அவர்களுக்கு வலது புறம் அனுக்ஞை விநாயகர் அருள்பாலிக்கிறார்.
கருவறையில் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர், ஒரு முறை மருங்கபள்ளம் கிராமத்திற்கு வந்தார்.
அப்போது அவருக்கு அருகே இருந்த ஒரு ஆலயம் பற்றியும், அங்கு அருள்பாலிக்கும் இறைவனின் சக்தி பற்றியும், ஆலயத்தைச் சுற்றி விளைந்து கிடந்த பச்சிலைகள் பற்றியும் சொல்லப்பட்டது.
தீராத வியாதியால் தவித்து வந்த மன்னர் ஆலய திருக்குளத்தில் நீராடி மருந்தீஸ்வரரையும், பெரியநாயகியையும் ஆராதித்து வணங்கி வந்தார்.
அத்துடன் அங்கு இருந்த சித்த வைத்தியர் ஆலோசனைப்படி பச்சிலைகளையும் உட்கொண்டு வந்தார்.
மன்னரின் நோய் படிப்படியாக குணமாகி சில நாட்களில் முற்றிலும் குணமடைந்தார்.
மனம் மகிழ்ந்த மன்னர், தற்போது மருங்கப்பள்ளம் பகுதியை ஆலயத்திற்குத் தானமாக வழங்கினார்.
அது வரை ‘மருந்து பள்ளம்’ என்று இருந்த, அந்த ஊர் பெயர் மருவி தற்போது ‘மருங்கப்பள்ளம்’ என்று அழைக்கப்படுகிறது.
தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
திருச்சுற்றில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் மேற்கிலும், கிழக்கில் சனி பகவான், பைரவர், லட்சுமி நாராயணன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
இங்கு சனி பகவானுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து,
அவர்கள் பரி பூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கபள்ளம்.
திருவாரூர் & தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லைப்புற கிராமம், எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி போன்ற சிறப்புகளுடன் உள்ளது வடுவூர்.
மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?
பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார்.
வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.
இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு,
ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம்.