#SengolAtNewParliament இதே செங்கோலில் தமிழுக்கு பதில் கன்னடத்தில் எழுதி இருந்தாலோ, கோளறு பதிகத்திற்கு பதில் தெலுங்கில் அன்னமாச்சாரி பாடல்கள் பாடி இருந்தாலோ, ஆதினகர்த்தர்களை போல் ஒடிசா மாநிலத்தில் இருந்து பூரி ஜகந்நாத பாண்டாக்களை அழைத்திருந்தாலோ, என்ன நடந்திருக்கும்?
தமிழன் தாழ்வு மனப்பான்மையில் வயிறு எரிந்து சாபம் விட்டு, தமிழ் தமிழ் என அடி வயிற்றில் குத்தி கதறி அழுதிருப்பான்!
29 மாநிலங்கள் 30க்கும் மேலான மொழிகள் பேசும் மக்கள், இந்த தேசத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஹிந்தி பேசும் பல கோடி மக்கள், செவ்வியல் மொழி என பறைசாற்றிய திராவிட மொழிகளை
பேசும் பல கோடி மக்கள்! ஒரே ஒருவரிடம் இருந்தும் ஒரு முக்கல் முனகல் இல்லை! அனைவரும் இதை தனது நாட்டின் கலச்சார பெருமையாகவே கருதி மகிழ்கின்றனர். ஒரே ஒரு டீவி விவாதம் கூட இல்லை, ஒரேயோரு தனி நபரோ அந்தந்த மாநில அரசியல்வாதியோ இதைப் பற்றி பேசவில்லை, ஏன் குஜராத்திக்கள் எங்கள் மோடி எங்கே
எங்கள் குஜராத்தி என கதறவில்லை! பிற மொழி மக்களை பார்த்து இனியேனும் தமிழர்கள் திருந்துவார்களா?
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஜோஸ்யம்_பாதி_ஹேஷ்யம்_மீதி
மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.
உறவையும்,
நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜ தூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத்
தகுதியுடையவர்களாகப் படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான். ''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணம் ஆனவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும்
#நற்சிந்தனை
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போர் இட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இரு பக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த
ஊடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். போர் வீரர்கள் ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.
தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையல்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார்
#பழமொழியும்_விளக்கமும்
'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை'
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குக் கடன் கொடுத்தவர் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக
ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். பெருமாள் மக்களையும் ரட்சித்து குபேரனின் கடனை தீர்க்க ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப் பெருமாள். அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப் பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் மீது நின்ற கோலத்தில் அருள்
புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். இது தான் 'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை' என்ற விடுகதைக்கான விளக்கம்.
'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்'
தானம்
#மத்தூரு_உக்ர_நரசிம்மர்_ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் பல நகரங்கள், கிராமங்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் உக்ர நரசிம்மர் எனும் பெயரில் அவதாரம் எடுத்து அமர்ந்துள்ளார். இப்படியான ஓர் ஆலயம் உகர நரசிம்மர்
ஆலயம் எனும் பெயரில் மத்தூரில் வைத்யநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகில் உள்ளது. இதுவும் மஹாபாரத கதையுடன் இணைந்த கோவில் ஆகும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. துவாபர யுகத்தில் பல மைல் தூர பரப்பளவில் இருந்ததாக கூறப்படும் மத்தூர் அன்று அர்ஜூனாபுரி என்று அழைக்கப்பட்டது.
அங்கு மஹாபாரத போரின் இறுதி கட்ட முக்கியமான சண்டை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் இரு தரப்பிலும் பல உயிர்கள் செடிகொடிகள் வெட்டி சாய்ப்பதை போல வீழ்ந்து மரணம் அடைவதைக் கண்ட அர்ஜுனனின் மனம் தளர்ந்து போயிற்று. இறப்பவர்கள் எதிரிகளாக
#சீர்காழி_சட்டைநாதர்_கோவில
சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். திருஞானசம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திருவவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி
அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன் 3 வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய போது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக் கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுது கொண்டு
இருந்தார். குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவர்
#ஸ்ரீசக்ர_நவாவரண_பூஜை
ஸ்ரீசக்ர நவாவரண பூஜையின் பொருள் மிகவும் ஆழமானது மற்றும் இரகசியமானது. தேவி வழிபாட்டின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதப்படும் ஸ்ரீ சக்ர பூஜையானது ஒரு சிக்கலான வழிபாட்டு முறையை உள்ளடக்கியது, இது மயக்கும் மற்றும் சக்தி வாய்ந்தது. பஞ்சதசாக்ஷரி மந்திரம் என்பது ஒலியில்
அன்னையின் வெளிப்பாடு மற்றும் ஸ்ரீ சக்ர யந்திரம் கோடுகள் மற்றும் வடிவத்தின் மூலம் அவளை உணர்தல் ஆகும். ஸ்ரீசக்ரத்தை தரிசனம் செய்தாலே அனைத்து பாவங்களும் நீங்கி ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று பல்வேறு வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. 'நவாவரணம்' என்பது ஸ்ரீசக்ராவைக் கொண்ட ஒன்பது ஆவரணங்கள்
அல்லது அடைப்புகளைக் குறிக்கிறது. பரம அன்னை, ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி, பிந்து அல்லது ஸ்ரீசக்ராவின் மையப் புள்ளியில் வசிக்கிறார். இந்த பிந்துவில் தான், தேவி சிவபெருமானுடன் இணைகிறார், இது சிவ-சக்தி ஐக்யா என்று போற்றப்படுகிறது. ஸ்ரீசக்ர நவாவரண பூஜையின் செயல்முறை, எளிமையான