சிவா என்றால், சிவனையும், அஜலம் என்றால் மலையையும், பதி என்றால் முருகன் என்றும் பொருள் சொல்லப்படுகிறது.
1
18 சித்தர்களில் சிறப்பு வாய்ந்தவரான, சிவவாக்கிய சித்தர், தவமிருந்தபோது, வள்ளியம்மையுடன் காட்சியளித்து, முருகன் உபதேஷம் அளித்ததால், சிவமலை என பெயர் பெற்றது; நாளடைவில் சிவன்மலை என மருவியுள்ளது.
2
சிவன் மலை மீது உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே அங்கு வைக்கப்பட்டிருக்கும் ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ தான்.
3
அந்தப் பெட்டியில் என்ன பொருள் வைக்க வேண்டும் என்பதை முருகப் பெருமானே, பக்தர்களின் கனவில் வந்து கூறுவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
4
முருகன். அறிவு, வீரம், சரணாகதி போன்ற அனைத்து நிலைகளுக்கும் மொத்தத்தில் தமிழுக்கே முருகன் சொந்தம். ‘விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் – மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா’ என்கிறார் அருணகிரிநாதர்.
5
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
6
மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.
7
சிவன்மலை சுப்ரமணிய சுவாமி. மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
8
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.
9
அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார். இந்த வரலாறு ’சிவமலைக் குறவஞ்சிப் பாடலில்’ கூட குறிப்பிடப்படுகின்றது.
அந்த மேரை ஈசன் திரிபுர சம்ஹாரம் செய்ய வளைக்குங்
காலை முந்து கொடுமுடியுள்
ஒன்று சிந்தி இங்கு வந்த சிவமலை இம்மலையே!’
10
சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன.
11
மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
12
சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.
13
திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.
14
நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.
15
மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே.மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே. நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும்.
16
திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.🙏
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோவில்* வள்ளிமலை,
வேலூர் மாவட்டம்.
வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந் துள்ளது.
1
இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானை யுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கர ராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளார்.
2
முக்குடைக் குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப் படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வ மாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர்.
மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும்.
இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.
மஞ்சள், அரிணம் அல்லது பீதம்
(Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி.
இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள்.
இதனை தமிழர் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.
*சேலம் அரியானூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1008 சிவலிங்கம் கோவில்*
அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது.
1
இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக் கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம்.
2
கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது. இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.
நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது.அந்த சக்தியை நாம் மனக்கண்ணால் தான் உணர முடியுமே தவிர புறக்கண்ணால் காண இயலாது என்பதை உணர்த்தும் அற்புதமான ஆன்மீக கதை.
நாத்திகன் ஒருவன் அரசனாக இருந்தான். மக்களும் கடவுளை வணங்குவதை அவன் விரும்பவில்லை.
அரசவையைக் கூட்டினான்.
""அமைச்சரே! கடவுள் என்பவர் யார்? பத்து நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லா விட்டால் நாட்டில் யாரும் கடவுளை வணங்கக்கூடாது,''
என்று உத்தர விட்டான்.
அமைச்சர் அறிஞர்களை அழைத்தார்.
மன்னனுக்கு கடவுள் குறித்து விளக்கம் தர வேண்டினார்.
ஆனால், நாத்திகம் பேசும் மன்னன் முன் தங்களின் பேச்சு எடுபடாது என்று அவர்கள் பின்வாங்கினர்.