அன்பெழில் Profile picture
May 8 19 tweets 4 min read Twitter logo Read on Twitter
#பாகவத_புராணம்
கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் #வேதவியாசர் அருளிய பாகவத புராணம் என்ற உத்தம நூலில் நிறைந்துள்ளன. முன்னோர்களும், ரிஷிகளும், முனிவர்களும் எதிர் காலத்தில் நடக்க இருப்பதை முன் கூட்டியே அறிந்திருந்தனர்.

1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, Image
உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
[பாகவத புராணம் 12.2.1]

2. கலியுகத்தில் பொருட் செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல Image
பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
[பாகவத புராணம் 12.2.2]

3. சில ஆண்களும், பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில் துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும்
நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான்.
[பாகவத புராணம் 12.2.3]

கணவன், மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும், பெண்ணும் சமம் இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழி நடத்த வேண்டும்.
பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான். ஆணை மதிப்பதால் தான் ஒருத்தி பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்ம செயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்து கொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால் பகவானின்
முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! சர்வபூதேஷு சமஹ் - கீதை

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலி குருக்களை நம்பி வழி தவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள்
செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
[பாகவத புராணம் 12.2.4]

5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட் செல்வம் (பணம்) இல்லாதவனை தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும், அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என
எண்ணிக் கொள்வான்.
[பாகவத புராணம் 12.2.5]

6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும்
மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
[பாகவத புராணம் 12.2.6]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்து விடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
[பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற
கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். அரசின் அலட்சியப் போக்கினால் கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.9]

9. கடுங்குளிர், புயல்
கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன் பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.10]

10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் Image
50 ஆண்டுகளாக குறையும்.
[பாகவத புராணம் 12.2.11]

11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மறப்பார்கள்.
[பாகவத புராணம் 12.3.42]

12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய
பண்பை போற்றாமல் தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
[பாகவத புராணம் 12.3.41]

13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் Image
கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.38]

14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்து விட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்
நன்றிகடன் மறக்கப்படும்.
[பாகவத புராணம் 12.3.36]

15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர் வேதங்கள் கயவர்களால் தங்கள் சுய நல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப் பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்ல மெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை
உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.32]

கலியுகம் துன்பங்கள் நிறைந்தது, ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடை Image
போல் இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும் செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது. கலி
யுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்ய வேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர் கொள்ள வேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்பட வேண்டும். ஒரு போதும் கடவுளை மறவாமல் இருக்க
வேண்டும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 10
#MahaPeriyava
Author: SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Sri Maha Periyava was travelling around the Akanda Kaveri region. One day He went to the coconut groves near the camping Image
site. A number of crows were seen on the tops of the coconut trees. Periyava asked a boy who accompanied Him, "Shall I ask these crows to caw?"
The boy looked bewildered.

"Look here", Periyava said and started cawing like the crows. All the crows echoed His cry in a chorus.
Periyava said, "Now the crows are cawing. It indicates that there will be a large number of guests today. Ask them to prepare lots of food."

The shishyas (assistants) were apprehensive that the food-preparations might go wasted if they cooked a lot. But then, what a wonder! It
Read 5 tweets
May 10
#மகாபெரியவா உடம்பும் மனசும் தங்கமாக இருந்த ஒருவர் மதுரையில் ஹோட்டலில் சர்வர் உத்யோகம் பார்த்து வந்தார். மூன்று வேளை சாப்பாட்டுடன் தினசரி ஒரு ரூபாய் சம்பளம். இது 1960-களில். இவர் பணியாற்றிய ஹோட்டல், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. மீனாட்சியை தரிசனம் செய்து விட்டு Image
தான் வேலையைத் தொடங்குவார். சம்பளப் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வார். இவருக்கு, மீனாட்சியை மிக அருகில் பார்க்க வேண்டும் என்று ஆசை. எவ்வளவு அருகே நின்று தர்ம தரிசன சேவை கிடைக்குமோ அங்கே நின்று சேவிப்பார். 1963-ல் மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக Image
ஏற்பாடுகள் ஆரம்பமாயின. தன் சம்பளப் பணத்தை, கும்பாபிஷேக நிதிக்கு காணிக்கையாகக் கொடுத்து விட்டார். இவருக்கு இன்னொரு விருப்பமும் இருந்தது. அது, காஞ்சிப் பெரியவரைத் தரிசிப்பது என்கிற விருப்பம். மதுரையில் இருந்து காஞ்சிபுரத்துக்குப் போய் பெரியவரை தரிசித்து விட்டு வர காலமும் இடம்
Read 26 tweets
May 10
#மகாபெரியவா அருள்வாக்கு
நா காக்க
எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சு மயமாகவே மாறி விட்டது.
பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும். மேல் நாட்டில் கூட 'பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம்' Image
என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
பேசும் போது ஒரு வார்த்தை கூட அதிகமாகி விடாமல் கவனமாக இருக்க வேண்டும். 'கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு.
மௌனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மௌனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு
பேச்சை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேல் நிலைக்கு உயர்த்துவதாக மட்டுமே நம் பேச்சு இருக்க வேண்டும்.
பணத்தை மட்டும் தான் அளவாகச் செலவழிக்க வேண்டும்
Read 4 tweets
May 9
#மகாபெரியவா
சொன்னவர் ஸ்ரீமடம் பாலு

காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம். கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார். ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார். நான் பெரியவாளிடம் "நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா Image
போகாமல் இருக்கலாமா?" என்று கேட்டேன். அதற்கு பெரியவா, "இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை. மடத்தை நிர்வாகம் செய்கிறார். பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும். அது தான்முறை" என்று சொல்லி விட்டார். கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலில் இருந்து, தீர்த்தம், சால்வை, புடவை எல்லாம்
வந்தன. பெரியவா விபூதி பிரசாதத்தை இட்டுக்கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார். புடவையையும் மேலே போட்டுக் கொண்டார். என்னைப் பார்த்து, "என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது. நான் போகவில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும். போகலாமா?" என்று கேட்டார்
Read 8 tweets
May 9
#MahaPeriyava
Author: BrahmaSri Ramakrishna Dikshatar, SriMatham Vidvan, Kanchipuram
Source: Maha Periyaval Darisana Anubhavangal - Vol. 1
It is my remembrance that it was in the year 1965. When Sri Maha Periyava was camping in Tirupathi, he arranged for performing a Kalyana Image
Utsavam (for a fee of Rs.600/-). The Devasthanam people gave prasadam after the Utsava events were over. Srinivasa Perumal darshan was arranged for those who paid for the Kalyana Utsavam, outside the formality of the usual queue. Because of his devotion to Sri Periyava, the
Peshkar invited everyone who was with Sri Periyava, there were 15 people, for Perumal darshan.

"If a Kalyana Utsavam is done, to how many is the darshan permission given?"

"Six people", said the Peshkar.

"In that case, only six of us will come for this privileged darshan.
Read 7 tweets
May 9
#சுந்தரமூர்த்தி_நாயனார் சமயக்குரவர் நால்வரில் ஒருவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சுந்தர மூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். Image
இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவர் அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப் படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்க
முனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப் பருவம் அடைந்த போது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(