#ஆயுளை_அழிக்கும்_ஆறு_வாள்கள்
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள்வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே. ஏன் என்று கேட்டார்.
அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன. அவை
அதிககர்வம், அதிகம் பேசுதல், தியாக மனப்பான்மை இன்மை, கோபம், சுயநலம், நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது என்றார்.
விதுரர் கூறிய அந்த 6 வாள்கள் எப்படியிருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என
நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண்
வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார், கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம் என்று.
3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத்
தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை, நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
4. கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் யோகி, அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது
அதர்மம் எது என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
5. சுயநலம்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக
எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டாக்ள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம்
உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பது போல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.
மேலே குறிப்பிட்டவைகளில் ஒரு நல்லதை பின்பற்ற ஆரம்பித்தாலும் மற்ற நற்குணங்கள் தானாகவே நமக்கு வரும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னையைச் சேர்ந்த திருமதி கமலாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண்கள். இரண்டாவது பெண் பிறந்து, அவளுக்கு எட்டு வயதாகும் போது, கமலா மீண்டும் தாய்மை அடைந்தார். ஏழு மாத கர்ப்பிணியான அவளை
அழைத்துக்கொண்டு, அவரது கணவர் மகானை (பெரியவா) பண்டரிபுரத்தில் தரிசித்தார். உடன் அவர்களின் மாமாவும் சென்றிருந்தார். அவர்தான் மாமாவிடம் கமலாவைப் பற்றிய வேண்டுகோளைச் சொன்னார்.
"இவளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள். பல வருஷங்களுக்குப் பின்னால் மீண்டும் உண்டாகி இருக்கிறாள். இந்தக்
குழந்தையாவது ஆணாகப் பிறக்க மகா பெரியவாளின் ஆசி வேண்டும்."
The present day generation will never know this as mothers hardly wear Sarees now. #Moms_SareePallu
The principal use of Mom’s pallu was to provide elegance to her drape. But along with that, it also served as a potholder for removing hot pans from the stove.
It was wonderful
for drying children's tears, and on occasions was even used for cleaning out dirty ears and as a hand towel.
For sleeping kids her lap was the mattress and her pallu the warm cover.
When company came, those pallus were the ideal hiding places for shy kids.
And when going out
as little kids, the pallu became an anchor, a guide to follow Mom in the big bad world.
And when the weather was cold, Maa wrapped it around her arms.
Those glorious sari pallus wiped many a perspiring brow, bent over the hot wood stove.
#புராணம்#வினாயகர்_முதல்_வாழைமரம்_வரை
ஒரு சமயம், சிவபெருமான் அசுரனை அழிக்க போருக்குச் சென்றிருந்தார். பார்வதி தேவியார், கணவன் போருக்கு சென்றதை நினைத்து அதே சிந்தனையுடன் முகத்தில் பூசுவதற்கு சிலாக் கல்லில் மஞ்சளை உரசினார். சிலாக் கல்லின் குணம் கொஞ்சம் மஞ்சளை உரசினாலும் அதிகமாக
வரும் தன்மை கொண்டது. பார்வதி தேவி, தனக்குத் தேவையான மஞ்சளை எடுத்துக் கொண்டு, மீதியுள்ள அரைத்த மஞ்சளைக் கொண்டு குழந்தைமேல் உள்ள ஆசையாலும் தன் கணவன் மீது கொண்ட அன்பாலும் ஓர் அழகான 9 வயது ஆண் பதுமையை செய்தார். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தமையால் அதற்கு ஆடை, ஆபரணங்கள் போட்டு அழகுப்
படுத்தி தாய்மை உணர்வுடன், எடுத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் அன்னை பார்வதி. அந்த மஞ்சளால் செய்யப்பட்ட பொம்மையானது தேவியின் தாய்மை கொண்ட அரவணைப்பால், கணப்பொழுதில் உயிர் பெற்று, அழகான சிறுவனாக உருவெடுத்தது. கணப்பொழுதில் தோன்றியதால் #கணபதி என பெயர் பெற்றார். தேவியின் விக்னத்தை
#MahaPeriyava
The Sage of Kanchi
Author: Shri A.R.Lakshmi Narayanan, Chennai
Source: Moments of a lifetime
I cannot explain why, but I had the sudden overwhelming urge to see the Sage. However, I had learnt the previous day that the Vice-President of India, Honourable Sri
Shankar Dayal Sharma was to visit Kanchipuram that day. That morning, as I sat for my prayers, I wondered how I would get to see the Sage, with the Vice President there. As I closed my eyes in prayer, the sage appeared in my vision. At about 7 pm, that evening, I entered
Sri Matam with my family. I stood bare-footed, against the wall between the two rooms. One was the room where Pooja to the Lord Sri Chandramouleeswarar is performed by the Sage every morning. We were waiting very anxiously and eagerly for the arrival of the Sage for the
#ஜகத்குரு_ஆதிசங்கரர்
ஆதி சங்கர பகவத் பாதாள் மிகவும் நலிவுற்று இருந்த இந்து மதத்தையும் வேதங்களையும் காத்து அருளினார். பல ஸ்லோகங்களை இயற்றி, வேத வேதாந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். நம் அகண்ட பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் அத்வைத மடங்களை நிறுவி இந்து மதத்தை பரப்பினார்.
அவரின் வரலாறு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பொ.யு 7ம் நூற்றாண்டில், (அவர் பிறந்த காலம் பற்றி இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன) கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில், சிறந்த இறை பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற அந்தண தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் இறைவன் மீது
இருந்த மிகுந்த பக்தியால், ஏழை எளிய மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வந்தனர். ஆனால் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற மனக்குறை இருந்து வந்தது. இதை பார்த்த பெரியோர்கள் அவர்களுக்கு ஓர் ஆலோசனை கூறினர். திருச்சூரில் வடக்குநாதன் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தொடர்ந்து ஒரு