1834 ஆம் ஆண்டு. இந்தியாவில் கல்வி முறையைச் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரிட்டிஷ் மன்னரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் தான் சிறந்த கல்வியாளரும், பாராளுமன்ற வாதியுமான 'தாமஸ் பாபிங்டன் மெக்காலே'. அவர் மூன்று
சீர்திருத்தங்களை முன்மொழிந்தார்.
1)அனைத்துச் சாதியினர், மகளிர் உட்பட அனைவருக்கும் கல்வி
2)அதுவரை பயிற்று மொழியாக இருந்த சமஸ்கிருதம், அரேபிய மொழிகளுக்கு மாற்றாக ஆங்கிலமே பயிற்று மொழி.
3)வேதம், சாஸ்திரங்களுக்கு மாற்றாகக் கணிதம், அறிவியல், பூகோளம் பாடங்களைக் கற்பித்தல்.
1835
ஆம் ஆண்டில் மெக்காலே இப்படி அறிவித்தவுடன், இந்தியாவின் வைதீகக் சக்திகள் அனைத்தும் மெக்காலேவை வெட்டி வீழ்த்தக் கிளம்பின. தற்போது "தமிழ்நாடு முதல்வரைக்" காய்ச்சி எடுப்பது போல் அன்று "மெக்காலே" மீது சாபத்தை அள்ளித் தெளித்தனர். கொஞ்சமும் அசரவில்லை மெக்காலே. அனைத்திற்கும் பொறுமையாகப்
பதில் சொன்னார்.
"சாதி வேறுபாடுகளால் புரையோடிப் போன, பாரபட்சமான அணுகுமுறைகளால் இந்தியா ஏற்கனவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தின் மழலையர் பள்ளிப் பாடங்களில் இருக்கும் வரலாறும், அறிவியலும் கூட இந்தியாவின் சமஸ்கிருத, அரேபிய மொழி இலக்கியங்களில் இல்லை. எனவே
அவற்றை நீக்கி ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக்கினால் தான் இந்தியாவை இந்தியர்களே ஆளும் தகுதியைப் பெறுவார்கள்" என்றார் மெக்காலே.
இதற்காக ஆங்கிலேயராய்ப் பிறந்த யாருமே எதிர்கொள்ளாத அத்தனை எதிர்ப்புகளையும் மெக்காலே எதிர்கொண்டார். அவர் அழிய வேண்டும் என்று சனாதனிகள் எழுப்பிய 'யாகக்
குண்டங்களின் புகை' இந்தியாவைச் சூழ்ந்து மூச்சு முட்டச் செய்தது.
இறுதியில் இங்கிலாந்துப் பேரரசு மன்னரின் ஆணையோடு கல்விச் சீர்திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் மெக்காலே. அந்நிய மொழிகளான சமஸ்கிருதமும், அரேபியமும் இந்தியக் கல்வி முறையை விட்டு நீங்கின.
வரலாற்றில் சாதி
மதங்களுக்கு எதிரான சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தியவர்கள் தான் அதிகமான எதிர்ப்புகளைக் கண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். சனாதனிகளால் அதிகம் வெறுக்கப்பட்ட அவர்கள்தான் மாபெரும் தலைவர்களாகப் போற்றப் பட்டும் வருகிறார்கள்.
மெக்காலே வரிசையில்தான் மகாத்மா ஜோதிராவ் ஃபுலே,
பண்டிதர் அயோத்திதாசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா ஆகியோரை வைத்துப் பார்க்க முடியும். அந்த வகையில் "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" அவர்களுக்கு சனாதனிகளால் எழும் எதிர்ப்புதான் வரலாற்றில் அவரை நிலைநிறுத்தும்.
" ஆரியம் என்ற கலாச்சாரம் உழைப்புக்கு மதிப்பளிக்காது. உழைப்பாளிகளிடம் ஆசை காட்டியோ, அச்சமூட்டியோ பொருளைப் பறித்துச் சுகப்படுவதற்காக உள்ள ஒருமுறை!
இந்த முறை பெரும்பாலானவர்களின் உழைப்பைக் கொண்டு, ஒரு சிறு கூட்டம் வாழ்வதாக
அமைகிறது.
இந்தச் சுரண்டும் கூட்டம் ஒவ்வொரு காலத்தில் - ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமான பெயருடன் விளங்கும்.
கிரீசில் மாஸ்டர் (எஜமான்) என்றும், ரோமில் பெட்ரீஷியன் எனவும், பிரிட்டனில் பிரபுக்கள், பிரான்சில் ஐஸ்வர்யவான்கள், ஜப்பானில் சமுராய் என்று இவ்வண்ணம் பெயர்கள் இருந்தன.
இங்கு அதே முறையைத்தான் நாம் ஆரியம் என்று சுட்டிக்காட்டுகிறோமேயன்றி, வீண்வேலை செய்கிறோம் என்றோ, விஷமூட்டுகிறோம் என்றோ யாரும் கருத வேண்டாம்.
உலகின் முதல் வல்லரசு, பணக்கார நாடு, உலகை தனக்குகீழ் வைத்துள்ள நாடு, பெரிய பயங்கரவாதி, என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக் கழகம், பிரின்சிடோஸ் பல்கலைக்கழகம், ஏல் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம்,
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் ஒடுக்கப்பட்ட இனமான கருப்பர்கள், ஹிஸ்பானிக்ஸ், செவ்விந்தியர்கள்(பூர்வகுடிகள்) மற்றும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த
இடஒதுக்கீடுகள் சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி அல்லாமல், பல்கலைக்கழகங்களே தாமாகவே முன்வந்து வழங்குவது தான் சிறப்பிலும் சிறப்பு.
நம்மூர் நிலை என்ன..?
உயர் கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி போயிடும், திறமை அழிஞ்சிடும், கல்வியின் தரம் கெட்டுடும்ன்னு சொல்லி சொல்லியே நம்மை
#புத்தர் பார்ப்பனியத்தை வீழ்த்த இயக்கம் கட்டினார்,
புத்தருக்கு பிறகு "பார்ப்பனிய எதிர்ப்பு" சிந்தனை கொண்ட அனைவரும் இயக்கமாக திரண்டு போராடாமல், பாடல்கள் மூலமாகவும், எழுத்துக்கள் மூலமாகவும் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்தனர்.
ஆக, புத்தருக்கு பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த ஓர்
இயக்கம் இந்த 2000 வருடங்களாக இல்லாமல் போனது.
2000 வருடத்திற்கு பிறகு, அதே வரலாற்றுத் தொடர்ச்சி என்பது #பெரியார் அவர்களால் நம்மண்ணில் நிகழ்ந்தது.
புத்தர் கட்டிய #பெளத்தம் என்ற இயக்கமென்பது, புத்தரின் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகளில் #நாகார்ஜுனன் என்ற பார்ப்பனரின் ஊடுருவலால்,
மகாயானம், ஹீனயானம் என இரண்டாக சிதைக்கப்பட்டு, கடைசியில் ஓர் போராட்ட இயக்கமாக இல்லாமல், "பக்திமார்க்கமாக" பார்ப்பன கூட்டத்தால் மாற்றப்பட்டது.
இந்த வரலாற்றை எல்லாம் கணக்கில் கொண்ட பெரியார்,
பார்ப்பனியத்தை எதிர்த்து கட்டப்போகும் இயக்கத்திற்குள் பார்ப்பனர்கள் ஊடுருவாமல் செய்ய
அண்ணாவுடன் 27 ஆண்டுகள் பழகும் வாய்ப்புப் பெற்றவர் "கவிஞர் கருணானந்தம்". பெரியாரின் முழு முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவர், "அண்ணா சில நினைவலைகள்" என்ற நூலையும் எழுதியிருக்கிறார். அந்த நூலில் உள்ள முக்கியமான சம்பவம் இங்கே:
அண்ணா முதல்
அமைச்சராகி சில நாட்களுக்குப் பின் ஒருநாள் இரவு 9 மணியிருக்கும். அண்ணா வீட்டு மாடியில் நானும் இருக்கிறேன். தொலைபேசி அழைப்பு. நேர்முக உதவியாளர் நண்பர் கஜேந்திரன், “அண்ணா, ஆதித்தனார் கேட்கிறார், நீங்கள் அவர் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டுவிட்டீர்களா என்று. கருணாநிதியும் வர
வேண்டுமாம். நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்துகிறார்” என்றார்.
“சரி வாங்க, இப்போது புறப்படாவிட்டால் அவரே நேரில் வந்துவிடுவார். நீயும் வாய்யா” என்றார் என்னைப் பார்த்து. நான் வரலைண்ணா அவர் எனக்கு அறிமுகமே கிடையாது என்றேன்.
“பரவாயில்லை. என்னோடு வா நிச்சயம் பிரியாணியாவது இருக்கும்”