"தண்ணீர் விற்பனைக்கான பொருள் அல்ல"
"தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது"
பல வருடங்களுக்கு முன் கடைகளில் தண்ணீர்க் குப்பிகள் இல்லை.. கேண்களில் தண்ணீர் விற்க்கும் அவலமும் இல்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு எனும் பேச்சே இல்லை..நீர் நிலைகளே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது...
ஆனால் இன்று நேர்மாறாக இருக்கிறது. காரணம் நீர் நிலைகள் முறையாக பாதுகாத்து பராமரிக்கப்படாததே.
ஓடும் நீரைத் தடுத்து #கல்லணை கட்டிய நம் முன்னோர்கள் எங்கே? நீர் நிலைகளைத் தொலைத்துவிட்டு/பராமரிக்காமல் விட்டுவிட்டு குப்பிகளில் விற்கப்படும் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டும்,
காலிக்குடங்களுடன் தெருவில் நிற்கும் நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களான நாம் எங்கே? #கொடுமை
தண்ணீரை வைத்து மிகப்பெரிய அரசியல் நம்மைச் சுற்றியே நடக்கிறது.. போதிய விழிப்புணர்வின்மையால் நாமும் சாதாரணமாக கடந்து போகிறோம்.. நீர்நிலைகளின் அழிப்பே தண்ணீர் வியாபாரத்திற்கு மூல தனம்..
அதோடல்லாமல் தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை உணர வேண்டும் .. பறவைகள் எங்கே போய் காசு கொடுத்து தண்ணீரை வாங்கி குடிக்கும்??
பறவையினங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் அரிந்தால் இயற்கைச் சமநிலை கெட்டு இறுதியில் நாமும் கெட்டழிவோம் என்பதனை உணர வேண்டும்.
ஆக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வழியில் ஏரி குளம் கிணறுகள் கண்மாய்கள் ஆறுகள் என அனைத்தையும் முறையாகப் பராமரிப்போம்..
தூர்வாறுதல், வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு, கரைகளை உயர்த்துதல், கரைகளில் மரபு சார்ந்த மரங்களை நடுதல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுப்போம்..
நடிகர்களைப் பற்றியும் , தேவையற்ற விசயங்களிலும் செலவிடும் நம் நேரத்தை நம் வருங்காலம் வளமுடன் வாழ செலவிடுவோம்..
"இளைய சமூகமே விழித்துக்கொள்..
இனியொரு விதி செய்ய.."