பிறவித் துயர் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் - விழுப்புரம்
விழுப்புரத்திற்கு அருகே உள்ள பிரம்மதேசம் என்ற திருத்தலத்தில் ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
பிரம்மதேவன் வழிபட்டதால் இத்தலம் ‘பிரம்மதேசம்’ என்றும், இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், விஜயநகர மன்னர்கள் என பலரும் போற்றி வணங்கிய திருத்தலம் இந்த பிரம்மதேசம்.
வேதம் கற்றுத் தெளிந்தவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்பட்ட ஊர் இது என்று கூறப்படுகிறது.
இங்கு பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என்ற இரண்டு சிவாலயங்கள் இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
பிரம்மதேசம் ஊரின் மையப்பகுதியில் பாதாளீஸ்வரர் ஆலயமும், ஊரின் வடக்கு திசையில் ஏரிக் கரையின் அருகில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன.
இதில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையில் வீற்றிருக்கும் விநாயகரின் திருநாமம் ‘தேரடி விநாயகர்’ என்பதாகும்.
இறைவனின் கருவறையானது, கிழக்கு நோக்கி சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையின் உள்ளே வட்ட வடிவிலான ஆவுடையாரோடு, உயரமான பாணலிங்கத் திருமேனி கொண்டு பிரம்மபுரீஸ்வரர் அருட்காட்சி தருகிறார்.
முகப்பு மண்டபத்தின் வடக்கில், தெற்கு நோக்கி அமைந்துள்ள சன்னிதியில் அன்னை பெரியநாயகி என்ற திருநாமத்தோடு, பெயருக்கேற்றாற்போல் பெரிய திருவுருவத்தோடு நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
அன்னையின் மேல் வலது கரத்தில் அல்லி மலரும், மேல் இடது கரத்தில் தாமரையும் தாங்கியிருக்கிறார்.
கீழ் வலது கரத்தில் அபய முத்திரையோடும், கீழ் இடது கரத்தில் வரத முத்திரையோடும் அழகுற ஆனந்த தரிசனம் தருகின்றாள்.
தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மன் அருள்கின்றனர்.
மேலும் பிரகாரத்தில் விநாயகர்,
நின்ற கோல விநாயகர்,
வள்ளி - தெய்வானையோடு வஜ்ஜிரப்படை மற்றும் சக்திப்படை ஏந்திய முருகப்பெருமான்,
துர்க்கையம்மன்,
காலபைரவர் ஆகியோரது சன்னிதிகளும்,
வடதிசையில் சண்டிகேஸ்வரர், அருகில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றனர்.
இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சிறந்த குரு பரி காரத் தலமாக விளங்குகிறது.
குரு பகவானுக்குரிய அதிதேவதை பிரம்மதேவன்.
எனவே இத்தலத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும்.
மேலும் திங்கட்கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்ம நட்சத்திர நாட்களில் பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரரை வணங்குவது பலன்கள் பலவற்றை தரும்.
மேலும் முற்பிறவி மற்றும் இப்பிறவி பாவங்களைப் போக்கும் தலமாகவும் இது திகழ்கிறது.
இங்கு மாசி மகம், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும். மாசி மகத்தன்று, இத்தலத்திற்கு வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மனேரி சாஸ்தா ஆலயத்திற்குச் சென்று தீர்த்தவாரி நடைபெறும்.
இந்த ஆலயம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பூஜை செய்பவர்கள் என்று யாரும் நியமிக்கப்படவில்லை.
இருப்பினும் கிராமத்தில் உள்ள ஒருவர் பூஜை செய்கிறார்.
*(04 - 05 - 2023 - சித்திரை 21 முதல் 29 - 05 - 2023 வைகாசி 15 வரை)*
*அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடியவை / செய்யக் கூடாதவை*
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும்
04 - 05 - 2023 முதல் தொடங்க உள்ளது.
வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் காலம் காலமாக இருந்து வருகிறது.
முன்னொரு காலத்தில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், அப்போது குளிர்சாதனம், மின்விசிறி போன்ற வசதிகள் இல்லாததாலும், அந்த நேரத்தில் சுபகாரியங்களை நடத்தினால்,
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம்,
மஹாருத்ர ஹோமம்,
ஸ்ரீ நடராஜர் மஹாபிஷேகம்
அதிருத்ர ஜப பாராயணம் :
01.05.2023 முதல் 10.05.2023 வரை, காலை 07.30 மணி முதல்.
121 தீக்ஷிதர்கள் 11 முறை ஸ்ரீ ருத்ர மந்திர ஜப பாராயணம்.
மேற்கண்ட பத்து தினங்களில் 14,641 முறை ஸ்ரீ ருத்ர மந்திரங்கள் பாராயணம் செய்யப்படும்.
இடம் : கிழக்கு கோபுர வாயில் வழியாக வந்து இருபத்தியொரு படி வாசல் கடந்தால் வரும் பிரகாரத்தின் வலது கடைக்கோடியில் இருக்கும் கொலு மண்டபம்.
மஹா ருத்ர ஹோமம் :
11.05.2023, காலை 09.00 மணி முதல் – விசேஷ பூஜைகள், தொடர்ந்து மதியம் மஹா ருத்ர ஹோமம், கோ (பசு மாடு) பூஜை, அஸ்வ (குதிரை) பூஜை, கஜ (யானை) பூஜை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் நடைபெறும்.
இடம் : கிழக்கு கோபுரத்திற்கு அடுத்திருக்கும் நடனபந்தல் மண்டபம்.