#குருவாயூர்#ஜனமேஜயன் மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு
செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால்
பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் விக்ரகத்தை
பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடத்தைத் தேடியவாறு கேரள நாட்டிற்கு வந்தார்கள். தற்போது குருவாயூர் கோவில் இருக்கும் இடத்தை பார்த்த இருவரும் இந்த இடம் இவ்வளவு ரம்மியமாக இருக்கிறதே என்று பிரமித்து கூறினர். நம் சுவாமியை இங்கேயே பிரதிஷ்டை செய்யலாம் என்று முடிவு எடுத்தார்கள். இருவரும்
பரசுராமரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். பரசுராமர் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரசுராமரிடம் கிருஷ்ணரின் விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய முடிவெடுத் திருக்கிறோம். இங்கு பிரதிஷ்டை செய்ய தக்க இடத்தைக் காட்டுங்கள் என்று கேட்டனர். மூவரும் சரியான இடத்தை பார்த்துக் கொண்டிருந்த போது
ருத்ர தீர்த்தத்தின் அருகே சிவபெருமான் உமையுடன் வீற்றிருந்தார். மூவரும் அவரைப் பணிந்து வணங்கி நின்றார்கள்.
அப்போது சிவ பெருமான் இங்கேயே விஸ்வகர்மா உதவியுடன் ஒரு கோவில் எழுப்பி இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள். அனைவருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று ஆசி வழங்கினார்.
அதன்படி கோவில் எழுப்பப்பட்டது. கிருஷ்ணரின் விக்கிரகத்தை குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்தார்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகம் செய்தார். சிவ பெருமான் அதனருகில் உள்ள ஓர் இடத்தில் எழுந்தருளி #மம்மியூர்_மகாதேவர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க
ஆரம்பித்தார். பரசுராமர் ஜனமேஜயனை அழைத்து, ஜனமேஜயா உன் நோய் நீங்க பக்தியுடன் நீ தினமும் இந்த புஷ்கரணியில் நீராடு. கிருஷ்ணரைக் குறித்து தவமியற்று. குருவாயூரப்பனின் திருவருளால் நீ விரைவில் குணமடைவாய் என்று கூறினார். ஸ்ரீ கிருஷ்ணனரையும் மம்மியூர் மகாதேவரையும் அன்னை பார்வதியையும்
தினமும் ஜனமேஜயன் வழிபட்டு வந்தார். சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அவர் முன் தோன்றி ஜனமேஜயா உனது தவம் பலித்தது. இனி உன் நோய் குணமாகி விடும் என்று கூறினார். நோய் முற்றிலும் நீங்கிய ஜனமேஜயன் சிறந்த முறையில் ஒரு கோயிலை அமைக்க வேண்டும் என்று குருவாயூரப்பனுக்கு
சிறந்த கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். பின்பு மக்களிடம் உடல் நலம் குன்றியவர்கள் இந்த புஷ்கரணியில் நீராடிப் பக்தியுடன் குருவாயூரப்பனை வழிபட்டு வந்தால் அவர்களது நோய் நீங்கிவிடும் என்று அறிவித்தார். நாமும் நம் உடல் நலம், மன நலம் மேம்பட ஸ்ரீ குருவாயூரப்பனை வணங்கி வாழ்வில் உயர்வு
பெறுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு முறை நாரத முனிவர், வைகுண்டம் சென்று லஷ்மி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லஷ்மி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று
வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லஷ்மி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார்.
இதை எதிர்பாராத லஷ்மி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று
கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லஷ்மி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லஷ்மி தேவி,
#நீலகண்டப்_பிள்ளையார்_கோவில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பொ.யு.1825-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த
துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆதலால் சிகிச்சைக்காக திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்) செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரச பரிவாரங்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் தனது
பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்டப் பிள்ளையாருக்கு சங்கரன்கள் 2 பேர் பூஜை செய்வதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார். உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்கு உள்ள நோயை பற்றி சங்கரன்களிடம் கூறினார். உடனே அவர்கள்
#மகாபெரியவா அருள்வாக்கு
மனதிலுள்ள ஆசைகளைக் குறைப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பம் குறைந்து ஆனந்தம் பெருகும். வெளியிலுள்ள பொருட்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வருவதில்லை, நம்மிடையே இருந்து தான் ஆனந்தம் பிறக்கிறது.
உடல் மற்றும் மனரீதியாக செய்யும் பாவத்தை போக்க புண்ணியமான நினைப்புகளை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
துக்கத்துக்கு விதை போட்டுக் கொண்டு இருக்காமல் பாவத்தை போக்க தினமும் ஈஸ்வர தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
உலகத்தில் எவரும் பாவியாக இருக்க விரும்பவது இல்லை, ஆனால், பாவகாரியம் அதிகம் செய்கிறோம். அனைவரும் புண்ணியம் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணியச்
செயல்களைச் செய்வதில்லை.
ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது, அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
ஒருவனிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தக்கூடாது. சிறிய அளவில் குண விசேஷம்
குழந்தைகள் என்றாலே, மகா பெரியவாளுக்கு ரொம்ப இஷ்டம். அவர்களைத் தன் அருகே காந்தம் போல் இழுத்து, அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கவர்ந்து விடுவார். அந்தத் தெய்வத்திடமும் குழந்தைகள்
மயங்கிப் போய் விடும். குழந்தைகளுக்குக் கொடுப்பற்கென்று மகா பெரியவாளிடம் எப்போதும் கல்கண்டு இருந்து கொண்டே இருக்கும். ஒரு முறை மகா பெரியவா, காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு, காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீமடத்தின் வாசலில், பணக்காரக் குடும்பத்தைச்
சேர்ந்த சிறு குழந்தை (நாலைந்து வயது இருக்கலாம்) ஒன்று, குச்சி ஐஸைக் கையில் வைத்துக் கொண்டு ரசித்து, சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஸ்ரீமடத்தின் உள்ளே நுழையப் போன மகாபெரியவா, வாசலில் நின்று கொண்டு, இந்தக் குழந்தை குச்சி ஐஸ் சாப்பிடும் அழகைப் பார்த்து, மேலும் நகராமல் அப்படியே
#ராமநாம_மகிமை
ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி சார்பில் பேட்டி கண்டவர்
ஷங்கர் திருவேதி #ராமர்_பாதம்_பட்ட_குடிசை
அம்மா! அம்மா!
குழந்தைகளின் அலறல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்னு கத்தறீங்க உள்ளே வாங்களேன்.
பாம்பு இருக்குமா
பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.
பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு. உங்களை ஒன்றும் செய்யாது. வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பி துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க. பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
வீடு என்றால் அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம். நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும். காலையில் கண் விழிக்கும்
#காசியில் இறந்தால் #முக்தி, மோட்சம் என்பது இந்து மதத்தினரின் ஆழ்ந்த நம்பிக்கை. பல வயதானவர்கள் தங்கள் அந்திம காலத்தை அங்கே கழிக்க பெரும் ஆவல் உண்டு. இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கென்றே தங்குவதற்கு காசியில் பல இடங்கள் உண்டு. அதில் ஒன்று #காசி_முக்தி_பவன் அங்கே ஒரு விசித்திரமான விதி
உண்டு. 15 நாட்களுக்குதான் தங்க அனுமதிப்பார்கள். அதற்குள் இறப்பு இல்லை என்றால் அறையை காலி செய்து விட வேண்டும். முக்தி பவனின் மேனேஜர் திரு சுக்லா. 44 வருடங்களாக அங்கே பணிபுரிகிறார். சுமார் 12,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பார்த்திருக்கிறார். அவர் தன் அனுபவத்தில் சொன்னது, “வாழும்
போதே அவ்வப்போது வரும் பிரச்னைகளை சரி செய்து விட வேண்டும். (குடும்பத்துடன், உறவுகளுடன், மற்றவர்களுடன்) அதை விட்டு விட்டு இந்த முக்தி பவன் வரும் வரை (இறுதிக் காலம் வரும் வரை) வாழ்நாள் எல்லாம் அதை சுமந்து கொண்டு மனதளவில் அடிபட்ட காயங்களோடு இங்கு கடைசி நேரத்தில் அடைக்கலம் ஆகிறார்கள்.