#வில்லுடையான்பட்டு_சிவசுப்ரமணிய_சுவாமி_கோவில்
முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சி அளிக்கிறார். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. #முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால்
இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான #கௌமாரம் என்பதன் தெய்வமும்
முருகனே ஆவார். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப் பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்பு 6 குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது,
ஆறுமுகனாக முருகன் தோன்றினார். இவருக்கு கந்தன், கடம்பன், வேலாயுதன், சரவணபவன், குமரன், வேலவன், தண்டாயுதபாணி போன்ற பல பெயர்கள் உள்ளன. ஒரு நாள் நாரதர், கயிலாயம் சென்று சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்தார். அந்த பழம் தனக்கு வேண்டும் என முருகனும், விநாயகரும்
முரண்டு பிடித்தனர். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்ற புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக் கூர்மையால் 'தாய் தந்தையரே உலகம்' என்று கருதி அவர்களை மும்முறை சுற்றி வந்து ஞானப்
பழத்தைப் பெற்றுக் கொண்டார். உலகை சுற்றிவந்த முருகன் இந்தச் செயலால் கோபம் கொண்டு, பழனி மலை மீது ஆண்டிக் கோலமாக அமர்ந்தார். அதனடிப்படையில் மலை தோறும் முருகன் கோவில்கள் உருவானது. இப்படி உருவான முருகன் கோவில்களில் ஒன்றே வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவில். புராண காலத்தில்,
ஆலயம் அமைந்துள்ள இந்தப் பகுதி அடர்ந்த வனமாக இருந்துள்ளது. அதனுடைய அடையாளமாக ஆலயத்தைச் சுற்றி இன்றளவும் அதிக ஆலமரங்கள் இருப்பதைக் காணலாம். முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்ள வள்ளிமலைக்கு வந்துவிட, தேவர்களும் முனிவர்களும் பெருமானைத் தேடி பூலோகம் வந்து அலைந்து திரிந்தனர். பல
இடங்களில் தேடியும் அவர்களால் முருகனை காண முடியவில்லை. இதனால் அவர்கள் மனதளவில் துவண்டு வருத்தமுற்றனர். அப்போது அருவமாக தோன்றிய முருகன், "இங்கிருந்து இரண்டரை காத தூரத்தில் நான் உங்களுக்கு காட்சி தருவேன்" என்று கூறினார். அதன்படி இடும்பன், வீரன், ஐயனார் ஆகியோர் சூழ ஒரு அழகிய சோலையின்
நடுவே ஜோதி வடிவமாக காட்சியளித்தார். இந்த ஜோதி வடிவத்தை சப்த கன்னிகளும், தேவர்களும், முனிவர்களும் கண்டு களித்தனர். ஆனால் அதில் நிறைவு கொள்ளாத அவர்கள் மீண்டும் அருட்காட்சி தரவேண்டும் என்று வேண்டினர். அதை ஏற்ற முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில்
காட்சி அளித்ததார். அதனால் இத்தலம் #வில்லுடையான்பட்டு என பெயர் பெற்றது. பிறகு தமது வேலாயுதத்தை ஊன்றி நீரோடை ஒன்றை உருவாக்கி அதற்கு #சரவணதீர்த்தம் என்று பெயரிட்டார். இவ்வாறு முருகன் காட்சியளித்து தனது வேலையும் இங்கு ஊன்றியதால் இந்த ஊர் #வேலுடையான்பட்டு என்று அழைக்கப் பட்டது.
அனைவருக்கும் காட்சியளித்த முருகப் பெருமான் அந்த இடத்தில் கல்லுருவமாய் மாறி பூமியில் நிலைத்தார். இவ்விடத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பான ஆலயம் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் ஆலயம் மண் மேடிட்டு மறைந்தது. அதன் பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்த #சித்திரகாடவன் என்னும் பல்லவ வம்சத்து
அரசன், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகின்றது. 13-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த அம்மன்னனின் பசுக்கள், இந்தப் பகுதியில் மேயச் செல்வது வழக்கம். ஆனால், அரண்மனைக்குத் திரும்பியதும் பால் கொடுப்பதில்லை. மன்னருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள்
மேயச் செல்லும் பசுக்களை பின் தொடர்ந்து சென்றார். வனத்தில் ஒரு புதருக்கு அருகில் பசுக்கள் தானாக பாலைச் சொரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். வியப்புற்ற மன்னன் அந்த இடத்தை மண்வெட்டியால் வெட்டினான். அப்போது ரத்தம் பீறிட்டு எழவே திடுக்கிட்டு அந்த இடத்தில் இருந்த புதரை மெள்ள மெள்ள
அப்புறப் படுத்தி விட்டுப் பார்த்த போது, மண்வெட்டி பட்டதால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் பெருகிய நிலையில் சிலையாக முருகப் பெருமான் காட்சி தந்தார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டும்படி உத்தரவிட்டார். அப்படி உருவானது
தான் வேலுடையான்பட்டு வில்லேந்திய வேலவனின் திருக்கோவில். மூலவர் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர் என்றால், உற்சவரோ கடலிலிருந்து கிடைத்தவர். கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களால் கண்டு எடுக்கப்பட்டு, கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டது. ஆலய அமைப்பு கிழக்கு நோக்கி அமைந்துள்ள
இவ்வாலயம் கோபுரமின்றி தெய்வானை திருமண சிற்பத்துடன் கூடிய தோரண வாசலுடன் அமைந்துள்ளது. அதை அடுத்து முகப்பு மண்டபத்தில் 5 சூலாயுதங்களும், பலிபீடமும், கொடிமரமும், மயில் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திற்கு வெளிப்புறத்தில் இடது பக்கத்தில் விநாயகர், ஆதிலிங்கம், வலப்பக்கத்தில்
தண்டாயுதபாணி ஆகியோரின் சிறு சன்னிதிகள் உள்ளன. மகாமண்டபத்தின் உட்புறம் இடது பாகத்தில் அருணகிரிநாதர், நால்வர் சன்னிதிகளும், அதற்கு நேர் எதிரில் தூணில் ஆஞ்சநேயரும், தெற்கு நோக்கி நடராஜர் சபையும் அமைந்துள்ளது. கருவறைச் சுற்றிலும் விநாயகர், விசாலாட்சி, விசுவநாதர், அகத்தியர்-லோபமுத்ரா,
துர்க்கை ஆகிய சன்னிதிகளும், சனிபகவான், ஐயப்பன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அர்த்த மண்டபத்தைத் தாண்டி உள்ளே செல்ல கருவறையில் சுயம்புவான மூலவர் வள்ளி- தெய்வானை உடனாய சிவசுப்ரமணிய சுவாமியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். வெளிப்பிரகாரச் சுற்றில் வடக்கு பகுதியில் கிழக்கு நோக்கிய
சுந்தரேசுவர பெருமான் சன்னிதியும், தெற்கு நோக்கிய மீனாட்சி அம்பாள் சன்னிதியும், மேற்கு நோக்கிய பைரவர் சன்னிதியும் அதனை ஒட்டி முருகப் பெருமானின் வாகனமான மயில்கள் வாழுமிடமும் இடம் பெற்றுள்ளது. ஆலயத்தின் வாசலை ஒட்டி வலதுபுறம் நவக்கிரக சன்னிதியும், தலவிருட்சங்களும், தேர் வடிவ வசந்த
மண்டபமும் இடம் பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே முருகப் பெருமானை நோக்கியவாறு இடும்பன் உள்ளார். அவருக்குப் பின்னால் முருகன் தன் சூலாயுதத்தை நட்டு உருவாக்கிய சண்முக தீர்த்தம் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. தீர்த்தத்தின் படித்துறையில் கிழக்கு நோக்கியவாறு வலம்புரி செல்வ விநாயகர்
உள்ளார். இத்திருத்தலத்தில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத் திருவிழா விசேஷமானது. 12 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது, பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து வழிபடுவர். சுற்றிலுமுள்ள 18 கிராமங்களுக்கும் வேலுடையான்பட்டு வேலவன் குலதெய்வமாக இருந்து
அருள்புரிந்து வருகிறார். கந்த சஷ்டியின்போது குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். கடன், நோய் போன்ற பல பிரச்னைகளையும் தீர்க்கும் பிரார்த்தனைக் கடவுளாக பக்தர்கள் போற்றுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி, பெளர்னமியன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறுகால பூஜைகள் செய்யப் படுகின்றன. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உகந்த நாள். கடலூர் மாவட்டம் நெய்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் இவ்வாலயம்
உள்ளது. சென்னை-கும்பகோணம் சாலையில் பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடைபட்ட வடக்குத்து என்ற ஊரிலிருந்து மேற்காக செல்லும் சாலையில் 3 கிமீ பயணித்தால் ஆலயத்தை அடையலாம்.
சரவணபவாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மடி_மாங்காய்_இடுவது #ஶ்ரீஆண்டாள்நாச்சியார்
ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பௌர்ணமி நாளன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில், ஆண்டாள் நாச்சியாருக்குப் பால் மாங்காய் நிவேதனம் செய்யும் சிறப்பான வழக்கம் ஒன்று உள்ளது. ஆண்டாள் திருமணம் முடிந்ததும் பெரியாழ்வார் மிகவும்
கலங்கினார் மகளை பிரிந்ததால். அப்போது அரங்கன் அவர் கனவில் வந்து, வரும் வைகாசி மாதம் பௌர்ணமியன்று உமது மகளோடு உங்கள் ஊருக்கு வந்து உமக்கு அருள் புரிவோம் என்றார். அதன்படி வரவும் செய்தார். அவர்களை வரவேற்ற பெரியாழ்வார் மகளிடம், அம்மா கோதா! உனக்கு என்ன வேணடும் சொல் என்றார். மடி
மாங்காய் இடுவது என்று கேள்விபட்டு இருக்கிறீரா? ஆண்டாள் தன் தந்தை பெரியாழ்வாரிடம் கேட்டாள். பெரியாழ்வார், தெரியும் கோதா! எந்தத் தவறும் செய்யாதவன் மடியில், பையில் மாங்காயை போட்டு விட்டு மாங்காயை திருடினான் என்று பழி போடுவதை மடி மாங்காய் இடுவது என்பர் என்றார். அதற்கு கோதா, என்
#நற்சிந்தனை
ஒருசமயம், அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பிராமணர், உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மது என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
பகவானின் முன்பு உணவை வைத்து விட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார். முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, உணவு கொண்டு வந்த மது, அதனை படைத்து விட்டு, பகவானே, இந்த உணவை ஏற்றுக் கொள்ளுங்கள். நான்
சிறுவன் என்பதால் இதனை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது என்று கூறி பிரார்த்தித்தான். அதன் பிறகு, மது நண்பர்களுடன் விளையாட வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான். பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்
#Lord_Alarnatha_Temple is located in Brahmagiri, Odisha, near Puri. It is a big tourist destination and a famous religious place for all Krishna Devotees.It is explained that in Satya Yuga, Load Brahma came and worshipped Load Vishnu here on the top of a hill, this
hill is called Brahmagiri. One day Load Vishnu appeared and said, "I am very much pleased with your worship. Make a four armed Deity of me holding Shankha, Chakra, Gada and Padma. Since Alarnatha was earlier being worshipped by the Alwars of South India, He came to be known as
Alvarnatha which later became Alalanatha. It is said that Ramanujacharya, a great spiritual teacher in the Sri Sampradaya visited this temple in the past. At the feet of the Lord is Garuda with his hands folded in prayer. There are also small Deities of Rukmini and Satyabhama
#மகாபெரியவா #தேனம்பாக்கம்
சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் பிற சிறிய சாம்ராஜ்யங்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கோயில்களைக் கண்டுபிடித்து, அவற்றைப் புதுப்பித்து வழிபாட்டிற்குக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டின் இருண்ட நாட்களாக இருந்த நாத்திக
இயக்கங்கள் இருந்த போதிலும் அவரது காலம் பொற்காலம். 1950களில் ஒரு சமயம் மகா ஸ்வாமி மாலை நேரத்தில் மடத்தில் இருந்து நடக்கத் தொடங்கினார். அவர் வேகமாக நடப்பவர், பக்தர்களும் மடத்து ஊழியர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். மாலை 7 மணி அல்லது அதற்குப் பிறகு அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓர்
இடத்தில் நின்று பக்தர்களிடம், “அங்கே கோயில் இருக்கிறதா?” என்று கேட்டார். இருட்டி விட்டதால் பார்வைத் திறன் குறைவாக இருந்தது அனைவருக்கும். மேலும் புதர் மண்டி கிடந்தது. பக்தர்கள் அவரை அருகிலுள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவ்வூர் பெரியவர்கள் மகா பெரியவரிடம் அங்கு ஒரு
#வைகாசி_விசாகம் – #நம்மாழ்வார் திருநக்ஷத்திரம் ஜூன் 2, 2023 வெள்ளிக்கிழமை. நம்மாழ்வார் வைஷ்ணவ குல பதி என்று போற்றப்படுகிறார். திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) பிறந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் (32 ஆண்டுகள் மட்டுமே), அவர் புளிய மரத்தடியில் (திருப்புலி ஆழ்வார்) தங்கியிருந்து,
ஸ்ரீமன் நாராயணனைப் பற்றியே எப்போதும் யோகத்தில் (தியானத்தில்) இருந்தார். நம்மாழ்வார் 4 திவ்ய பிரபந்தங்களைப் பாடியுள்ளார். · திருவிருத்தம் (ரிக் வேத சாரம்) · திருவாசிரியம் (யஜுர் வேத சாரம்) · பெரிய திருவந்தாதி (அதர்வண வேத சாரம்) · திருவாய்மொழி (சாம வேத சாரம்) நம்மாழ்வாரின்
பிரபந்தங்கள் 4 வேதங்களுக்கு இணையாக இணைக்கப்பட்டுள்ளன. அவர் "வேதம் தமிழ் செய்த மாரன்" என்றும் அழைக்கப்படுகிறார் - சம்ஸ்கிருத வேதங்களின் சாரத்தை தனது தமிழ் பிரபந்தங்கள் மூலம் வழங்கியவர். ஆழ்வார்கள் பாடிய 4000 திவ்ய பிரபந்தங்களின் சாரமாக திருவாய்மொழி போற்றப்படுகிறது.
#கிருஷ்ண_கமலம்
நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம். இந்த பூவின் அமைப்பு நடுவில் திரெளபதி, மும்மூர்த்திகள், பஞ்ச பாண்டவர்கள், 100 கெளரவர்கள் என அனைவரும் கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர்.
ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள். இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம், இதனை மஹாபாரத பூ, பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள். இதன் ஆங்கில பெயர் #PassionFlowet ஸ்ரீ கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், கிருஷ்ணரை நடு நாயகனாக வைத்து
வழிபடுவர்கள் இந்த செடியை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கவும். வீட்டிற்குள் அதிகப்படியான நேர்மையான ஆற்றலை ஈர்க்கும் (Positive Vibrations) நறுமணமான மலர். இது ஒரு கொடி வகையை சேர்ந்தது. சிறிய தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம். அதிக இடவசதி, அதிகமாக வெயில் தேவையில்லை. இந்த பூவை கிருஷ்ணருக்கு