அன்பெழில் Profile picture
May 12 11 tweets 5 min read Twitter logo Read on Twitter
வால்மீகி ராமாயணம் 24,000 ஸ்லோகங்கள் கம்ப ராமாயணம் 10,569 பாடல்கள் கொண்டது. அதே போல துளசிதாசர் இயற்றிய ராமாயணமும் பல்லாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. நம்மால் அத்தனை படித்துப் பாராயணம் செய்ய முடியாது என்பதால் பல #சுருக்க_ராமாயணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று 16 வார்த்தை ராமாயணம் Image
இதோ!
#பிறந்தார்_வளர்ந்தார்_கற்றார்_பெற்றார்
#மணந்தார்_சிறந்தார்_துறந்தார்_நெகிழ்ந்தார் #இழந்தார்_அலைந்தார்_அழித்தார்_செழித்தார் #துறந்தார்_துவண்டார்_ஆண்டார்_மீண்டார்

விளக்கம்:
1. பிறந்தார்
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தார்.

2.வளர்ந்தார் Image
தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தார்.

3.கற்றார்
வசிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள், கலைகள் முறைகள் யாவும் கற்றார்.

4.பெற்றார்
வசிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றார் Image
5.மணந்தார்
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தைப் போக்கி மண்ணின் மகளாம் சீதையை மணந்தார்

6.சிறந்தார்
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனத்திலும், தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கினார்.

7.துறந்தார்
கைகேயியின் சொல்லேற்று ImageImage
தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றார்

8. நெகிழ்ந்தார்
அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தார். குகனார் அன்பில் நெகிழ்ந்தார். பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தார். பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும், Image
தன்னலமற்ற குணத்தையும், தியாகத்தையும், விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தார். அத்ரி அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது. விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் Image
சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9.இழந்தார்
மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தார்.

10.அலைந்தார்
அன்னை சீதையை தேடி அலைந்தார்.

11.அழித்தார்
இலங்கையை அழித்தார்.

12.செழித்தார் ImageImage
சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தார். ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று, செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பினார்.

13.துறந்தார்
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில், மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக, அன்னை சீதையைத் துறந்தார். Image
14.துவண்டார்
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது, ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.ஆண்டார்
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால், ஆரோக்கியம் Image
ஆனவர்களாகவும், செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டார்.

16. மீண்டார்
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டார்.

ஜெய் ஸ்ரீராம்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் Image
என்றால் எந்த சொல்லிலும் நாம் இறைவனை காண முடியும், இறைவனை நினைக்க முடியும். அந்த நிலையை நாம் அடைய முயற்சி செய்வோம். ஒன்னும் கஷ்டமே இல்லை. தொடர் இறை சிந்தனை, தானே நம்மை அவ்விடத்துக்கு அழைத்துச் செல்லும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 14
#இந்து_சமய_வினா_விடை

1. கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் யார்?

2. கந்த குரு கவசத்தை எழுதியவர் யார்?

3. காயத்திரி மந்திரத்தை சொன்னவர் யார்?

4. ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் யார்?

5. திருப்புகழ் என்னும் நூலை எழுதியவர் யார்?

6. திருமந்திரம் எழுதியவர் யார்? Image
7. கந்தபுராணம் எழுதியவர் யார்?

8. மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் நூலை இயற்றியவர் யார்?

9. கந்தர் அநுபுதி எழுதியவர் யார்?

10. திருமுருகாற்றுப்படை எழுதியவர் யார்?

11. திருவிளையாடல் புராணம் எழுதியவர் யார்?

12. அபிராமி அந்தாதி அருளியவர் யார்?

13. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? Image
14. குமாரஸ்தவம் என்ற நூலை இயற்றியவர் யார்?

15. நான்மறை வேதங்களை தொகுத்தவர் யார்?

16. தெய்வ மணிமாலையை எழுதியவர் யார்?

17. யோகாசனம் பற்றி முதலில் எழுதியவர் யார்?

18. திருப்பாவை அருளியது யார்?

19. திருவெம்பாவை அருளியது யார்?

20. ஸ்ரீஹனுமான் சாலிசா பாடல்களை இயற்றியவர் யார்? Image
Read 6 tweets
May 13
#மகாபெரியவா அருள்வாக்கு

இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது Image
சாஸ்த்ரத்தில் உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.
தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் .

தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.

ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த
Read 6 tweets
May 13
#MahaPeriyava
Author: A Kanchi SriMatham attendant
Source: Maha Periyaval - Darisana Anubhavangal - Vol 3
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

That was the day of the transit of the planet Guru. A devotee came to Sri Maha Periyava. "According to my Image
horoscope, Guru has arrived at the house of astronomical nativity. It seems that Shri Rama went to the forest because Guru came to his house of nativity in his horoscope at that time. So it is said that I will undergo heavy hardship. The astrologer says that I should do some
shanti-pariharam (appeasement to get relief from planetary afflictions)", said the devotee.

Periyava replied, "There is indeed a view that Shri Rama was exiled to the forest when Guru reached his house of nativity. However, that is not right. Shri Rama was comfortable in the
Read 6 tweets
May 13
#மகாபெரியவா
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

சென்னை எழும்பூரில் ஒரு தடவை ஸ்ரீமகாபெரியவாளின் ஜெயந்தி உத்சவம். உத்சவம் என்றால் அங்கு வரும் வேத விற்பன்னர்களை, மகானின் அம்சமாகவே கருதும் பெரும் மனம் படைத்தவர் Image
பிரதோஷம் மாமா. அவர்களை உபசரிப்பதில் எந்த விதமான குறையும் இருக்கக்கூடாது என்று சிரத்தையோடு உழைப்பவர். ஜெயந்தி மூன்று நாட்கள் நடக்கும். அடுத்த நாள் மகானின் திருநட்சத்திரமான அனுஷ தினம். கோலாகலமாகக் கொண்டாடப்பட இருந்தது. அன்றைய தினம் வைதீகர்களுக்கு நேர்த்தியான சாப்பாடு போட வேண்டும்
என்பது நடைமுறை. முதல் நாள் இரவு, மாமாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. எல்லோருக்கும் இனி அமுதமாக பால் பாயசம் போட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். இதற்காக நூறு லிட்டர் பால் தேவைப்படலாம். முன்பே சொல்லாமல் பால் எப்படிக் கிடைக்கும் என்றெல்லாம் மாமா யோசிக்கவே இல்லை.
Read 8 tweets
May 12
#ஸ்ரிவியாசர் அருளிய #பிரம்ம_சூத்திரத்திற்கு நிறைய பேர் வியாக்கியானம் செய்துள்ளனர். ஆனாலும் #பகவத்_ராமானுஜர் அருளிய #ஸ்ரீபாஷ்யம் தான் உண்மையை அப்படியே உரைக்கும் பாஷ்யம் என்று #சுவாமிதேசிகன் அருளியுள்ளார். பிரமத்தின் கல்யாண குணங்களும், பிரமத்தின் செல்வங்களான இந்த உலகங்களும் Image
பொய்யானவை என்று சொல்லும் பாஷ்யங்கள் அசத்தியத்தை மட்டுமே சொல்லியுள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யமோ சத்தியத்தை மட்டுமே சொல்வது. கனவில் அனுபவிக்கும் விஷயங்கள் கூட சத்தியமானவை என்று பாஷ்யத்தில் சாதித்துள்ளார். அது எப்படி என்றால் அந்தந்த ஆத்மாக்கள் செய்த பாப புண்ய கணக்கின்படி
சுவப்னத்தில் நல்லதை தீயதை நாம் அனுபவிக்கும்படி செய்யப்படுகிறது. நினைவு வாழ்க்கையில் அனுபவிக்கும் அளவுக்கு அவை பலம் பெறாத நிலையில் கனவில் அவற்றை அனுபவிக்கும்படி ஆகிறது. புலியோ சிங்கமோ கனவில் நம்மை துரத்தினால் நிச்சயம் பயந்து ஓடுகிறோம், பின் விழித்து எழுந்து நிம்மதி அடைகிறோம்.
Read 6 tweets
May 12
#Food_for_thought At the point of death, a renowned civil servant, Tom Smith called his children and after praying for them, advised them to follow his footsteps so that they can have their peace of mind in life. The eldest child, Elizabeth, a graduate, looked at the other Image
siblings and yelled, "Daddy, its unfortunate you are dying without a penny in your bank account. It is a pity you are leaving us the same wretched life you lived. Personally, I can't emulate you, she continued. Other fathers in the neighbourhood that you tag as being corrupt,
thieves of public funds left houses and properties for their children. See the kind of comfortable life they live and the schools they attend. You are dying after 35 years of public service with just one rickety car. The only honour you have in this room is the citation of an
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(