தேர்தல் முடிவுக்கு முன்பு சசிகாந்த் செந்தில் IAS யார் என்று,
தமிழ்நாட்டை விடுங்க, 2009-16 வரை பணியாற்றிய கர்நாடக மாநிலமே அறியாது
ஆனால் இன்று இந்தியா முழுவதும் உச்சரிக்கும் பெயர்.
"கரூர் கழனி கர்நாடக சிங்கம்" என வரும்போதே ஊடக வெளிச்சத்தில் வந்தவர்
ஒன்று அல்ல இரண்டு மாநிலங்களில் கோமாளி என நிறுவப்பட்டிருக்கிறார்.
யுபிஎஸ்சி தேர்தலில் அகில இந்திய அளவில் எட்டாம் இடம் பெற்ற IAS அதிகாரிக்கும்
சங்கல்ப அகாடமி மாணவர் என்பதால் சிறப்பு மதிப்பெண்களோடு ஐபிஎஸ் ஆனவர்க்கும் உள்ள வித்தியாசம் இதுதான்
எப்படி இது சாத்தியமாயிற்று?
வழக்கமாக ஊடகங்கள் தேர்தல் கருத்துக்கணிப்பில் தாங்கள் விரும்பும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகக் காட்ட நினைத்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய எக்சிட் போல் முடிவுகளில் நேர்மையாக உண்மையை உரைப்பார்கள். ஆனால் இம்முறை கர்நாடகத் தேர்தலில் எக்சிட் போல் முடிவுகளில் பெரும்பாலும்
காங்கிரஸ் பார்டர் லெவலில் பாஸாகுமென்றும், தொங்கு சட்டசபை அமையுமென்றும் தான் குறிப்பிட்டன. அந்த அளவுக்கு ஆளும் கட்சியின் மிரட்டலுக்கோ, விசுவாசத்துக்கோ கட்டுப்பட்டிருந்தன. தேர்தல் முடிவோ காங்கிரசுக்கு 137 தொகுதிகளை கொடுத்தது. பாஜகவோ காங்கிரஸில் பாதியைக்கூட வெல்ல முடியவில்லை.
கேம் சேஞ்சர் எனக் கருதப்பட்ட குமாரசாமிக்கும் பலத்த அடி!
நாட்டின் பிர'மத'ரே மற்ற வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வார காலமாக இங்கே பிரச்சாரம் செய்தார். தனது ஆட்சியின் பெருமை எதையும் பேசவில்லை. பேசுவதற்கு எதுவுமே இல்லை. வந்தே பாரத் ரயில் என்கிறார்கள்... அது சாமானியர்களுக்கானதல்ல.
அதேவேளை, சாமானியர்களுக்கான முதியோர் சலுகைக்கட்டணம் ஒழிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் தியாகத்தைப் பேசி வாக்குச் சேகரிக்கப் பார்த்தார்கள். உண்மையில் புல்வாமாவில் கொல்ல்லப்பட்ட 40 CRPF வீரர்களுக்கு ஒன்றியத்தின் பொறுப்பின்மையே காரணமென்று தெரியவந்ததும் ஆத்திரமாக வருகிறது நமக்கு.
அருணாசல பிரதேசத்திலும் இலங்கையிலும் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இப்படி அனைத்து மட்டத்திலும் நமக்கு பின்னடைவே.
சிலிண்டர் விலை 400 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் எகிறியது. வீட்டுக்கடன் வட்டி விகிதம் எகிறியது. பெட்ரோல், டீசல் விலை எகிறியது.
அனைத்து சேவைக்கட்டணங்கள், டோல் கட்டணங்கள், ஜி.எஸ்.டி.விகிதங்கள் அனைத்தும் எகிறியுள்ளன. பிரதாமகரின் கூட்டாளி அத்தானி மட்டும் போலித்தனமாக உலகின் நம்பர் ஒன்னாக உயர்ந்தார். அந்த பிராடுத்தனத்தின் மீது வலுவாக அடி விழுந்து 25வது இடத்துக்குக்கீழே துரத்தப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் 40% கமிஷன் கட்டாயமாக்கப்பட்டு மாபெரும் ஊழல்... கட்டுமானத்துறையில் பல கோடி ஊழல்... இப்படி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பத்திரிகைகளுக்கு கையூட்டு அளிக்க நினைத்து அதிலும் பிடிபட்டார் பசவராஜ் பொம்மை. ஆக, பொதுமக்களுக்கு எதிரான அத்தனை செயல்பாட்டிலும் மத்தியிலும்,
மாநிலத்திலுமிருந்த அரசுகள் ஈடுபட்டன. எனவே தங்கள் ஆட்சிப் பெருமை பேச முடியாத பிரமதரோ, வழக்கம்போல் ஆன்மீக வேடம்... ராம கோஷம்... கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்துக்கு ஆதரவு, மதவெறியை உசுப்பேத்துவது என்றெல்லாம் மட்டமான... வழக்கமான மூளைச்சலவை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!
இவரின் போலித்தனத்தின் மீதான கோபத்தை எப்படிக் காட்டுவது? அச்சூழலில் தான் அதே பழைய காங்கிரஸை. புதுப்பித்து, உயிர்ப்பித்து, மக்களின் அரசியல் நோக்கி நகர்த்திய ராகுல் காந்தி கண்ணில் பட்டார். அவரது பாரத ஒற்றுமை நடை பயணமும், எளிய அணுகுமுறையும், அழுத்தமான பேச்சுக்களும் மக்களைக் கவர்ந்தன
ஆன்மீகத்தை அரசியலில் மிக்ஸ் செய்யும் மோடி வித்தையை அவர் அம்பலப்படுத்தினார். மக்களுக்கு மத வெறியூட்டும் மோசடியை சாடினார். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை, விவசாயிகள் தண்டிக்கப்படுவதை, மொழிகள், தொழில்கள் சிதைக்கப்படுவதைக் கேள்விகேட்டார். காங்கிரஸில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டிருப்பதை,
மக்களின் தலைவராக தான் உருவெடுத்திருப்பதை உணர்த்தினார். சர்வ்வ்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயகக் குரலாக ஒலித்தார். கர்நாடக மக்கள் ராகுலின் பக்கம் சாய்ந்தனர். அழுத்தமான மோட்டி எதிர்ப்பலை உருவானது. மக்கள் விரோத பா.ஜ.க.வை சுருட்டிப் போட்டது
கர்நாடகத் தேர்தலில் வெற்றி கொடுத்த தெம்பால்,
இனி இந்த தேசம் நம்பிக்கையோடு 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும்! கூழைக்கும்பிடுகள், கார் ஊர்வலத்தில் பூக்கள் மழை பொழியச்செய்யும் தில்லாலங்கடிகள், ஜெய் ஸ்ரீராம் கோஷ வேடங்கள் அனைத்தையும் வீழ்த்தி, எளிய மக்களுக்கான ஆட்சி மக்களுக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமையும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கர்நாடக தேர்தலில் திருப்புமுனை ஏற்படுத்திய பொது ஜனங்களின் பிரதிநிதி
திரையில் அநியாயத்தை எதிர்க்கும் ஹீரோக்கள் வாயை மூடிக் கொள்ள இந்த வில்லன்
கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பிஜேபியை குற்றம் சாட்டி ஹீரோ ஆனார்
அதற்காக லக்னோவில் அவர் மேல் வழக்கு போட்டனர்
2017 செப்டம்பரில் சங்கிகளை எதிர்த்த மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொலையில் மோடியின் மௌனத்தை கேள்வி கேட்டதிலிருந்து பிரகாஷ் ராசின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.
அதற்கு அவர் கொடுத்த விலை அதிகம்
கான்களும், கபூர்களும் சங்கியாகவே மாறிவிட்ட பாலிவுட்டில் தெற்கிலிருந்து எழுந்த எதிர்ப்பு அசவுகரியம் ஏற்படுத்த,
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பிசியாக இருந்த பிரகாஷ் ராஜூக்கு,
பாலிவுட் கதவுகள் முதுகெலும்பெற்ற கோழைகளால் அடைக்கப்பட்டது.
திமுக தொண்டர்களுக்கு புனிதஸ்தலம் என்றால் அது கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் தான்…
ஒரு கட்சி தலைமையகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கட்டப்பட்டது
1949 இல் தொடங்கப்பட்ட திமுகவுக்கு முதல் அலுவலகம் சென்னை ராயபுரத்தில் "அறிவகம்" பின்பு
தேனாம்பேட்டையில் 1964ல் "அன்பகம்" உருவானது, என்றாலும் கட்சியின் பிரம்மாண்டத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அலுவலகம் தேவை, பெரிய கட்டிடம் தேவை எனவே 1972ல் அண்ணா சாலையில் 86 கிரவுண்ட் நிலத்தை வாங்கி 1980ல் பணியைத் தொடங்கினார் கலைஞர்.
நிதி பிரச்சினையால் வேலை அசை போட்டது,
1984ல் அரசினர் தோட்டத்தில் இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை MGR பறித்தபோது அறிவாலயம் கட்டுமானப்பணி விஸ்வரூபம் எடுத்தது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிதி திரட்டித் தர 20/07/1985 தலைவர் எழுதிய உணர்ச்சிகரமான கடிதம் அந்த ஒரு வருடத்தில் 96 லட்சம் குவிய வழிவகுத்தது.
ராகுல் எனும் தேசத்தை நேசிக்கும் மக்களை ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்ல வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கும் இளந்தலைவரை தேர்தல் வெற்றியின் மூலம் நாடு பற்றிக்கொண்டது
2) பிரதமர் பதவி வகிப்பவர் மதத்தை வைத்து ஜெய் பஜ்ரங் என முழக்கமிடுங்கள் என நஞ்சை விதித்தும்
தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை மறந்து அனுமனை அவமதித்துவிட்டதாக பிரச்சாரம் செய்தும் ,
வெளிபபடையாகவே இஸ்லாமிய வெறுப்பை விதைத்தும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்,
வலிமையான மனிதர்கள் வலிமையான இடத்தில் இருந்து வர மாட்டார்கள்..
ஆனால் வலிமையான மனிதர்கள் தங்கள் இடத்தை வலிமையாக்குவார்கள்
~ KGF வசனம்
இந்த வசனம் அப்படியே பொருந்த கூடிய கர்நாடக அரசியல்வாதி @DKShivakumar
கர்நாடக அரசியலில் ஜெயிண்ட் கில்லர் என அழைக்கப்படுபவர்
நடந்து முடிந்த #KaranatakaElectionResults ல், தான் போட்டியிட்ட கனகபுரா தொகுதியில் ஏறத்தாழ 80% வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்து கொண்டிருக்கிறார்.
காங்கிரசின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு
ராகுலுடன் இணைந்து @DKShivakumar வகுத்த வியூகமே காரணம்
அரசியல் என்பது திட்டங்களை பொறுத்துதான்.. உங்களிடம் சரியான வலிமையும், திட்டமும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம். தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து இன்று வரை நிரூபித்துக் கொண்டு வரும் சிவகுமாருக்கு பெரிய அரசியல் குடும்ப பின்னணி எல்லாம் கிடையாது.
இது மோடியின் தோல்வி
ஜனநாயகத்தின் வெற்றி
பாசிச அழிவின் தொடக்கம்
ஒரு மாநிலத் தேர்தல் களத்தை
Modi vs மக்கள் என மாற்றி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட பிரதமர்
தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்?