அன்பெழில் Profile picture
May 22 29 tweets 8 min read Twitter logo Read on Twitter
#ஆவுடையார்கோவில்_ஸ்ரீஆத்மநாதசுவாமி #மாணிக்கவாசகர்
49 கோடி பொன்னை தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரையில் உள்ள மீமிசல், மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய Image
ஒரு லட்சம் அரபு நாட்டுக் குதிரைகளை வாங்கிவருமாறு தனது அமைச்சர்களில் வயதில் இளையவரான #திருவாதவூரருக்கு உத்தரவிட்டார் #முதலாம்_வரகுணபாண்டியன். பொ.யு 8-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் முதலாம் வரகுணபாண்டியன். மதுரைக்கு கிழக்கே 30 கிமீ தூரத்தில் உள்ள
சிவத்தலம் #திருவாதவூர். அங்கு அமாத்திய பிராமண குலத்தைச் சேர்ந்த சம்பு ஆசுருதர், சிவக்ஞானரதா என்னும் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் திருவாதவூரர். தனது 8ஆவது வயதிலேயே குரு உபதேசம் பெற்று, திராவிட மொழிகள், வடமொழி, தீட்சா, சிவாகம மந்திரங்கள், நால்வகை வேதங்கள், அர்த்த சாஸ்திரங்கள்,
புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றில் தேர்ச்சி பெற்று பெரும் அறிஞராக விளங்கினார் திருவாதவூரர். இவரது அறிவாற்றலையும் திறமைகளையும் கேள்வியுற்ற வரகுணபாண்டியன், இள வயதினர் என்று கருதாமல் இவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டான். (சில குறிப்புகள் இவரை முதலமைச்சராகவே அமர்த்திக் கொண்டான்
என்றும் உள்ளன) திருவாதவூரரின் திறமைகளைக் கண்டு வியந்த வரகுணபாண்டியன், அவருக்கு #தென்னவன்_பிரம்மராயன் என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தான். 49 கோடி பொன்னுடன் புறப்பட்ட திருவாதவூரர் ஆலவாய் அப்பனையும் மீனாட்சி அம்மையையும் தரிசித்துவிட்டு, கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களை நோக்கி
பரிவாரங்களுடன் பயணமானார். வாதவூரர் தினமும் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யும் வழக்கத்தைக் கொண்டவர். திருப்பெருந்துறைக்கருகில் வந்தபோது, தனது நித்தியக் கடனான இறைவழிபாடு செய்ய சிவாலயத்தைத் தேடிச் சென்றார். அங்கிருந்த #மொய்யார்_தடம்_பொழில் என்ற திருக்குளத்தில் மூழ்கி எழுந்ததும்,
தன்னை மறந்த ஒரு பரவசநிலையை அடைவது போன்ற உணர்வும், உள்ளம் ஒடுங்குவது போலவும், எதிலும் நாட்டம் கொள்ளாத பற்றற்ற நிலையும் தன்னுள் ஏற்படுவதை உணர்ந்தார் வாதவூரர். தனக்குள் ஏற்படும் இந்த மாற்றத்திற்குக் காரணம் அறிய முற்பட்ட வாதவூரருக்கு சிறிது தூரத்தில் சிவாகம ஒலியும் திருவைந்தெழுத்து
முழக்கமும் கேட்க, அத்திசை நோக்கிச் செல்லலானர். குருந்த மரங்கள் நிறைந்த சோலையில் ஒரு மரத்தின் அடியில் சிவபெருமானையொத்த ஒரு பெரியவர் தென்திசை நோக்கி அமர்ந்து, 999 சிவனடியார்கள் சூழ்ந்து அமர்ந்திருக்க, சிவ போதம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு மனம் கசிந்துருகி தன்னிலை மறந்து,
'இவரே என்னை ஆட் கொள்ள வந்த இறைவன்' என்றுணர்ந்து, தான் வந்த காரியத்தை யும் மறந்து, அந்த ஞானாசிரியனிடம் அடைக்கலம் புகுந்தார். வாதவூரரின் வருகைக்காகவே காத்திருந்தது போன்று குருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த ஞானாசிரியனாகிய இறைவன், அவரைத் தனது மந்திரக் கண்களால் பார்த்து, செவிகளில் Image
திருவைந் தெழுத்தை ஓதி, தனது வலது திருவடியினை வாதவூரரின் சென்னியின் மேல் வைத்தார். இறைவனே நயன தீட்சை, பஞ்சாட்சர தீட்சை, சென்னி தீட்சை என்ற மூன்று தீட்சைகளையும் அளித்தது பக்தி வரலாற்றில் காணாதவொன்று. இதனை வாதவூரர்,

"வானோர்க்கும் அறியாததோர்
வளம் ஈந்தனன் எனக்கே"

என அகச்சான்றாகப்
பாடி உருகிப் போகிறார். மூன்று தீட்சைகளையும் இறைவனே அளித்ததோடு, அவரது திருவடி ஸ்பரிசமும் பெற்றவர் #மாணிக்கவாசகர் மட்டுமே. அன்று முதல் தன்னை மறந்தார். வரகுணபாண்டியனின் கட்டளையையும் மறந்து சிவத்தொண்டில் ஈடுபடலானார். திருப்பெருந்துறையில் ஏற்கெனவே ஒரு சிவாலயம் இருந்தது எனவும் அதனை Image
மாணிக்க வாசகர் புதுப்பித்தார் எனவும் குறிப்புகள் உண்டு. ஆனால் தத்துவார்த்தமாக உருவாக்கப்பட்ட தற்போதைய ஆவுடையார் கோவில், மாணிக்கவாசகரால் தோற்றுவிக்கப் பட்டதாகவே கொள்ள வேண்டும். தான் குதிரைகள் வாங்க கொண்டு வந்த 49 கோடி பொன்னை ஆவுடையார் கோவில் கட்டுவதிலும் சிவனடியார்களுக்கும்
செலவிட்டார். சுமார் 1150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் தத்துவங்களோடு கூடிய கலை நயம் பொருந்திய சிற்பங்கள் காண்போரைப் பரவசப் படுத்துபவையாகும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் நாம் காண்பது குரங்கு மற்றும் உடும்பின் சிற்பங்களாகும். மனக்குரங்கை அமைதிப் படுத்தி, உடும்புப் ImageImage
பிடியாக இறைவனது பாதங்களைப் பற்ற வேண்டும் என்பதைக் காட்டுகின்றன இந்தச் சிற்பங்கள். இதனைக் கடந்து சென்றால் மற்ற சிவாலயங்களில் உள்ளதுபோல் கொடிமரம், பலிபீடம், ரிஷபம் என்று எதுவும் கிடையாது. நேராகக் கருவறை தெரிகிறது. கருவறையில் லிங்கம் இல்லாமல் ஆவுடையார் மட்டுமே உண்டு. இறைவன் உருவம் ImageImage
இல்லாதவன் என்பதை இது விளக்குகிறது. மேலும் இறைவனைத் தரிசிக்க வருவோர்க்கு இடையில் யாரும் தேவை யில்லை என்ற தத்துவத்தையும் திருப்பெருந்து றையிலுள்ள ஆவுடையார் கோவிலில் மட்டுமே காண முடியும். நம்பியார் என்ற வகுப்பினர் தீபாராதனை செய்து ஆவுடையார் முன் வைத்து விடுவார்கள். ஆன்மாவின் நாயகனான
இறைவனுக்கு ஆவுடையார் முன் புழுங்கலரிசி அன்னத்தை சுடச்சுட நைவேத்தியம் செய்து, ஒரு பெரிய பலகையில் ஆவி பறக்க கொட்டுகிறார்கள். அவித்த நெல் முளைக்காது என்பது போன்று, ஆவுடையார் கோவிலில் ஆத்மநாதனை வணங்குபவருக்கு மறுபிறவி இல்லை என்ற தத்துவத்தை இது காட்டுகிறது. அரூபமாகக் காட்சி தரும் (59)
அருள்மிகு யோகாம்பிகைக்குத் தனிச் சந்நிதியுண்டு. பலகணி வழியாகத் தரிசிக்க வேண்டும். இங்கு மாணிக்கவாசகருக்கு தனிச்சந்நிதியும் உண்டு. தென் திசை ஞானத்தில் சிறந்தது என்பர். அதை உணர்த்த ஆவுடையார் கோவில் தென் திசை நோக்கியே உள்ளது. இதுபோன்றே சிதம்பரமும் திருவரங்கமும் தென்திசை நோக்கிய
ஆலயங்களாகும். இச்சிறப்புகளுக்கு எல்லாம் மேலாக, உலகில் எங்கும் காண முடியாத அதிசயம் இக்கோவிலில் உண்டு. கருவறையில் அரூபமாக உள்ள மூலவர் அருள்மிகு ஆத்மநாதருக்குப் பதிலாக உத்சவ மூர்த்தியாக சிவானந்த மாணிக்கவாசகர் தான் ரிஷப வாகனத்திலும் தேரிலும் வீதி உலா வருகிறார். மனிதன் ஒருவன்
சிவனாரின் திருவருளால் பணி கொள்ளப் பட்டு உற்சவமூர்த்தியாக விளங்கி வரும் சிறப்பு திருப்பெருந்துறை ஆலயத்திற்கு மட்டுமே உண்டு. ஆண்டுக்கு இரண்டு முறை- அதாவது மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் இவ்வாறு பவனி வருகிறார் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகரை தெய்வமாக வழிபடுவது இங்கு மட்டுமே. தன் ஆன்மா Image
இறைவன் சம்பந்தத்தால் மேன்மையுற்றது போல், அனைத்துயிர்களும் ஆன்ம மேன்மையடைய வேண்டுமென்ற தத்துவார்த்தங்களோடு இத்திருக்கோவிலை நமக்கு அளித்துள்ள மாணிக்கவாசகர்- குருந்த மரத்தடியில் ஞானாசிரியன் பணித்தவாறு,
"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள்
வாழ்க"
என்று சிவபுராணத்தில் தொடங்கி 51 தலைப்புகளில் நான்கு அகவல்கள் உட்பட 658 பாடல்கள் கொண்ட திருவாசகம் என்ற பக்திப்பனுவலைச் செய்தார். திருவாசகத்தை #தமிழ்_மாமறை என்று அறிஞர்கள் போற்று கின்றனர். 400 பாடல்களைக் கொண்ட திருக்கோவையார் என்ற நூலை தில்லை அம்பலத்தான்மீது பாடியுள்ளார்
மாணிக்கவாசகர். ஆவுடையார் கோவில் சிற்பங்கள் அற்புதமானவை. இங்குள்ள கல் கொடுங்கைகள் (நற்ர்ய்ங் நன்ய் ள்ட்ஹக்ங்), கல் சங்கிலிகள் வேறெங்கும் காணுதல் அரிது! இச்சிற்ப வேலைப்பாடுகள் நுண்ணியவை ஆகும். அந்நாளில் சிற்பிகள் ஒப்பந்தம் செய்யும் போது திருப்பெருந்துறை, திருவீழிமிழலை, வௌவால் நந்தி Image
மண்டபம், கடாரங் கொண்டான் மதில், இவை நீங்கலாக மற்ற சிற்பப் பணிகளைக் செய்வோம் என்று எழுதுவார்களாம். அவ்வளவு நேர்த்தியான- மிகவும் அரிதான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது இக்கோவில். 19ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு வந்த ஒரு ஆங்கிலேய அதிகாரி இங்குள்ள கல் கொடுங்கைகள் கல்லில் செதுக்கப்பட்டவை Image
என்பதை நம்ப மறுத்து, தனது கைத்துப்பாக்கியினால் இரண்டு முறை சுட்டுப் பரிசோதித்து(🤦‍♂️) அது கல்தான் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டுப் போனானாம். 2 குண்டுகள் பாய்ந்த கல் கொடுங்கைகள் இன்றும் மூன்றாம் பிராகாரத் தில் இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. வரகுண பாண்டியன் கொடுத்த 49 கோடி பொன்னை Image
ஆவுடையார் கோவில் திருப்பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவிட்டு, குதிரைத் திரள் வாங்கி வரத் தவறிய மாணிக்க வாசகரை சிறையிலிட்டுத் தண்டித்தான் மன்னன். இறைவன் மாணிக்கவாசகர்பால் அன்பு கொண்டு 4 திருவிளையாடல்களை- அதாவது நரியைப் பரியாக்குதல் (58), பரியை நரியாக்குதல் வைகையில் வெள்ளப் Image
பெருக்கிடச் செய்தல் (61), பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்டது (61) ஆகியவற்றைப் புரிந்து மாணிக்கவாசகரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டி அவரை தண்டனைகளிலிருந்து மீட்டார். (775-807) 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், சிதம்பரத்தில் இறைவனுடன் சிதாகாச வெளியில் கலந்தார். சுந்தரர்,
திருத்தொண்டர் தொகையில் 63 நாயன்மார்களில் ஒருவராக மாணிக்கவாசகரைப் பாடவில்லை. 15ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானசுவாமிகள் திருவாசக மேன்மையைப் போற்றி, அதுநாள் வரை மூவராக (அப்பர், சம்பந்தர், சுந்தரர்) இருந்த சமயக் குரவர் வரிசையில் மாணிக்க வாசகரையும் சேர்த்து நால்வராக்கி மகிழ்ந்தார் Image
பன்னிரு திருமுறைகளில் 8-ஆவது திருமுறையாக இருப்பது திருவாசகம். இன்று எல்லா சைவத் திருத்தலங்களிலும் சிவனடியார் கூட்டங்களிலும் இடையறாது ஒலிக்கு மந்திர வரிகள்,

"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'

என்னும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகளே. ஆவுடையார்கோவில் எனும் Image
திருப்பெருந்துறை புதுக்கோட்டையிலிருந்து தென்கிழக்கில் 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் கிழக்கில் அமைந்துள்ள இத்தலத்திற்கு பஸ் வசதிகள் பல ஊர்களிலிருந்தும் நிறையவே உள்ளன.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 23
#MahaPeriyava
There came a lady from Kerala who wanted to have the darshan of Mahaperiyava. When She was pregnant she fell down and got hurt on her head and from that day she often got fits. She lost her eyesight. They consulted their friend who was a Namboodri. He checked her Image
horoscope and gave assurance that she would get back her eyes and as per his advice she was advised to visit temples from guruvayurappan temple till Kumbakonam Thiruvidaimaruthur temple. So as per the advice of the nambudri she started on a pligrimage and reached Vaitheeswaran
Temple. There when the Gurukal showed the Aarti she slowly kept in our eyes and put rupees hundred as dakshina. Gurukkal was surprised and told her that that this was not rs 10 note and it was it was 100 rupee note. They lady said it doesn't matter. Suddenly the Gurukul asked if
Read 8 tweets
May 23
#மயிலை_கற்பகாம்பாள் #மகாபெரியவா
மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள். Image
அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார். பாட்டி அம்பாளிடம், “அம்மா! உனக்கேது தங்க காசுமாலை. காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் பண்ணச் சொல்றேன்” Image
என்று பதிலளித்தார். திகைப்புடன் பாட்டி, “ஏழையான நான் எப்படி காசுமாலை செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “உன்னால் நிச்சயம் முடியும்” என்று சொன்னார். அத்துடன் கனவு கலைந்து பாட்டி எழுந்தார். கனவில் பெரியவர் இட்ட கட்டளையை தன்னுடன் கோவிலுக்கு வரும் சகபெண்களிடம் பாட்டி
Read 9 tweets
May 23
#ராமநாமமகிமை
1. நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் Image
ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும்.
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே'. கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல மேற்கிலிருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிச் செல்கிறோம்.
4. 'ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க
வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது. நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும் போதும் சொல்ல வேண்டியதும் 'ராம நாமம்.' ஒவ்வொரு
Read 19 tweets
May 23
#MahaPeriyava
Sri Lakshminarayanan, an elderly gentleman 76 years old, living at Maangadu, is blessed to have been staying with Sri Mahaperiyava and performing services to Him for over 40 years. Here is a share of his experience.
Sri Kanchi Maha Periyava was walking along with Image
devotees. Near Luz, Cadres of Dravida Kazhagam were standing with sticks and woods to provoke Him and His devotees. People like T.T.K, Sadasivam were standing tensed and having palpitations thinking about that they would not be able to tolerate if something untoward were to
happen to Sri Maha Periyava.  They requested Sri Maha Periyava not to proceed. Policemen were there for protection. In spite of this, worried about the safety of Him, they pleaded and requested Sri Maha Periyava not to proceed as they feared things might go out of hand. Sri Maha
Read 11 tweets
May 23
#மகாபெரியவா அருள்வாக்கு
நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகை விட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப் பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக் கொண்டு விடுகிறோம். மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் Image
எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். அதே உடலைக் கொண்டே பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேடவேண்டும். சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தம் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். புண்ணியங்களைச் செய்து பாவங்களைக் கரைத்து விடவேண்டும்.
நம் மனதில் எப்போது ஒழுக்கம்,
கட்டுப்பாடு, மனத்தூய்மை எல்லாம் உண்டாகிறதோ அப்போது தான் உண்மையான பக்தியும், ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிபாடு எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
நல்லதையே சிந்தித்து இறையருளைப் பூரணமாகப் பெற்றவன் ஒருவன் உலகில் இருந்தாலும் போதும். அவன் மூலமாக இந்த தேசம் முழுதும் நன்மை
Read 4 tweets
May 22
#கணுவாய்_சீதாராமர்_கோவில் மூலவர்களாக ராமர், சீதை மற்றும் லட்சுமணன், தும்பிக்கை ஆழ்வார். கோவை மாவட்டத்தில் கணுவாய் என்னும் ஊரில் அருள்மிகு சீதா ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. கருவறையில் லட்சுமணன், ராமர் மற்றும் சீதா ஆகிய மூவரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மூலவர்கள் Image
கனிவான பார்வையில் புன்னகை ததும்பும் முகத்துடன் மலர் அலங்காரத்தில் அழகாக காட்சி அளிக்கின்றனர். மூலவர் அருகே பல நூறு வருடங்களாக பூஜிக்கப்பட்ட உற்சவ திருமேனிகள் சேவை சாதிக்கின்றனர். மூலவரின் எதிரே இருகரங்களை கூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் அனுமன் காட்சியளிக்கிறார்.கருவறையின் மீது
நரசிம்மர், பெருமாள் மற்றும் சுதைச் சிற்பங்களுடன் கூடிய விமானம் அமைந்துள்ளது. இத்தல விநாயகர் தனிச்சன்னதியில் அழகாக காட்சியளிக்கிறார். இத்திருக்கோயில் கிழக்கு முகமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் முன்மண்டபம், மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் உள்ளன. மகாமண்டபத்தின் மேல் உள்ள 4
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(