திருப்பாற்கடல் என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும்.
அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார்.
ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன.
இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும்.
திருச்சி திருவானைக்கோவிலில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் காவிரி கொள்ளிடக் கரையில் எழுந்தருளி உள்ளதே திருப்பாற்றுறை சிவத்தலமாகும்.
இறைவன் ஸ்ரீ ஆதி மூல நாதர்.
அம்பிகையின் திருநாமமோ
ஸ்ரீ மேகலாம்பிகை,
ஸ்ரீ நித்ய கல்யாணி என்பதாகும்.
திரு ஆனைக்காவிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் இடப்புறம் பனையபுரம் செல்லும் சாலை வழியாக சென்று அடையக் கூடியதே திருப்பாற்றுறை திருத்தலமாகும்.
ஆதியில் முதன் முதலாக தோன்றிய பாற்கடலில் சிவபெருமான் ஏக மூர்த்தியாக, ‘#ஒருவன்_என்னும்_ஒருவன்‘ என்ற நிலையில்
திருப்பாற்கடலில் சயன நிலையில் எந்த வாகனமும் இன்றி ஆதிசேஷனின் படுக்கையும் இன்றி பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் அற்புத திருக்கோலத்தை இன்றும் திருப்பாற்றுறை திருத்தலத்தில் தரிசித்திடலாம்.
இறைவன் சிருஷ்டியின்போது எதுவுமே தோன்றவில்லை என்றால் பாற்கடலில் உள்ள பால் மட்டும் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் தோன்றுவது இயற்கையே.
திருப்பாற்கடலில் உள்ள பால் நாம் அறிந்த பசுவிடம் இருந்து பெறும் பால் கிடையாது.
அது இறைவனின் உருவமே.
இறைவனின் சக்தியே.
அதற்கு உருவமோ வடிவமோ வண்ணமோ எதுவுமே கிடையாது.
ஆனால், சித்தர்கள், மகான்கள் போன்ற பேரருளாளர்கள் மக்கள் நற்கதியை அடையும் பொருட்டு பாற்கடலுக்கு ஒரு வடிவத்தை அளித்து மக்களின் தரிசனத்திற்காக அளித்துள்ளார்கள்.
மகான்களின் பல தெய்வீக திருப்பணிகளில் இதுவும் ஒன்று.
புதுமண தம்பதிகள் வணங்க வேண்டிய ஸ்ரீ திருவதன தட்சிணாமூர்த்தி :
ஆமூர் திருத்தல தட்சிணா மூர்த்தியை சித்தர்கள் ஸ்ரீ திருவதன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள்.
காலவ மகரிஷி சுவாமியின் திருவடிகளில் அமர்ந்து தொடர்ந்து தவமியற்றி,
தினமும் தன்னுடைய தவ சக்திகளை லட்சுமி தேவியாக திருவிடந்தை பெருமாளுக்கு மண முடித்து வைத்தார்
இவ்வாறு முதன் முதலில் திருவிடந்தை பெருமாள் திருமகளை திருமணம் புரிந்த போது,
லட்சுமியின் தந்தையான காலவ மகரிஷியின் ஆசியைப் பெறவும்,
இறைவனுக்கு நன்றி தெரிவிக்கவும்,
பெருமாள் தம்பதி சமேதராக ஆமூர் திருத்தலத்திற்கு எழுந்தருளினார்.
அப்போது ஸ்ரீ தட்சிணா மூர்த்தி திருமணத்திற்குப் பின் தம்பதிகள் ஒருவரையொருவர் எப்படி பார்த்து அன்புடன் புன்னகை புரிய வேண்டும் என்று தானே புன்னகை புரிந்து ஆசி வழங்கினாராம்.