ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஒரு அரசியல் விமர்சகர் ஒருவர், "டி.கே.சிவக்குமார் இன்னும் இறுக்கமாக இருப்பதைத்தான் அவரது உடல்மொழி காட்டுகிறதா.? இவ்வளவு ஆன பிறகும் டி.கேவும், சித்துவும் இணைந்து ஆட்சி நடத்த முடியுமா.? வரும் காலங்களில் இருவரின்
தொண்டர்களும் தாக்கிக் கொள்வார்களா.?"
என்றெல்லாம் அரிய பல சந்தேகங்களை முன்வைத்துப் பேசிக் கொண்டிருக்கையில், அவரை இடைமறித்த நெறியாளர் "பெங்களூர் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திலிருந்து சில நேரடி காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை இப்போது பார்ப்போம்" என்கிறார்...
அந்த நேரடிக் காட்சியைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தொண்டர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக 'ஜெய் சித்தராமையா!', 'ஜெய் டி.கே.சிவக்குமார்!' என்று இரண்டு தலைவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து வாழ்த்து
முழக்கங்களை எழுப்பி நடனமாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான் அதுவரை காங்கிரஸ் தொண்டர்களின் ஒற்றுமை குறித்து பல கேள்விக்கணைகளை தொடுத்து வந்த "அரசியல் விமர்சகரின்" முகத்தில் ஈயாடவில்லை.
காலையில் அரசியல் சங்கிகளின் ஆசையில் காங்கிரஸ் தலைமை மண்ணை அள்ளிப் போட்ட நிலையில், மாலையில் ஊடக
சங்கிகளின் சந்தேகங்கள் மீது நேரலையிலேயே காங்கிரஸ் தொண்டர்கள் சாணியடித்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
நான்கு நாட்களாக காங்கிரஸ் கட்சியை தில்லி ஊடகங்களும் தினமலர்களும் எவ்வளவு கிண்டல் செய்தார்கள்?? எள்ளி நகையாடினார்கள்??
டி கே சிவக்குமாருக்காக எவ்வளவு அனுதாபம்.
வேலிக்கு வெளியே நின்று கொண்டு எத்தனை ஓநாய்கள் தேம்பித் தேம்பி அழுதன!
கர்நாடக தேர்தலில் திருப்புமுனை ஏற்படுத்திய பொது ஜனங்களின் பிரதிநிதி
திரையில் அநியாயத்தை எதிர்க்கும் ஹீரோக்கள் வாயை மூடிக் கொள்ள இந்த வில்லன்
கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பிஜேபியை குற்றம் சாட்டி ஹீரோ ஆனார்
அதற்காக லக்னோவில் அவர் மேல் வழக்கு போட்டனர்
2017 செப்டம்பரில் சங்கிகளை எதிர்த்த மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொலையில் மோடியின் மௌனத்தை கேள்வி கேட்டதிலிருந்து பிரகாஷ் ராசின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.
அதற்கு அவர் கொடுத்த விலை அதிகம்
கான்களும், கபூர்களும் சங்கியாகவே மாறிவிட்ட பாலிவுட்டில் தெற்கிலிருந்து எழுந்த எதிர்ப்பு அசவுகரியம் ஏற்படுத்த,
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பிசியாக இருந்த பிரகாஷ் ராஜூக்கு,
பாலிவுட் கதவுகள் முதுகெலும்பெற்ற கோழைகளால் அடைக்கப்பட்டது.
திமுக தொண்டர்களுக்கு புனிதஸ்தலம் என்றால் அது கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் தான்…
ஒரு கட்சி தலைமையகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கட்டப்பட்டது
1949 இல் தொடங்கப்பட்ட திமுகவுக்கு முதல் அலுவலகம் சென்னை ராயபுரத்தில் "அறிவகம்" பின்பு
தேனாம்பேட்டையில் 1964ல் "அன்பகம்" உருவானது, என்றாலும் கட்சியின் பிரம்மாண்டத்திற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அலுவலகம் தேவை, பெரிய கட்டிடம் தேவை எனவே 1972ல் அண்ணா சாலையில் 86 கிரவுண்ட் நிலத்தை வாங்கி 1980ல் பணியைத் தொடங்கினார் கலைஞர்.
நிதி பிரச்சினையால் வேலை அசை போட்டது,
1984ல் அரசினர் தோட்டத்தில் இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை MGR பறித்தபோது அறிவாலயம் கட்டுமானப்பணி விஸ்வரூபம் எடுத்தது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிதி திரட்டித் தர 20/07/1985 தலைவர் எழுதிய உணர்ச்சிகரமான கடிதம் அந்த ஒரு வருடத்தில் 96 லட்சம் குவிய வழிவகுத்தது.