*சேலம் அரியானூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1008 சிவலிங்கம் கோவில்*
அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது.
1
இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக் கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம்.
2
கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது. இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது.
3
இக்கோயிலின் மூலக்கடவுளான ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை, இம்மலைக் குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை காண்பதற்காகவே, மலையேற்றத்தையும் பொருட்படுத்தாது ஏறிப் போய் தரிசித்து வரலாம்.
4
ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆயிரக் கணக்கான கோயில் நிறைந்திருந்தாலும், பல்வேறு காரணங்களை உத்தேசித்து, நவீன பாணியில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பாணியில், தமிழகத்திலும் கூட பல நவீன கோயில்கள் கட்டப் பட்டுள்ளன.
5
அத்தகைய கோயில்களில் ஒன்று, சேலத்தில் உள்ள 1008 சிவலிங்கம் கோயில். சேலம் வினாயகா மிஷன் நிறுவனத்தால், அவர்களது நிறுவனத்தின் அருகிலேயே, ஒரு சிறிய குன்றின்மேல், சேலம்-சங்ககிரி சாலையில் அமைக்கப் பட்டுள்ளது, இந்தச் சிவலிங்கங்கள்.
6
1008 என்றால், நிஜமாகவே 1008! ஆவுடையோடு கூடிய சிவலிங்கங்கள்! எதிரே ஒரே மாதிரியான அளவில் 1008 நந்திகள். 1008 மண்டபங்கள். மலையின் அடிவாரத்தில் ஆரம்பித்து உச்சியில் முடியும் பொழுது 1008 வந்து விடுகிறது.
7
அடிவாரம் முதல் உச்சி வரை, சிவலிங்கங்களை தரிசித்தபடியே வாகனத்திலேயே பயணிக்கலாம்தான். இருந்தாலும், நேரம் இருந்தால், சிவனின் ஆயிரம் நாமாக்களை உச்சரித்தவண்ணம், ஒவ்வொரு சிவலிங்கத்தினையும் தரிசித்த வண்ணம் மேலே செல்லலாம்.
8
பின்னனியில் பச்சைப் பசேல் என்ற மலைகளும், சரிவுகளும் அழகும் அமைதியும் தரவல்லன.
9
1008 லிங்கங்கள் மட்டுமல்ல; ஐயப்பன் சன்னிதி, அறுபடைவீடுகளின் பிரதிகளாக மூர்த்தங்கள் (சிற்பங்கள்), ஆஞ்சனேயர், ராமர் பட்டாபிஷேக சிற்பங்கள், ராஜ ராஜேஸ்வரி, மஹாலக்ஷ்மி, பெருமாள் என கண்ணைக் கவரும் கோயில்கள் யாவும் வெகு சுத்தமாக, அற்புதமாக அமைத்தது மட்டுமல்லாமல்,
10
அதை அப்படியே நிர்வகித்தும் வருகிறார்கள். 1008 லிங்கங்களையும், பிரம்மாண்டமான மற்ற கோயில்களையும் பராமரிப்பது சாமாண்ய காரியமா என்ன? அதுவும் மலைச் சரிவில்! எல்லாவற்றிகும் உச்சமாக, உமையாம்பிகை சமேத, அருணாசல சுந்தரேஸ்வர் மூர்த்தமும் அழகும் பிரமிக்க வைக்கும் பேரழகு.
11
இந்த சிவலிங்கம் பதினேழு அடி உயரம். இந்த கோயில், உங்களை நிச்சயம் மலைக்கவைக்கும். 🙏
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருக்கோவில்* வள்ளிமலை,
வேலூர் மாவட்டம்.
வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந் துள்ளது.
1
இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானை யுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கர ராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளார்.
2
முக்குடைக் குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப் படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வ மாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர்.
மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும்.
இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.
மஞ்சள், அரிணம் அல்லது பீதம்
(Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி.
இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள்.
இதனை தமிழர் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.
நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது.அந்த சக்தியை நாம் மனக்கண்ணால் தான் உணர முடியுமே தவிர புறக்கண்ணால் காண இயலாது என்பதை உணர்த்தும் அற்புதமான ஆன்மீக கதை.
நாத்திகன் ஒருவன் அரசனாக இருந்தான். மக்களும் கடவுளை வணங்குவதை அவன் விரும்பவில்லை.
அரசவையைக் கூட்டினான்.
""அமைச்சரே! கடவுள் என்பவர் யார்? பத்து நாட்களுக்குள் எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லா விட்டால் நாட்டில் யாரும் கடவுளை வணங்கக்கூடாது,''
என்று உத்தர விட்டான்.
அமைச்சர் அறிஞர்களை அழைத்தார்.
மன்னனுக்கு கடவுள் குறித்து விளக்கம் தர வேண்டினார்.
ஆனால், நாத்திகம் பேசும் மன்னன் முன் தங்களின் பேச்சு எடுபடாது என்று அவர்கள் பின்வாங்கினர்.
இவ்வினம் ஆண்டுத் தாவரமாகவோ பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கலாம். இது 2 மீ உயரம் வரை வளர்கிறது. வெண்டைக் காய் பெருமளவு விதைகளைக்
கொண்டதாக நீண்டு காணப்படும். 10 - 20 சதம மீட்டர்கள் வரை நீள அகலங்களைக் கொண்டுள்ள இதன் இலைகள், அங்கை வடிவம் கொண்டவை.
5 - 7 வரையான நீட்சிகளோடு கூடியவை. இத் தாவரத்தின் பூக்கள் 4 - 8 சமீ விட்டங் கொண்டவை. வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு இடைப்பட்ட பல சாயல்களில் காணப்படும் இவற்றின் இதழ்களில் செந்நிறம் அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும்.
ஊட்டச்சத்துக்கள்
பாதியளவு வேக வைக்கப்பட்ட வெண்டையின் ஊட்டச்சத்துக்களின் விவரம் :