்ணா அவர் எனக்கு அறிமுகமே கிடையாது என்றேன்.
“பரவாயில்லை. என்னோடு வா நிச்சயம் பிரியாணியாவது இருக்கும்”
"கொரோனா" பேரழிவு காலம் தொடங்கி இன்று வரை, வட இந்தியாவையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு, "தமிழ்நாடு" எல்லா வகையிலும் முன்னேற்றம் கண்டுள்ளதற்கு "கலைஞர்"தான் முக்கிய காரணம் என கட்சி சார்பற்று பலரும் பதிவிட்டனர்.
இது ஒரு வகையில் மகிழ்ச்சியே, ஆயினும் அவர் உயிருடன் இருந்த காலத்தில்
செய்யாத தவறுக்கும் பல சில்லறைகள் அவர் மீது வன்மத்துடன் கல்லெறிந்தன, இப்போதும் எறிகின்றன. அதேப் போல அவர் செய்த எந்த ஒரு நற்செயலுக்கும் அதற்குரிய அங்கிகாரம் பெற்றவர் இல்லை. இப்படிபட்ட வன்மத்திற்கு பின்னுள்ள உளவியல் மிக எளிமையானது. எல்லோருக்கும் அது தெரிந்ததுதான். எனவே அதை கடந்து
செல்லலாம். ஆனால், இயற்கை பாரபட்சமற்றது. அவ்வியற்கைதான் இன்று #கலைஞர் என்ற மாமனிதனின் தொலைநோக்கு பார்வையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. பல்லாயிரம் குரல்களால் விளக்க முடியாததை சிறு சிறு செயல்களால் விளக்கி செல்கிறது.
"கியூபா"வின் விடிவெள்ளி "பிடல் காஸ்ட்ரோ" சொன்னது தான் நினைவுக்கு
#காந்தியார் படுகொலையும் பார்ப்பனர்களுக்கு எதிரான மக்கள் கோபமும்..!
காந்தியார் படுகொலையை தொடர்ந்து மக்களின் கோபம் இந்துத்துவ அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை இயக்கங்களின் மீது திரும்பியது. அதிலும் மகாராஷ்டிராவில் இருந்த "பார்ப்பனர்கள்" மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
காந்தியை கொன்றது சித்பவன் பார்ப்பனரான "கோட்சே" என்பதால் மகாராஷ்டிராவில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பூனா, சத்தாரா, சாங்கிலி போன்ற பகுதிகளில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் அவர்களில் சிலரது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. காந்தியை கோட்சே கொலை செய்து விட்டான் என்கிற செய்தி
மின்னல் வேகத்தில் நகரம் எங்கும் பரவியது. கொலைகாரனின் பெயர் பூனாவில் பரவத் துவங்கியதும் மக்கள் கொதிப்படைந்த நிலையில் இருந்தனர் கோட்சேவின் வீட்டையும் பத்திரிகை அலுவலகத்தை சுற்றி ஜனவரி 31ஆம் தேதி மக்கள் கூடினார். வீடு பத்திரிகை அலுவலகம் மீது கற்கள் வீசப்பட்டன காவல்துறையால் இரண்டும்