அதாவது,நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி அதை செய்யாவிட்டால், அந்நாட்டில் பசுக்கள் பால் தருவது குறையும்,அந்தணர்கள் வேதத்தையும் தர்ம சாத்திரங்களையும் மறந்து நெறிதவறுவர் என்பதை அலகாக சொல்கிறார்..
இதையே செங்கோன்மை என்றால் என்னவென்பதற்கு,👇(2)
|| அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ||
அதாவது,அந்தணர்கள் ஓதும் வேதத்திற்கும் அதனால் விளையும் அறத்திற்கும் மூலமுதலாய் நிற்பது மன்னவனுடைய செங்கோல் என்கிறார்.அறத்தின் வழியில் நடக்கும் அரசனாலே செங்கோல் பெருமையை நிலைநாட்ட முடியும் அதுவே நல்லாட்சி..(3)
உலகம் முழுக்க எல்லா பண்பாட்டிலும் இந்த செங்கோல் முறை கடைபிடிக்கப்பட்டு,தற்போது வரை அது நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது,பாரதத்தில் அதன் தன்மை வேறுபட்டதாகவும், மகத்துவமிக்கதாகவும்,கலாச்சார மேன்மை கொண்டதாகவும் உள்ளது.அதனால்தான் இது தர்மதண்டம்..(4)
"மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.." என்கிறது நறுந்தொகை,கீதையில் 10 வது அத்தியாயமான விபூதியோகத்தில் 38 சுலோகத்திலே,"ஆள்பவனிடத்தே செங்கோல் நான்" என்று கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.(5)
தர்மபரிபாலனம் செய்து மாறாத அறத்தை நிலைநாட்டுவதே அரசனுக்கு கடமை என்பதை எல்லா சாத்திரங்களும்,இலக்கியமும் போற்றுகிறது.கொடியவர்களை தண்டித்து மக்களை காப்பது அரசனின் தலையாயக் கடமை.ஒரு விவசாயி களையை நீக்கி பயிரைக் காப்பது போன்ற தேவையாகும்.(6)
இதனாலயே மன்னனிடம் அந்த செங்கோல் வழங்கப்படுகிறது.பாரதத்தில் நூற்றாண்டுகளாக நமது நீதிநூல்களும்,இலக்கியங்களும் விதந்தோதிய வளையாத செங்கோலை அதன் தெய்வீக நெறி மாறாமல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறுவுவது மேன்மையே..(7)
இன்றும்,இங்கிலாந்து - ஆஸ்த்திரேலியா - சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் நாடாளுமன்றத்தில் பழம்பெருமை மிக்க செங்கோல்கள்,நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சபாநாயகரின் நடுவுநிலைக்கும்,ஆட்சியின் அறத்திற்கும் சாட்சியாக அங்கே வைக்கப்பட்டுள்ளது..(8)
இங்கிலாந்தில் நாடாளுமன்ற மேலவை என்பது 'பிரபுக்களின் அவை' (house of lords) அங்கே குருதி வழி உரிமைகோரும் ராஜ குடும்பங்களும்,முன்னாள் உறுப்பினர்களின் வாரிசுகளும்,அதை விட முக்கியமாக கிருஸ்த்தவ தேவாலய பாதிரிமார்களும் வீற்றிருக்கிறார்கள்..(9)
இந்திய தேசத்தை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்களுடைய மேலவையை நடத்தும் வழி இப்படிப்பட்டதுதான் இன்றும்..
ஆனால் ஐரோப்பியர்கள் மதசார்பற்றவர்கள்,உலகிற்கு நீதி சொல்பவர்கள் என்று, தங்கள் சொந்த அடையாளத்தை இந்தியத் தலைவர்களும் அதன் கருத்தியல் நம்மையும் சிதைத்த கொடூரம் சொல்லி மாளாது..(10)
இதன் வீச்சை காங்கிரஸோ அல்லது நேருவோ அன்று உணரவில்லை.அவர்களுக்கு இந்திய பண்பாட்டின் மீதிருந்த கசப்புணர்ச்சியும்,ஐரோப்பிய மோகமும் இந்த தேசத்தின் ஆன்மாவை சிதைத்தது.(11)
ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்,அந்தச் செங்கோலே தனதாட்சியை நிலைநாட்ட வருகிறது என்பதை நம்புகிறேன்.சிந்து சரஸ்வதி நாகரிகத்தில் தோற்றமளிக்கும் ரிஷப முத்திரை,இன்றும் நந்தியாக இந்தச் செங்கோலின் தலையில் வீற்றிருப்பது அறுபடாத பல்லாயிரமாண்டு மரபை எடுத்துரைக்கிறது..(12)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாஜக பட்டியல் பழங்குடி சமூகத்தில் இருந்து திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்திய போது,இதே எதிர்கட்சிகள் மோடியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி அது நடக்காமல் போன விரக்தியில் உளறிக் கொண்டிருந்த யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக முன்னிறுத்தினார்கள்..(1)
தன் காயஸ்த்தா சமூகத்தை ஒடிசாவிலும்,பீஹாரிலும்,உபியிலும் மோடி புறக்கணிக்கிறார் என அகிலேஷ் யாதவ்வோடு கைகோர்த்து பேரணி எல்லாம் நடத்தினார் சின்ஹா..இத்தனைக்கும் இவருடைய மகன் மத்திய அமைச்சராகவும் இருந்தார்..(2)
OBC/SC/ST சமூங்களுக்கான அதிகாரப்பரவலை பாஜக ஏற்படுத்தியதை விரும்பாமல் மோடி மீது வன்மத்தை கக்கிக் கொண்டிருந்த யஷ்வந்த் சின்ஹாவை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிறுத்தி,பாஜகவின் வேட்பாளரான திரௌபதி முர்முவை தோற்கடிக்க வேண்டுமென வேலை செய்தவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்.. (3)
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் 1947 ல் பண்டிட் நேருவிடம் வழங்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீன செங்கோல்,தற்போது பிரதமர் மோடியிடம் புதுப்பித்து வழங்கப்பட உள்ளது..(1)
ஆனால் திமுகவும் அதன் கூட்டணிகளும் இந்த நிகழ்வை புறக்கணிக்கின்றன.இதுதான் சைவத்துக்கும்,தமிழுக்கும், தமிழர்களுக்கும் இவர்கள் தருகிற மரியாதை.
பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி பலமாக எழுந்த பிறகுதான் இந்தியா முழுக்க மடங்களுக்குரிய மரியாதையும்,அதன் செழுமையான வரலாறும் புத்துயிர் பெறுகிறது(2)
இத்தனைக் காலம் நம்மை போர்ச்சூழலில் வாழும் தற்காப்பு பதுங்கு கூடத்தை ஒத்த மனநிலையில் தள்ளிய கொடுங்கரங்கள் இப்போதுதான் பலமிழக்கின்றன.அதற்கு காரணம் இந்த பாரதிய ஆட்சி என்பதை மறக்கக் கூடாது..(3)
திருவாவடுதுறை ஆதீனம் சித்தாந்த சைவ மடங்களில் மிகத் தொன்மையானது.பொயு 15 ம் நூற்றாண்டின் இறுதியில் மூவலூரில் பிறந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகரால் துவங்கப்பட்டது.(1)
ஸ்ரீ மெய்கண்ட சந்தான மரபில் வந்த சித்தர் சிவப்பிரகாச சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட மூவலூர் வைத்தியநாதரே பின் நமச்சிவாய தேசிகராக மாறி மடத்தை நிறுவினார்.இன்று 24 வது பட்டமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.(2)
விஜயநகர அரசு,நாயக்கர் அரசு,தஞ்சாவூர் மராட்டிய அரசு,திருவிதாங்கூர் ராஜ்ஜியம்,சேதுபதி மன்னர்கள் என எல்லா அரச குடும்பங்களுடனும் நெருங்கிய தொடர்பு இருந்தது திருவாவடுதுறை ஆதீனத்திற்கு.(3)
திமுக ஆட்சிக்கு வந்து எப்படி கூட்டணி கட்சிகளின் பேர வலிமையை,மரியாதையை காலி செய்ததோ அதே அளவுக்கு இன்னொரு காரியத்தையும் செய்துள்ளது..(1)
நடுநிலை போர்வையில் இருந்தவர்கள்,ஆன்மீக திராவிடவாதிகள்,சூழலியல் போராளிகள்,திடீர் புரட்சி நடிகர்கள்,வேஷ இலக்கியவாதிகள் என எல்லோரையும் ஒருசேர வெளிப்படுத்திக் காட்டி அவர்களை குழிக்குள் தள்ளிவிட்டது..(2)
அவர்களும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், இப்படிப்பட்டவர்களுக்கும் எதுவும் நஷ்டமில்லையே என்று கேட்பவர்கள் இதை வேறு விதமாக பார்க்க வேண்டும்..(3)
நித்திஷ்குமார் இல்லாமலே 2014 ல் 31 தொகுதிகளை பாஜக கூட்டணி அங்கே பெற்றது..அதற்கும் முன்பு நித்திஷ் பாஜக கூட்டணியில்தான் போட்டியிட்டார்,2019 லும் பாஜகவோடுதான் இருந்தார்..அதே போல பாஜகவோடு இருந்துதான் அவர் மாநில ஆட்சியை அமைத்திருக்கிறார் முன்பும்..(1)
காங்கிரஸிற்கு எந்த சாதகத்தையும் செய்ததில்லை நித்திஷ் குமார்.அதே சமயம் 1980 - 2004 - 2009 என எல்லா முறையும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைக்க உதவிய கட்சி திமுக..2019 ல் இந்தியா முழுக்க விரட்டியடிக்கப்பட்ட கட்சியான காங்கிரஸிற்கு ஒரே ஆறுதலையும்,அடைக்கலத்தையும் கொடுத்த கட்சி திமுக (2)
ஆனால் பீஹார் முதல்வர் நித்திஷ்குமாருக்கு தருகிற மரியாதையைக் கூட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தர ஏன் காங்கிரஸ் தயங்குகிறது?(3)
"அண்ணாமலைக்கு தமிழக அரசியல் புரியவில்லை.மக்களுக்கு ஊழலெல்லாம் ஒரு விஷயமே இல்லை" என்ற வாதமெல்லாம் மிக மேலோட்டமானது..(1)
இது ஒரு வெகுஜனனாக நமது பார்வை..இது ஏன் நமக்கு எழுகிறது என்றால்,நல்லவன் அரசியலில் அவமானப்பட்டு வெளியேறுகிறான் அல்லது அயோக்கிய சுழலில் சிக்கி வீழ்கிறான்..இதையே பார்த்து பழகியவர்கள் நாம்..(2)
'ஆனா ஆளு எமத்திருடன்' என்று கவுண்டமணி போல நக்கல் மொழியிலோ அல்லது புலம்பலிலேயோ நாம் புரையோடிப்போன ஊழல்வாதிகளை கடந்து செல்கிறோம்..இதை வென்றெடுக்கும் வல்லவன் தோன்றவே முடியாது என நம் ஆழ்மனம் நம்புகிற அளவுக்கு வீழ்ந்து கிடக்கிறோம் அல்லது பழக்கப்பட்டிருக்கிறோம்..(3)