ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஒரு அரசியல் விமர்சகர் ஒருவர், "டி.கே.சிவக்குமார் இன்னும் இறுக்கமாக இருப்பதைத்தான் அவரது உடல்மொழி காட்டுகிறதா.? இவ்வளவு ஆன பிறகும் டி.கேவும், சித்துவும் இணைந்து ஆட்சி நடத்த முடியுமா.? வரும் காலங்களில் இருவரின்
தொண்டர்களும் தாக்கிக் கொள்வார்களா.?"
என்றெல்லாம் அரிய பல சந்தேகங்களை முன்வைத்துப் பேசிக் கொண்டிருக்கையில், அவரை இடைமறித்த நெறியாளர் "பெங்களூர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலிருந்து சில நேரடி காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை இப்போது பார்ப்போம்" என்கிறார்...
அந்த நேரடிக் காட்சியைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தொண்டர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக 'ஜெய் சித்தராமையா!', 'ஜெய் டி.கே.சிவக்குமார்!' என்று இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து வாழ்த்து
முழக்கங்களை எழுப்பி நடனமாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான் அதுவரை காங்கிரஸ் தொண்டர்களின் ஒற்றுமை குறித்து பல கேள்விக்கணைகளை தொடுத்து வந்த "அரசியல் விமர்சகரின்" முகத்தில் ஈயாடவில்லை.
காலையில் அரசியல் சங்கிகளின் ஆசையில் காங்கிரஸ் தலைமை மண்ணை அள்ளிப் போட்ட நிலையில், மாலையில் ஊடக
சங்கிகளின் சந்தேகங்கள் மீது நேரலையிலேயே காங்கிரஸ் தொண்டர்கள் சாணியடித்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
நான்கு நாட்களாக காங்கிரஸ் கட்சியை தில்லி ஊடகங்களும் தினமலர்களும் எவ்வளவு கிண்டல் செய்தார்கள்?? எள்ளி நகையாடினார்கள்??
டி கே சிவக்குமாருக்காக எவ்வளவு அனுதாபம்.
வேலிக்கு வெளியே நின்று கொண்டு எத்தனை ஓநாய்கள் தேம்பித் தேம்பி அழுதன!
காமராசர் டேம் கட்டினால்,
எம்ஜிஆர் சத்துணவு போட்டால்
ஜெயலலிதா லேப்டாப் கொடுத்தால்
அது மட்டும் அது அவர்களின் சாதனையாகவும் சொந்த காசாகவும் பார்க்கும் நடுநிலை நாதாரிகள்,
கலைஞர் பாலம் கட்டினால், அண்ணா பெயரில் நூலகம் திறந்தால், வள்ளுவருக்கு சிலை அமைத்தால்
ஊருக்கு ஊர் மருத்துவக் கல்லூரி அமைத்தால்
"அது என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா? அரசு பணம்தானே" என்று நடுநிலை நக்கிகள் கொக்கரிப்பர்.
ஆனால் ஒரு பகுதியின் தேவை, இன்னும் 50 ஆண்டு கழித்தும் எப்படி இருக்கும், என தொலைநோக்குப் பார்வையுடன்
திட்டங்களை தீட்டியவர் கலைஞர்
தன் மாநில அதிகாரத்திற்கு உட்பட்டும், மத்திய அரசோடு கெஞ்சியும் மிரட்டியும் கொண்டு வந்த திட்டங்கள் பல..
இந்தியாவை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் கடல் பாலத்தை இந்திரா கட்ட தீர்மானித்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்தவர் கலைஞர்.
பிஜேபி கங்கை ஆற்றில் ஒரு பாலம் கட்டவே துப்பு இல்லை
ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்
அதில் "தமிழக_அரசில் மேலோங்கி இருந்த #பிராமண ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.
ஆனால் அதைத்தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை"
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.
#நெல்சன்மண்டேலா கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும்.
கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்
ஐ ரோபோட் என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், " உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?" என்பார்