SSR 🐘 Profile picture
May 17 28 tweets 4 min read Twitter logo Read on Twitter
#SSRThreads

நேற்று நீண்ட நாட்களுக்கு பின் கோயிலில் அடியார் ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது,

தனக்கு எழரை சனி நடக்கிறது அதனால் மிகுந்த கஷ்டம் எற்படுகிறது, அனுபவிப்பதனால் தினமும் கோவிலுக்கு வருகிறேன் என்று புலம்பினார்,

நான் அமைதியாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்,

1/28
15 நிமிடங்களுக்கு மேல் புலம்பி தள்ளிட்டார்,

நான் எதுவும் பேசாமல் இருப்பது அவருக்கு புரிந்தது நீங்களும் கும்பம் தானே என்றார்,

நான் ஆம் என்றேன்,

அப்ப உங்களுக்கும் தான் எழரை சனி நடக்கிறது நீங்க என்றார் ?

வேலை பளு தவிர எந்த பிரச்சனையும் இல்லை Normal ஆக இருக்கிறேன் என்றேன்.

2/28
நானும் தான் அடியார், தினமும் கோவிலுக்கு வருகிறேன், உங்களை மாதிரி தீட்சை மட்டும் தான் வாங்கல மத்தபடி நாம ஒன்னு தான் நீங்க சந்தோஷமா இருக்க நான் மட்டும் கஷ்டபடுறேன் ஏன் இப்படி ?

கடவுளுக்கு ஒரு நியாயம் தருமம் இல்லையா அடியார்களை கூட சமமாக பார்க்கமாட்டாரா என்று கடவுளை திட்டினார்

3/28
நான் பதில் எதும் போசாமல் பதிகம் பாடி சுவாமியை தரிசனம் செய்து விட்டு வந்தேன்,

நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள்,

நானும் 3 வேளை குளிக்கிறேன், 6 வேளை பூஜை பன்றேன்னு இவர்களிடம் சரியான புரிதல் இல்லை,

இங்கு கூட எவனாவது ஜோசியம்ன்னு டீவீட் போட்டா போதும் உடனே அந்த டீவீட்ல,

4/28
குத்தவச்சி வக்காந்துட்டு எனக்கு அந்த ராசி, இந்த நட்சத்திரம், பரிகாரம் சொல்லுங்கனு படுத்துறது அவனும் எதாவுது சொல்லி காசு வாங்குவான்,

ஜோதிடர் சொன்ன எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை.

எதுவும் நடக்கலே..

இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியல

5/28
என கொஞ்ச நாள் பெனாத்திட்டு அங்க விட்டுட்டு வேற ஜோசியரை போய் பார்க்கிறது,

பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்கள் 95% பேர்கள்,

உங்களுக்காக தான் இந்த Thread
நேற்று கோவிலில் பேசிய அடியாருக்கும் சேர்த்து தான்.

ஒரு குட்டி கதை சொல்லி புரியவைக்க முயற்சிக்கிறேன்.

6/28
ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.

நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது.

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.
மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால்

7/28
ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து ஐயோ, அம்மா என்ற குரல் கேட்டது.
மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே,

8/28
யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.

அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.

இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டார்,

9/28
இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும்.

உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர் கடைசியில் ஒரு விறகுவெட்டி தம்பதியினரை அழைத்து வந்தனர்.

இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர் காட்டில் விறகு வெட்டி பிழைப்பது,

10/28
இவர்கள் தொழில் என்று மன்னனிடம் கூறினார்கள்.

மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி,

என்னை மன்னித்து விடுங்கள்.
நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை.

அறியாமல் நடந்த தவறு இது.
போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது,

11/28
ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்,

தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான்.

அடுத்த நொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம்,

12/28
இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.

ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.

பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.

13/28
மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன்.

நான் தண்டிக்கப் படவேண்டியவன் பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை விட்டு விடுகிறேன் நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான்.

இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.

14/28
அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள்.

மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்

என்று தனது கிரீடத்தை கழற்றி இந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்

15/28
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி மற்றவர்களும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது?

மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது,

செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

16/28
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான் ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது மன்னரை கொல்ல வேண்டும் அப்படித்தானே?

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே

17/28
நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல…

என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?

ஐய்யய்யோ
அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப் போகிறான் போலிருக்கிறதே என எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.

விறகுவெட்டி தொடர்ந்தான்…...?

18/28
நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை தான் செய்த தவறுக்காக மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன் அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார்.

19/28
அது ஒன்றே எனக்கு போதும்.
மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை.

ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.

நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.

அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால்,

20/28
என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.

மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது,

எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு,

21/28
இப்படி ஒரு பெருந் தன்மையா?
இப்படி ஒரு ஞானமா என்று வியந்து போனார்கள் அனைவரும்.

இந்த கதை கூறும் நீதி.

அந்த மன்னன் தான் நாம்.

நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.

அந்த விறகுவெட்டி தான் இறைவன்.

இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.

22 /28
பெரும் பாவத்தை செய்து பரிகாரம் செய்துவிடுவோம் என்று  ஆணவத்தால் பணத்தாலோ ஆடம்பர யாகங்களாலோ ஆண்டவனுக்கு வெள்ளி தங்க ஆபரணங்களை செலுத்தினாலும் சரி அர்ச்சகரையோ அல்லது அந்த ஆலயத்தை சார்ந்தவரை வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்

ஆண்டவனை ஒரு நொடி கூட திரும்பி பார்க்க வைக்க முடியாது.

23/28
ஆனால்,

இந்த கதையில் வரும் மன்னன் நிலையில் நின்று,

ஆண்டவா,

மனதுக்குள் வேறு எந்த சிந்தனையுமின்றி நீங்கள் செய்த தவறை, நினைத்து, அறியாமல் நடந்த  தவறை எண்ணி வருந்தி மனமுறுகி, இனி எக்காலத்திலும் இது போல் நிகழாவண்ணம் நான் பார்த்துக்கொள்கிறேன்.

இந்த ஒரு முறை மன்னித்து விடு

24/28
என உளமுருகி மன்றாடி கேளுங்கள்.

ஆண்டவன் முன் நீங்கள் கண்
மூடி மனம் வருந்தி வேண்டும்போது ஆண்டவன் உங்களை கண்திறந்து பார்ப்பான்.
கருணை புரிவான்.

நீங்கள் இதை உணர்வு பூர்வமாக பெற்று விடுவீர்கள்.

இப்படி செய்யும்  பரிகாரங்கள் தான் பலனளிக்கும்.

25/28
ஒரு பரிகாரத்தை எதற்கு செய்கிறோம் என்றே தெரியாமல் அதை இன்று பலர் செய்வது தான் வேடிக்கை,

நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.

நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி…

எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி

26/28
செய்த பாவத்திற்கு மனம் திருந்தி கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய பரிகாரம் என்பது கிடையாது

மனம் வருந்தாமல், சிறு நெருடல், உறுத்தல் கூட இல்லாமல் செய்யும் எந்த பரிகாரமும் பலன் தராது.

மன்னன் விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்து பாருங்கள்.

27/28
இப்படி செய்யும் பரிகாரங்கள் எல்லாம் நல்ல பலனை தரும்,
பரிகாராங்களில் சிறியது, பெரியது என பாகுபாடு கிடையாது
செய்யும் நோக்கமும் மனநிலையும் மட்டுமே முக்கியம்.

சிவாயநம🙏
திருச்சிற்றம்பலம் 🙏

#SSRThreads
#நோக்கம்சிவமயம்

Note: இது அரசியல்வாதி யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை.

28/28

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🐘

SSR 🐘 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

May 16
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-2

இறைவன் பெருவுடையார் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது.

இவ்வகையான கோவில் அமைப்பை
"சாந்தாரக் கட்டடக் கலை" அமைப்பு எனக் கூறுவர்.

#தஞ்சைபெரியகோவில்
#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/22 Image
இத்திருச்சுற்றில் தெற்கில்
அகோர சிவன்,மேற்கில் தத்புருஷர்,வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்க பெற்று சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார்

கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது
மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

2/22
நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.

இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக,

“கதலிகா கர்ணம்’ என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது.

108 பரத நாட்டியமுத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள்,

3/22
Read 22 tweets
May 13
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-1

பெரிய கோவில் பற்றியும் இராஜராஜ சோழரின் பெருமை பற்றியும் பேச இந்த ஆயுள் போதாது,

எனக்கு தோன்றும் போதும், நேரம் கிடைக்கும் போதும் இராஜராஜ சோழனையும் இராஜேந்திர சோழனையும் பற்றி பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.

#நோக்கம்சிவமயம்
#SSRThreads

1/25 Image
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.

திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,

இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,

2/25 Image
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.

சிவபாதசேகரனை வணங்கி திரேட்க்குள் செல்வோம்.

3/25 Image
Read 25 tweets
May 12
நேற்று பக்கத்தில் கோவில் சென்றேன் அந்த கோயில் அடியார்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்,

அவர்களின் பக்கத்தில் அமைதியாக எதும் பேசாமல் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்

(கோவில் சென்றால் மட்டும் இல்லை வர வர அதிகமா யாருடனும் பேச தோன்றுவதில்லை)

#SSRThreads
#நோக்கம்சிவமயம்

1/24 Image
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,

இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,

எல்லாருக்கும் சிறு வயசு தான்.

2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,

சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை

சரி இதை பற்றி தனியாக பேசுவோம்,

3/24
Read 24 tweets
Apr 20
சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:

''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,

#நோக்கம்சிவமயம்
#சீராளன்
#பிள்ளைக்கறி
#அமுதுபடையல்

1/23 Image
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,

இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,

2/23 Image
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

3/23 Image
Read 23 tweets
Apr 18
மகாபாரதம்;

சூதாடி வெல்ல முடியாமல் முடிதுறந்ததால்,

தன் முடிவிழுத்தி முடிவிரித்து
முடியை முடியேன் என
முடிவெடுத்தாள் ஒருத்தி,

குருதியில் ஓடியது குருசேத்திரம்,
முடியாத முடியால் அழிந்தது குருகுலம்,
நடந்து முடிந்தது மகாபாரதம்,

-திரௌபதி

1/4
சிலப்பதிகாரம்;

தன் சிலம்பு ஒன்று சிக்கியதால்
சினம்கொண்டு சீறி முடிகலைத்து
மூர்க்கமாய் எழுந்தாள் இன்னொருத்தி,

முடிவாய் முடிதுறந்தான் பாண்டியன்,

முடியாத அவள் கூந்தலால் தன் கற்பின் வலிமையால் எரிந்து கரியாய் முடிந்தது மதுரை.

- கண்ணகி

2/4
கணவனை வேண்டி
முடியாத தன் நீள் முடியை
முடியாது முடிவாக இருந்தாள்
அசோகவனத்தில் ஒருத்தி,

முடியாத அவள் கூந்தலால்
முடிந்தது அரக்கர் குலம்,

எரிந்து பொரிந்து முடிந்தது இலங்கை.

- சீதை

3/4
Read 5 tweets
Apr 3
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது,

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள் எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

#மூலிகைஅறிவோம்

1/8
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

2/8
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

3/8
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(