#ராம_நாம_மகிமை #சத்ரபதி_சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் நதியில் இறங்கி சிவாஜி கை, கால்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில்
எழுதப் பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக்கொண்டு
இருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுகளும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன. மஹாஞானியின்
வாக்கிலிருந்து வெளிப்பட்ட இராம மந்திர இசை ஓசையில் ஆற்றின் சலசலப்பும் மரங்களின் இலைகள் அசைகின்ற ஓசையும் அடங்கிப் போய்விட்டன. அதுவரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அவர் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார். அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார்
அவர் ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். “குருநாதா! அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள்!” என வேண்டினார். அப்போது தான் அந்த ஞானியின் திருநாமம் #சமர்த்த_ராமதாசர் என்பதை சிவாஜி அறிந்து கொண்டார். தகுதி உள்ளவர்கள் வந்து உபதேசம் செய்யும்படி கேட்டால் அதை மறுக்கக்
கூடாது. உபதேசம் செய்ய வேண்டும். அதனால் சமர்த்த இராமதாசர் சிவாஜிக்கு இராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார். குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் இராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார். ஒரு நாள். சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த இராமதாசர் தங்கி
இருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில்
பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார். அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள். சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார். சமர்த்த இராமதாசர் கற்றுக் கொடுத்த இராமநாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன்
பாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு இராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். எந்த நேரமும் சிவாஜியும் அவரது
படையும் கைது செய்யப்படலாம் என்ற அந்தச் சூழ்நிலையில், அந்த இரவு நேரத்தில், காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன. முகலாயப் படை திகைத்தது. இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது என்ற அதிர்ச்சியில் முகலாய
படை சிதறிப் போய் சின்னா பின்னமாகி ஓடியது. சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. ஆஞ்சனேயரே வந்து தம்மைக் காப்பாற்றி இருக்கிறார் என உணர்ந்தார். அதனால் விடிந்ததும் சிவாஜி நேரே போய் சமர்த்த இராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறினார். மஹா ஞானியான சமர்த்த இராமதாசரின் மகிமையை
விளக்கும் மற்றொரு நிகழ்ச்சியை பார்ப்போம். ஒரு சமயம் வீர சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த இராமதாசர் சிவாஜியின் அரண்மனைக்கு வந்தார். அந்த நேரத்தில் சமர்த்த இராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த இராமதாசரிடம் அனுமதி
கேட்டார். அதற்கு “நானே பறித்துத் தருகிறேன்” என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார் சமர்த்த இராமதாசர். அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள், “இவர் பெரிய ஞானிதாம். ஆனால் கல்லை
எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே!” என்று பரவலாகப் பேசினார்கள். அதைக்கேட்ட சமர்த்த இராமதாசர் இராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தில் பாடினார். பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார். அந்தப் பறவை
உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது. ஹிந்துஸ்தானி இராகமான ‘ஜன்ஜூட்’ என்ற இராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் நிலவி வரும் நம்பிக்கை. கர்னாடக சங்கீதத்தில் அதே சாயலுடைய ‘செஞ்சுருட்டி’ என்ற இராகம், பக்தி பாவத்துடன் பாடப்படுமானால் மனோ ரோகங்களைப் போக்க
வல்லதாக இருக்கிறது. சமர்த்த இராமதாசர் இறந்து போன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது. அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது. அவன் மனைவிக்கு சித்தப் பிரமை. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம்
மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தான். அப்படிப்பட்ட அந்த மன்னன்தான் சமர்த்த இராமதாசரைப் பணிந்து “என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள்!” என வேண்டினான். சமர்த்த இராமதாசரும் பார்த்தார். இந்த மன்னனை நல்வழிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அவர்,
மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ‘மால் கவுஞ்ச்’ என்ற இராகத்தில் இராம பஜனை செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த இராமதாசர். முகலாய மன்னன் வெட்கித் தலை குனிந்தான். ஹிந்துகளுக்கு
தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த இராமதாசரிடம் முறையிட்டான். இராமதாசர், “மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ‘ ராம்ராம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டார். அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம், மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள்
ஒருவருக்கொருவர் ‘ராம்! ராம்!’ எனச் சொல்லிக் கொண்டார்கள். மஹாஞானியான சமர்த்த ராமதாசரின் நல்லிசையால் அவர் பெற்ற இராம பக்தியால் நம்தேசத்தில் ஒரு ஹிந்து சாம்ராஜ்ஜியமே நிறுவப்பட்டது.
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#காசியில் இறந்தால் #முக்தி, மோட்சம் என்பது இந்து மதத்தினரின் ஆழ்ந்த நம்பிக்கை. பல வயதானவர்கள் தங்கள் அந்திம காலத்தை அங்கே கழிக்க பெரும் ஆவல் உண்டு. இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கென்றே தங்குவதற்கு காசியில் பல இடங்கள் உண்டு. அதில் ஒன்று #காசி_முக்தி_பவன் அங்கே ஒரு விசித்திரமான விதி
உண்டு. 15 நாட்களுக்குதான் தங்க அனுமதிப்பார்கள். அதற்குள் இறப்பு இல்லை என்றால் அறையை காலி செய்து விட வேண்டும். முக்தி பவனின் மேனேஜர் திரு சுக்லா. 44 வருடங்களாக அங்கே பணிபுரிகிறார். சுமார் 12,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பார்த்திருக்கிறார். அவர் தன் அனுபவத்தில் சொன்னது, “வாழும்
போதே அவ்வப்போது வரும் பிரச்னைகளை சரி செய்து விட வேண்டும். (குடும்பத்துடன், உறவுகளுடன், மற்றவர்களுடன்) அதை விட்டு விட்டு இந்த முக்தி பவன் வரும் வரை (இறுதிக் காலம் வரும் வரை) வாழ்நாள் எல்லாம் அதை சுமந்து கொண்டு மனதளவில் அடிபட்ட காயங்களோடு இங்கு கடைசி நேரத்தில் அடைக்கலம் ஆகிறார்கள்.
#மகாபெரியவா
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன். வைதீக முறைப்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருக்கு வேலை தேட வேண்டிய கட்டாயம். திருப்பத்தூரில் வேலைக்கு ஒரு இண்டர்வியூவிற்காக
அழைப்பு வந்தது. ஜோலார்பேட்டையில் டிரெயினைப் பிடித்துப் போக வேண்டும். ஸ்டேஷனுக்கு வந்தவர் டிக்கெட்டும் வாங்கி விட்டார். ஸ்டேஷனுக்குள் நுழையும் முன், அவர் கண் எதிரே ஒரு வயதான மனிதர் மயங்கிச் சுருண்டு விழுந்தார். லட்சுமணன் அருகில் போய், அவருக்கு வேண்டிய முதல் உதவிகளைச் செய்து அவரை
கண் விழிக்கச் செய்தார். அதற்குள் ரயில் போய் விட்டது. அடுத்த ரயிலில் போவதற்குள் இண்டர்வியூ நேரம் முடிந்து விடும். அதனால் இனி அங்கே போய் பலன் இல்லை என்று ஊர்த் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார். எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும்
#Foodforthought
If one reads Bruce H. Lipton’s The Biology Of Belief, one will think a dozen times before saying something demoralizing to oneself or to the people around. In this book, Mr. Lipton details the power of conscious & subconscious mind. The subconscious mind is The
million times more powerful than the conscious mind & decides most of the things in our lives according to the beliefs it has. Many times we fail to change an unpleasant habit despite our will-power & conscious efforts. It is because the habit gets so strongly programmed in our
subconscious mind that the efforts made by our conscious mind hardly make any difference. Conscious Mind is just a shadow of our Unconscious Mind. The tribals of Solomon Islands curse a tree, actually installing negative & harmful beliefs in the tree’s emotion (yes, trees have
#குருவாயூர்#ஜனமேஜயன் மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு
செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால்
பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் விக்ரகத்தை
#MahaPeriyava
Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
We lived in Mylapore then. Every morning and evening, twice a day, I would go to the Kapāleeśwara temple for Śiva darśan. Periyava would have bouts of pain in his chest. Ramakrishnaiyer,
the homeopath–he was not a doctor - would consult his Homeopathy dictionary and give some small white pills. Periyava would take the pills for two days or so and then would find some relief. That was the time when Ayyappa and Sabarimala were becoming popular. Crowds dressed in
black dhoti would come to the temple. We associate black clothes with DK (Dravida Kazhagam, a political party), so I was puzzled. I made enquiries and one of them said, “Oh, don’t you know! We are going to Sabarimala. Such a powerful diety! Those without children are blessed with