மந்திரத்திற்கு கட்டுண்டவர்கள் போல் கை கூப்பி நின்றிருந்தார்கள் .
ராமசாமி அண்ணாவாக வந்தவர் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் நேரம் போலிருக்கிறது,,
தாங்கள் அவர்களை எங்கள் வண்டியில் இறக்கி விட்டுப் போகிறோம், என்று சொல்லிக் கொண்டே புத்தக பைகளை காரினுள் கொண்டு போய் வைத்து விட்டார்.
பல்லாவரத்தில் இருந்து தியாகராய நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளிக்கூடம் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு காரில் எதுவும் பேசாமல் அவ்வப்போது திரும்பிப் பார்த்து குழந்தைகள் பக்கம் ஒரு தெய்வீகமான புன்னகையை காட்டுவார்.
பள்ளிக்கூட வாசலில் குழந்தைகளை இறக்கிவிட்டு நன்றாக படியுங்கள் என்று சொல்லி மனதைக் கவரும் அழகான புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.
மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் தங்களுக்காக பணம் கட்டியவர்கள் பற்றிய விவரங்கள் அர்ச்சகர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து,
விவரங்கள் கேட்க அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாதென்றும் பணம் மட்டும் ஸ்ரீனிவாச ஐயங்கார் பெயரில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்..
மேலும் அர்ச்சகர்கள் நீங்கள் சொல்லும் ராமசாமி அண்ணாவும் அண்ணி சீதாவும் என்ற பெயர்களைப் பார்த்தால்,
வந்தவர்கள் சாட்சாத் ராம லட்சுமணன் தான் என்று அடித்துக் கூறி விட்டார்கள்.
அப்பொழுதுதான் சீனிவாச ஐயங்கார் குடும்பத்தாருக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கால்கள் தள்ளாடின, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. வந்தவர்கள் எல்லாம் இதை ஏகமனதாக ஆமோதித்தார்கள்.
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் ராமர் படத்தின் முன்பு விளக்கேற்றி ராமா ராமா என்று பக்தியில் உருகினார்கள்.
சீனிவாச ஐயங்காரின் குடிசை ராமர் பாதம் பட்ட இடமாயிற்று.
குழந்தைகளின் படிப்பு அமோகமாக வளர்ந்தது சீரும் சிறப்புமாக வாழ்க்கை துணைகள்,
அதே பகுதியில் சொந்த வீடுகள் கட்டிக் கொண்டு இன்றைக்கு பேரன் பேத்திகள் உடன் ராம நாமத்தை விடாமல் சொல்லிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மகாலட்சுமி ஆக விளங்கும் அன்னை சீதா தேவி கொடுத்த பணம் அட்சயம் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறது.
வருடந்தோறும் இன்றும் குடும்பமாக மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொண்டு கைங்கரியம் செய்து கொண்டு வருகிறார்கள்.
ஐயங்காரின் புதல்வியான விஜயலட்சுமி அவர்கள் இதை நம்மிடம் விவரிக்கும் போது அவர்களின் பழைய வாழ்க்கையையும் மறக்கவில்லை,
அவர்களின் ராம பக்தியும் சிறிதளவும் குறையவில்லை.
இவரிடம் நாம் விடை பெறும்போது சீதா தேவி சமேத ராம லட்சுமணர்கள் உருவம் உயிரோட்டமாக நம் கண் முன்னே விரிகிறது.
#ஸ்ரீ_ராம_ஜெயம் என்னும் வாட்ஸ்அப் குழுவில் இருந்து இந்த கட்டுரை பதியப்பட்டது.