ஆவணியாபுரம்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.....

லட்சுமி நரசிம்மர் திருமண தடை நீக்கும் நவ நரசிம்மர்....

1 Image
ஆரணியிலிருந்து 15 கி.மீ, வந்தவாசியிலிருந்து 30 கி.மீ , சேத்துப்பட்டிலிருந்து 15 கி.மீ, செய்யாறிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

2
தட்சிண சிம்மாசலம் என்றும் தட்சிண அகோபிலம் என்றும் சொல்லப்படும் இந்த நவநரசிம்ம ஸ்தலம் சிறிய மலைமேல் உள்ளது. சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணி நாராயணபுரம் என்றும் பின்னர் மருவி ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

3
சிறிய பர்வதம். மலை சிங்கத்தைப் போன்று கம்பீரமாக இருக்கின்றது. மலை ஏறும் வழியில் நிறைய குரங்குகள் இருக்கின்றன.

4
ஆவணியாபுரம் பஞ்ச திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி, திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

5
சன்னதிகள் மலையின் இருநிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், 
ஸ்ரீ வெங்கடாஜலபதியும்,
ஸ்ரீ வரதராஜ பெருமாளும்,
ஸ்ரீ யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழே குகை போன்ற கர்ப்பக்ருஹத்தில்
ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

6
அவரது இடதுபுறம் எழுந்தருளி உள்ள தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவர் நின்ற திருக்கோலத்தில் சிம்ம முகத்துடன் சேவை சாதிக்கிறார். சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது.

7
நவநரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர்.
லட்சுமி நரசிம்மர் கர்ப்பக்ருஹத்தில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும், 

8
மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் என்று நவ நரசிம்மராக சேவை சாதிக்கிறார். கீழ்மலையில் உள்ள சன்னதியின் மேற்கு திசையில், வில் ஏந்திய நிலையில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

9
கீழ்மலையில், லட்சுமி நரசிம்மர் சன்னதியும், அலர்மேல்மங்கை தாயாருக்கு தனி சன்னதியும், தாயார் சன்னதி அருகே பஞ்சநரசிம்மர் சன்னதியும், அழகிய கண்ணாடி அறையில் உற்சவ மூர்த்திகளும் காட்சியளிக்கின்றனர்.

10
மேல் மலையில், வெங்கடாசலபதி பெருமாளுக்கு தனி சன்னதியும், ரங்கநாதர், வரதராஜர், யோக நரசிம்மர்,  அமிர்தவல்லி தாயார் சன்னதியும் உள்ளது.

11
பக்தர்கள், திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் நவநரசிம்மரை வழிபட்டுப் பிரார்த்திக்கின்றனர். அவ்வாறு குழந்தைப்பேறு பெற்ற பக்தர்கள் துலாபாரம் செலுத்துகின்றனர்.

12
பக்தர்கள் தங்களின் நிலத்தில் பயிரிட்ட தானியங்களின் முதல் அறுவடையினை லட்சுமி நரசிம்மருக்கு நேர்த்திக் கடனாக சமர்ப்பிக்கின்றனர். இப்பெருமாளின் சன்னதியில் நெய்தீபமேற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை.  

13
உற்சவங்கள்/ திருவிழா:

திருக்கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம், மாதந்தோறும் சுவாதி நட்சத்திர தினத்தில் ஊஞ்சல் உற்சவம், நரசிம்ம ஜெயந்தி, விசேஷ திருமஞ்சனங்கள், வைகுண்ட ஏகாதசி

14
பேருந்து:

சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, வந்தவாசி முதலிய  இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 🙏

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

May 6
அஹோபிலம்...

ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று   கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய்  எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி .

1 Image
அஹோபிலம் என்ற இந்த  திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில்  கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.

2
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள  அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது  நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

3
Read 32 tweets
May 5
*"மன நிம்மதி மன நிறைவு"...!*

கடவுள் வந்தார்.!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும்,
பெரிய தொழிலும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான் உலகில் சிறந்தோங்கி
பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்
மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..!
உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
Read 12 tweets
May 5
சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தன் எனப் படும் சித்ரபுத்திரன் போற்றப்படுகிறார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் இவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. இங்கு சித்ரா பௌர்ணமியன்று இவருக்கும் இவர் மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக- ஆராதனைகளுடன் திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. Image
சித்ரகுப்தருக்கு தனிக் கோயில்!
தேனி மாவட்டம், தேனி- போடிநாயக்கனூர் சாலையில் தேனியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் ‘தீர்த்தத் தொட்டி’ எனும் இடத்திலும் சித்ரகுப்தனுக்கு ஒரு கோயில் உள்ளது.
இதன் முன் மண்டபத்தில் விநாயகப் பெருமான் அருள் புரிகிறார். வலப் புறம் உள்ள கருவறையில் சித்ரகுப்தனும் இடப் புறக் கருவறையில் சீலக்காரியம்மனும் அருள் புரிகின்றனர். இந்த இரு கருவறைகளுக்கும் தனித் தனி விமானங்கள் உள்ளன.
Read 9 tweets
May 5
#பாகற்காய் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் 
குறிக்கிறது. Image
இக்கொடி வெள்ளரிக்காய், 
பூசணிக்காய், தர்ப்பூசணி 
முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய 
குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் பண்படுத்தாத
(rouch) செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது.
இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-
சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.
Read 12 tweets
May 5
எது சின்ன பாவம்?
எது பெரிய பாவம்?
ஒரு ஞானியிடம் இரண்டு பேர்  வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்.

நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதையே நினைத்து துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா ?
அடுத்தவன்  ஞானியிடம் சொன்னான் "நான் இவ்வளவு பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை.  சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுகள் இப்படி நிறைய செய்துள்ளேன்.  தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?"
Read 8 tweets
May 5
#நிலக்கடலை

நிலக்கடலை (peanut) (வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் 
கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். Image
இதை சுருக்கமாக கடலை என்று அழைக்கப்படுகிறது. இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
இதன் தரப்படுதப் பட்ட பெயர்களாக வேர்க்கடலை, நிலக்கடலை ,மணிலாக்கடலை, கடலைக்காய் (கலக்கா), மணிலாக்கொட்டை (மலாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. இதற்க்கு கச்சான் என்ற பெயர் இலங்கை,தமிழரிடம் பரவலாக காணப்படுகிறது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(