அன்பெழில் Profile picture
Jun 4 11 tweets 2 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
திருமதி பிரேமா ரமணி அவர்களின் அனுபவங்கள்.
சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் ஹைதராபாத்தில் இருந்தபோது ஒரு தோழியின் திருமணத்திற்கு புடவை வாங்க அவளுடன் காஞ்சிபுரம் வந்தேன். அங்கே ஒரு தோழி வீட்டில் தங்கினோம். காலையில் மகா பெரியவாளை தரிசித்து விட்டு பின் மாலை Image
புடவை வாங்கப் போகலாம் என்று இருந்தோம். அவர்கள் வீட்டு மாடியில் ஒரு மாமி குடியிருப்பதாகவும் பக்ஷணங்கள் நன்றாகச் செய்வதாகவும் தங்கியிருந்த வீட்டுத் தோழி சொன்னாள். அப்போது அந்த மாமியே கீழிறங்கி வந்தார். அவர் கையில் ஒரு தட்டு. அதில் அழகழகாய் சீனி மிட்டாயில் விதவிதமான பொம்மைகள்.
கல்யாணத்தில் மாலைநேரம் விளையாடலில் வைப்பார்கள். தான் முதன் முதலாக செய்ததாகவும் முதலில் பெரியவாளுக்கு படைத்தபின் பிறருக்கு செய்யப் போவதாகவும் சொன்னார். நாங்களும் பெரியவாளைத்தான் பார்க்கப் போகிறோம் என்றவுடன் எங்களுடனேயே வந்தார். நாங்கள் சீக்கிரமே போய் விட்டதால் மடத்தில் அதிகம்
கூட்டம் இல்லை. இரண்டு அமெரிக்கர்கள் பெரியவாள் அருகில் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். க்யூவில் பின்னால் நின்ற எங்களை ஒரு தொண்டர் வந்து பெரியவாள் அழைப்பதாகக் கூற அருகில் போனோம். மாமி தட்டை பெரியவாள் அருகில் வைக்க ஆசீர்வதித்து ஒரு தொண்டரிடம் கூட்டம் முடிந்ததும் குழந்தைகளுக்கு கொடுக்க
சொன்னார். பின் என்னிடம் இதோ இவா ரெண்டு பேரும் என்னவோ கேக்கறா. நீ பதில் சொல்லு என்று கூற நடுங்கி விட்டேன். பெரியவாளை அவா கேட்கறதுக்கு நான் பதில் சொல்வதா?அபசாரம் என்று கூற ஒரு அபசாரமும் இல்லை. அவா இந்தியால நிறைய கோயில்களுக்கு போய் வந்திருக்கா. நல்ல ஆன்மீகத்தேடல் இருக்கு. ஏன் இங்கு
இத்தனை தெய்வங்கள்னு கேட்கறா. பதில் சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன் அடுத்த மாசம் பத்து நாள் நீ இங்கிலீஷ்ல ராமாயணம் மகாபாரதம் பத்தி செகந்திராபாத் ஸ்கந்தகிரி கோயில் திருவிழால பேசப் போறயோனோ பிராக்டீஸ்னு நினைச்சுண்டு பேசு. ஷாக் ஆகி விட்டேன். தமிழ்ச்சங்கம் மூலம் என்னைக் கேட்டது உண்மை
தான். நான் இன்னும் ஒத்துக் கொள்ளக் கூட இல்லை. பெரியவாள் அறிந்து என்னை ஒத்துக்கொள்ளும் படி சொல்கிறார் போல. சட்டென்று தட்டில் உள்ள பொம்மைகள் கண்ணில் பட்டன. (அதுவும் அவர் திருவிளையாடல் போலும்). அதை அந்த அமெரிக்கர்களின் காட்டி
சில குழந்தைகளுக்கு நாய் பிடிக்கும் வேறு சிலருக்கு பூனை
பிடிக்கும்.தனக்கு வேண்டிய பொம்மையை குழந்தை எடுத்துக் கொள்ளும். ஆனாவ் எல்லாம் ஒரே சர்க்கரையால் பண்ணியது தானே. அது போல் இறைவன் ஒருவனே. நாம் நமக்கு பிடித்த விதத்தில் வணங்கும் போது அந்த ரூபத்தில் வருகிறான். வழி வெவ்வேறானாலும் அடைவது இறைவனையே. நதிகளின் பெயர்கள் வேறு வேறானாலும் கடலை
அடைந்தபின் அவை கடல்தான். தனிப் பெயர் கிடையாது. எனவே எத்தனை உருவம் எடுத்தாலும் அவன் ஒருவனே.
அறிந்தவரை விளக்கிவிட்டு பெரியவாளை நமஸ்கரித்தேன்
ஒரு மாதுளங்கனியை அளித்து ஆசீர்வதித்தார். அந்த அமெரிக்கர்களும் விளக்கத்தில் திருப்தி அடைந்தனர். அழகாக ஆங்கிலத்தில் உரையாடும் பெரியவாள் ஏன்
என்னை விளக்கச் சொன்னார். அடுத்த மாதக்கூட்டத்தில் பேசும் தைரியம் கொடுக்கவா. (அதிலும் நன்றாக பேசினேன்). நான் விளக்குவதற்காகவே மாமியை சர்க்கரை பொம்மை எடுத்து வரச் செய்தாரோ?
மகா பெரியவா திருவடி சரணம்.
என்னைஆட்கொண்டதேவனே
என் மனக் கோயிலின் தெய்வமே
உந்தன் திருவடிகளை சரணம் என்றடைந்தேன்
எனை ஆட்கொண்டு அருளவே வேண்டினேன்.பிறப்பறுத்து முக்தி தர வேண்டும்.
சரணம் குருவே
சரணம் சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 6
#அழகாபுத்தூர்_படிக்காசுநாதர்_கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய முருகப் பெருமானின் அபூர்வத் தோற்றம் இங்கு! கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை.
முருகப்பெருமான் Image
இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். ஒரு சமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.
திருமால் முருகனுக்கு தனது சங்கு, Image
சக்கரத்தை கொடுத்தார்.
ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக உள்ளது.
இந்திர மயில்
Read 4 tweets
Jun 6
#பூரி_ஸ்ரீஜெகன்நாதர் கோவிலில் குடி கொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்து விடுவதாக ஓர் ஐதீகம். அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப் Image
படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறை சற்று வித்தியாசமானது. கோயிலின் சமையலறை உலகிலேயே மிகப் பெரியது. பாரம்பரியம் மிக்கது. 56 வகையான சைவ உணவுகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. கங்கா மற்றும் யமுனை எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு தீர்த்தக் கிணறுகளில்
இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி மண் பானைகளில் மட்டுமே சமையல் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் Image
Read 7 tweets
Jun 6
#MahaPeriyava
Author: Radha Ramamoorthy, Pudukottai (in Tamil)
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol.2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

This happened at a village near Villupuram. A man from the Narikurava tribe who was camping there Image
decided to commit suicide due to family complications. He came to the railway station and stretched himself on the platform, with the intention of jumping onto the rails when the next train came.
The man slept in a place nearby thinking about this in his mind. He had a dream-like
vision, wherein a sage appeared before him and said, "You need not end your life. Come and see me. I shall grant you peace." He woke up with a start. A wave of freshness spread through his body. It occurred him to search for the sage who came in his dream. He sold the gold ring
Read 10 tweets
Jun 6
#சனிபகவான்
மன்னன் மகேந்திரன் தன் நாட்டில் வாழும் பொற்கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களை கொடுத்து, இதற்கு என்ன விலை கொடுக்கலாம், மதிப்பு போட்டுச் சொல்லுங்கள் என்றான். அதைப் பெற்றுகொண்ட பொற்கொல்லர், மன்னா! இவற்றை எடுத்து சென்று சோதித்து, மதிப்பு நிர்ணயித்து நாளை Image
வந்து சொல்கிறேன் என்று கூறி, ரத்தினங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்தி சாயும் நேரம். அதனால் தன் வீட்டுச் சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில், தன் கையில் இருந்த ரத்தினக் கற்களைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்
விளக்கு மாடச் சுவரின்மேல் ஒரு கொக்கின் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அது அவரது கையிலிருந்த ரத்தினங்களைக் கொத்தி விழுங்கிவிட்டு, மீண்டும் முன் போலவே சித்திரமாக மாறிவிட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பொற் கொல்லர் உடனே தன்
Read 9 tweets
Jun 6
#காஞ்சி_வரதராஜப்_பெருமாள்
வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம் திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 31வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் பாஞ்சராத்திரம் Image
ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1053ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். 14ஆம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் Image
அமைக்கப்பட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர் ஸ்ரீ ஸ்ருங்கிபோர் எனும் முனிவரின் குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை
Read 7 tweets
Jun 5
#குறுங்காலூஸ்வரர்_கோவில் கோயம்பேடு (கோ - பசு, அயம் - இரும்பு வேலி, பேடு - காப்பிடம், வால்மீகி காலத்தில் பசுகள் சம்ரக்‌ஷணை செய்யும் இடமாக இருந்தது)
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே (நாதெள்ளா திருமண மண்டபம் எதிரே) மெயின் ரோட்டில் இருந்து பிரியும் தெருவுக்குள் நுழைந்தால், கூப்பிடு Image
தூரத்தில் இருக்கிறது கோயில். இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில். சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் 4 அங்குல உயரம் கொண்ட பாணம். லவனும் குசனுக்கு ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட லிங்கத் திருமேனி. அறம் வளர்த்த நாயகி பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 Image
கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் வீற்றிருக்கிறார். சீதையை விட்டுவிட்டு வருமாறு இராமர் ஆணையிட இலட்சுமணர் சீதையை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதையை திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த Image
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(