இத்திருச்சுற்றில் தெற்கில்
அகோர சிவன்,மேற்கில் தத்புருஷர்,வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்க பெற்று சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார்
கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது
மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
2/22
நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.
இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக,
“கதலிகா கர்ணம்’ என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது.
108 பரத நாட்டியமுத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள்,
3/22
வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும் தான் சோழர் கால ஓவியங்களும்,
நாயக்கர் கால ஓவியங்களும், மராட்டியர் கால ஓவியங்களும் காணப்படுகின்றன.
இத்திருக்கோவிலில்,
"உலக முழுவதுடைய நாயகி"எனப் பெயர் கொண்ட அருள் வழங்கும்,
4/22
அம்மன் கோவில் 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்,
திருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்ரமணியர் கோவில் தஞ்சை நாயக்க மன்னர்களின் கலைப் படைப்பாகும்.
திருச்சுற்றில் தென்மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும்.
5/22
இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய தலைமைச்
சிற்பிகளாக,
வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன்,
குணவன் மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன்,
இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்.
இந்த மூவரும் பொறிக்கப்பட்டுள்ளனர்.
6/22
மாமன்னன் ராஜராஜனால் உருவாக்கப்பட்ட நந்தி, வராகி அம்மன் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது,
பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் பெரிய நந்தி ஒற்றைக்கல்லால் நாயக்கர்களால் கட்டப்பட்டது ஆகும்.
இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.
7/22
நந்தியின் அடிப்பாகம் 5 மீட்டர் உயரம் கொண்டுள்ளது
ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடை உடையதாக லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.
நாயக்கர் காலங்களில் கோயிலைச் சுற்றி எண்ணற்ற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
8/22
இந்த ஓவிய பாணியை பின்பற்றியே இப்போது பிரபலமாக அறியப்படும் தஞ்சாவூர் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளது.
கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் என அனைத்தும் கல்வெட்டுகளில் பதியபட்டுள்ளது.
அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்,
அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பெரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.
13/22
கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும்.
அதே சமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது, பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது.
14/22
அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.
தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
15/22
இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும்.
இதனை Zero Settlement of Foundation என்பர்.
இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது.
16/22
தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர்தான்.
இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன.
2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது,
17/22
அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை, அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத்துகள் எதுவும் இல்லை.
350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.
இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல.
18/22
தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல்.
ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பெருமணல்,
இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல்..
19/22
ஆக, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டு வந்திருக்க வேண்டும்,
இடத்தை தேர்ந்தேடுத்து சுக்கான் பாறைகளை தொட்டியாக வெட்டி அதில் பெரு மணலை நிறைத்து அதன் மீது 1,30,000 Ton கிரானைட் கற்கள் கொண்டு 216 அடி உயர கோயிலைக் கட்டியிருக்கிறான்,
20/22
இது போல அஸ்திவாரத்துடன் இவ்வளவு பெரிய கட்டுமானமத்தை உலகத்தில இருக்கும் ஒட்டுமொத்த பொறியியல் வல்லுநர்கள் ஒன்று சேர்ந்தாலும் இதுபோல் ஒரு கோவிலை கட்ட முடியாது,
எம்பெருமான் இராஜராஜ சோழனின் கட்டிடக்கலை ஒவ்வொரு தமிழனின் அடையாளம்,
நமது அடையாளத்தை பேற்றுவது காப்பதும் நமது கடமை,
21/22
ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு மாமன்னர்,
இன்றும் அவரை கொண்டாடுவோரின் மனங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என கூறி கொண்டு,
நேற்று நீண்ட நாட்களுக்கு பின் கோயிலில் அடியார் ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது,
தனக்கு எழரை சனி நடக்கிறது அதனால் மிகுந்த கஷ்டம் எற்படுகிறது, அனுபவிப்பதனால் தினமும் கோவிலுக்கு வருகிறேன் என்று புலம்பினார்,
நான் அமைதியாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்,
1/28
15 நிமிடங்களுக்கு மேல் புலம்பி தள்ளிட்டார்,
நான் எதுவும் பேசாமல் இருப்பது அவருக்கு புரிந்தது நீங்களும் கும்பம் தானே என்றார்,
நான் ஆம் என்றேன்,
அப்ப உங்களுக்கும் தான் எழரை சனி நடக்கிறது நீங்க என்றார் ?
வேலை பளு தவிர எந்த பிரச்சனையும் இல்லை Normal ஆக இருக்கிறேன் என்றேன்.
2/28
நானும் தான் அடியார், தினமும் கோவிலுக்கு வருகிறேன், உங்களை மாதிரி தீட்சை மட்டும் தான் வாங்கல மத்தபடி நாம ஒன்னு தான் நீங்க சந்தோஷமா இருக்க நான் மட்டும் கஷ்டபடுறேன் ஏன் இப்படி ?
கடவுளுக்கு ஒரு நியாயம் தருமம் இல்லையா அடியார்களை கூட சமமாக பார்க்கமாட்டாரா என்று கடவுளை திட்டினார்
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.
திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,
இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,
2/25
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,
இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,
எல்லாருக்கும் சிறு வயசு தான்.
2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,
சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,
இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,
2/23
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.