பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.
திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,
இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,
2/25
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.
சிவபாதசேகரனை வணங்கி திரேட்க்குள் செல்வோம்.
3/25
தஞ்சை பெரிய கோவிலை கட்டியது யார் என
136 ஆண்டுகளுக்கு முன்பு
யாருக்கும் தெரியாது,
சுமார் 250 ஆண்டுகள் மக்கள் கோவிலுக்குள் செல்ல, இறைவனை வணங்க தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆக வேண்டும் அதுதான் உண்மை.
4/25
ஆங்கிலேயர் ஆட்சியில் அந்த கோவிலை தங்களது படைவீரர்கள் தங்கும் இடமாகவும் வெடிபொருட்களை வைக்கும் இடமாகவும் மாற்றினர்.
1858 ல். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்த பின்,
பிரிட்டனின் நேரடி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டது.
5/25
அப்போதைய ஆங்கிலேய அரசால்
1886 ல் இந்தியத் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது.
இத்துறையின் சென்னை மாகாண கல்வெட்டியல் துறை அதிகாரியாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Dr. Euger julius theodor Hultzsch.
பணி அமர்த்தப்பட்டார்.
அவர் 1887 டிசம்பர் மாதம் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகிறார்.
6/25
கோவிலின் அமைப்பும் பிரம்மாண்டத்தையும் பார்த்தவுடன்
மிரண்டு போய் The great temple என்கிறார்,
அழகான தமிழ் எழுத்துக்களில்
கோவிலின் வாயில் முதல் எங்கெங்கும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டு இருந்தன.
கல்வெட்டுகளை வாசிக்கத் தொடங்கிய அவர்,
கல்வெட்டுகளின் தொடக்கத்தை தேடினார்.
7/25
விமானத்தின் வடபுறத்தில்
சண்டிகேசர் கோவிலுக்கு எதிரே விமானத்தின் வடபுற அதிஷ்டானத்து பட்டிகை அருகே இராஜராஜனின் மெய்கீர்த்தியுடன் என தொடங்கும் அக்கல்வெட்டில்,
"பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி இராஜராஜீவரம்"
என இருந்தது.
8/25
இந்த வரிகளை வாசித்த பிறகு.
கோவிலைக் கட்டியது பேரரசன் இராஜராஜ சோழன் என அறிவிக்கிறார்,
அப்போது இராஜராஜ சோழரை " The great king " என அழைக்கிறார்.
பிறகு தனது பரிவாரங்களுடன் கோவிலில் முகாமிட்டு அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து அச்சு நூலாக வெளியிட்டார்.
9/25
இவரது பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்
இவரது உதவியாளர் வெங்கையா,
1887 முதல் - 1891 வரை நான்கு ஆண்டுகள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் வேலை நடந்தது.
தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எண் 2 ல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அச்சு நூலாக வெளிவரத் தொடங்கியது,
10/25
மாமன்னர்
இராஜராஜ சோழன் கட்டிய கோவில் இராஜராஜீவரம் எனும் இந்த பெருவுடையார் கோவில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
11/25
கி.பி.985 ல் அரச பதவிக்கு வந்த ராஜராஜன் முப்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்.
போரில் தனது வீரத்தை காட்டிய அரசன் சிவபெருமான் மேல் இருந்த அதீத பக்தியால் இந்த கோவிலை கட்டினார்.
தஞ்சை பெரிய கோயில், இராஜராஜேஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம்,
தஞ்சை பெருவுடையார் கோயில்,
பிருகதீசுவரம்,
12/25
என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
மூலவர் லிங்க வடிவில் பெருவுடையார் அருள்பாலிக்கிறார்.
மூலவர் 3.7 மீட்டர் அகலம்
13 அடி உயரம் கொண்டவராக உள்ளார்.
ஆலயத்தின் தல விருட்சம் வன்னி மரம் ஆகும்.
தீர்த்தம் சிவகங்கை தீர்த்தமாகும்
கருவூரார் திருவிசைப்பா பாடிய தலம்.
13/25
இந்த கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டான 1003ல் துவக்கப்பட்டு அவரது 25 ஆவது ஆட்சியாண்டான 1010ல் முடிவுற்றது.
கோயிலின் வரை திட்டத்தில்,
ஆள் கூற்று முறைமை,
சமச்சீர்மை வடிவவியல்
விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
14/25
வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை பெற்ற இராஜராஜ சோழன் தான் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் உருவாக்க விரும்பி அதீத ஆர்வமுடன்
இந்தக் கோயிலை உருவாக்கினார்.
15/25
நுண்ணிய வடிவமைப்பு,
கற்பனா சக்தி,
மேலாண்மை துல்லியம்,
பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு,
துளியும் பிசகாத கணக்கீடுகள்
போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன
தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரியது.
16/25
கோவில் கட்டுமானத்தில்,
மரம் இல்லை,
சுடு செங்கல் இல்லை,
பூராங்கல் இல்லை,
அடித்தளம் முதல் சிகரம் வரை கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோவில் “கற்றளி’ ஆனது.
நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
17/25
திருச்சிக்கு அருகே கீரனூர் அருகே உள்ள நார்த்தாமலையிலிருந்து இக்கற்கள் கொண்டு வரப்பட்டன,
சுமார் 1,30,000 ton எடையுள்ள கற்களை கொண்டு கோவில் எழுப்பப்பட்டுள்ளது,
உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு" எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
18/25
கருவறைக்கு மேலே உள்ள விமானம்,
13 தளங்களையும் 216 அடி கூர்நுனி வெற்று விமானம் எனும் Hollow Tower அமைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பக்கிரகத்தில் இருந்து பார்த்தால் விமானத்தின் உச்சி தெரியும்,
விமானத்தின் உச்சியில் 80 ton எடையுள்ள கலசம் அமைக்கப்பட்டுள்ளது.
19/25
விமானத்தின் மேல் 8 நந்தி சிலைகள் இருக்கிறது.
சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து அத்தனை உயர சாரம் கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு போடப்பட்டது சாரம் எனும் மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று.
சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம்.
20/25
மண்ணால் சாரம் அமைத்து
அந்த மண் சாலை வழியாக
80 ton கலசத்தை 216 அடி உயரத்தில் வைத்துள்ளனர்.
மூலவர் சிவலிங்கத்தை சுற்றிக் கட்டப்பட்டுள்ள கருவறைச் சுவரைச் சுற்றி, 6 அடி இடைவெளி விட்டு மற்றொரு வலிமையான சுவர் கட்டப்பட்டுள்ளது. அவைகளின் மீதுதான் 14 அடுக்குகளைக் கொண்ட,
21/25
இந்த மாபெரும் விமானம் கட்டப்பட்டுள்ளது.
சதுர வடிவில், ஒன்றைவிட விட்டத்தில் குறைவான அளவில் கற்களை அடுக்கி எழுப்பப்பட்டுள்ள இந்த 14 அடுக்குகளின் நடுப்பகுதி வெற்றிடமாகவே உள்ளது தான்
இது கட்டிடக் கலையின் மற்றொரு அதிசயம்.
22/25
14வது அடுக்கின் மீது 88 டன் எடையுடைய 12 அடி உயர கும்பக் கலசத்தைத் தாங்கியுள்ள மேல் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது தனது எடையின் வலிமையால் அதன் கீழுள்ள மொத்த கட்டமைப்பையும் உறுதி குலையாமல் அழுத்தி நிற்கச் செய்கிறது.
இக்கோவிலின் கிழக்குப் பக்கத்தில்,
23/25
இரண்டு கோபுரங்கள் காணப்படுகின்றன.
முதல் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில்,
இரண்டாவது கோபுரம் இராஜராஜன் திருவாயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இராஜராஜன் திருவாயிலில் அடித்தளத்தில் சண்டீசர் கதை கண்ணப்ப நாயனார் வரலாறு, காமதகனம், வள்ளித் திருமணம் போன்றவை தொடர் சிற்பங்களாகவும்,
24/25
மேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய துவாரபாலகர் சிற்பங்களும் உள்ளன.
கோவிலின் திருச்சுற்றுமாளிகையில் 36 பரிவார கோவில்கள் காணப்படுவதும், இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச்சிறப்பானது.
கருவறையின் சிறப்பையும் மற்ற விடயங்களையும் பகுதி-2ல் காண்போம்
25/25
தொடரும்......
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,
இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,
எல்லாருக்கும் சிறு வயசு தான்.
2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,
சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,
இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,
2/23
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?
எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?
அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.
2/16
இப்பொழுது இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்,
இறைவனை எப்படி அடைவது என்ற அடிப்படை சிந்தனை அறியாதவர்கள்,
யாரேனும் அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால் ?
அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது
“கண்ணப்ப நாயனாரைத்தான்”.