#ராகுகாலம் தெரியும். அது போல கேது காலத்துக்கு என்ன பெயர்? அது #எமகண்டம்.
ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமைகள் இல்லை. ஆனால் அவை பலமில்லாத கிரகங்கள் என்று பொருளல்ல. நவகிரகங்களில் புதனும் அதை
விடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு-
கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணிநேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி
விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும் அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும்
தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.
சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock
wise) நகரும். அதனால் தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.
மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும்
சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம்
ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு
ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை #ஞானகாரகன்,
#மோட்சகாரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப் போல் கொடுப்பாரில்லை, கேதுவைப் போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும். ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது
ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார்கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார்,
பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று
பல ஸ்தலங்கள் உண்டு. கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளியையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம்,
எமகண்ட நேரத்தில் வழிபடலாம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர்
பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக்
கண்டறிந்தார்கள். திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி, தயிரைக் கடைவது போல கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள்
மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்பதாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து
கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே
சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக் கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது.
அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு. பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும்
பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார். அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டுமென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும்
காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள்
என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையில்
இருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது. யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான
இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு. துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்
கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று
போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞானகாரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப்
போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார். இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை
ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப் படவில்லை. இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன்
சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும்.
நம் ஜோதிஷ சாஸ்திரம் விலை மதிக்க முடியாத பொக்கிஷம். அதை சரியாகப் பயன்படுத்தி நாமும் பயன் அடைவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பூஜையின் போது பயன்படுத்தும் மந்திரங்களை தவறுதலாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா? இது பலருக்கும் உள்ள சந்தேகம்.
ஒரு பக்தர் இருந்தார். பரம்பரையாக அவர்கள் செய்து வந்த தொழில் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டது. வறுமையின் கொடுமையை அவரால் தாங்க முடியவில்லை. வசதியாக வாழ்ந்து பழகிய
பிள்ளைகள் அரை வயிற்றுக்கு கூட உண்ண வழியில்லாமல் தவித்தனர். பக்தருக்கு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களில் கடைசியாக மிஞ்சியவைகளை விற்று அரிசி பருப்பு வாங்கி கொண்டார். கூடவே விஷமும் வாங்கினார். சாகும் நேரத்திலாவது
குழந்தைகள் பசியாறி சாகட்டும் என்பது அவரது எண்ணம். வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பக்தரின் காதில் அவ்வூர் கோவிலுக்கு ஆதிசங்கரர் என்ற மகா ஞானி வந்திருப்பதாக செய்தி விழுந்தது. ஒரு வேளை இந்த ஞானியை தரிசனம் செய்தால் நமது கஷ்டம் தீர கூடுமோ? என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி நடந்தார்.
#MahaPeriyava
Author: Mrs Seetha Chidambaram
Source: kamakoti.org
My mother Mrs. M.S. Chidambaram and her mother visited Paramacharya of Kanchi Kamakoti Peetham in 1952 at a Siva temple in Mambalam to ask and receive His benign blessing before Sri M.A. Chidambaram
started to build the Adyar House at Kotturpuram, Madras. The Paramacharyal greeted the proposal heartily. He recalled His stay many times at the residence of Mrs. Chidambaram's father in Konapet in Chettinad and reminisced His carrying her as a baby.
At this meeting, His Holiness
was seated under the Nelli tree. Suddenly Nelli fruit got dislodged and fell on the ground. His Holiness asked my mother to eat the fruit remarking that it would taste sweet. Then He blessed her and granted her wish. He said that the house to be built at Kotturpuram will be
#மகாபெரியவா
"நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’ ‘தண்டனிடுவது’ என்றுதான் சொல்வதென்றாலும் அங்கே அர்த்தமே வேறே. தண்டம் என்பது அங்கேயும் கழிதான். ஆனால் அஸல் கழியை இல்லாமல், அதை உபமித்து [உவமித்து] ‘தண்டனிடுவது’ என்று வந்திருக்கிறது. கழியை நிறுத்திப் பிடித்தால்
அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. ‘கழியாட்டம் விறைச்சுண்டு நிக்கறயே!’ என்று பணிவு இல்லாதவர்களைக் கேட்கிறோம். அதே கழி பிடியை விட்டு விட்டால் ஒரே படிமானமாக பூமியோடு பூமி படிந்து அப்படியே கிடக்கிறது. ஜீவ மனஸ் பொதுவாகக் கழி மாதிரி விறைத்துக் கொண்டு நிற்பதுதான்.
அஹம்பாவப் பிடிப்பில் அது அப்படி இருக்கிறது – அஹம்பாவம் அதைப் பிடித்துக் கொண்டு உசத்தி கொண்டாடிக் கொண்டு நிறுத்தியிருப்பதில்! அந்த அஹம்பாவப் பிடிப்பை விட்டு விட்டால் மனஸ் தாழ்மையாகக் கிடக்கும். அப்படிக் கிடந்தே நிஜமாக உசந்ததில் உசந்த ஸெளக்யத்தைப் பெற்று விடும். இந்த மாதிரி மனஸைக்
#Kambar
He was born in Mayiladuthurai district in a town called Thiuvrezhundhur in the 12th century. It is said that Kambar's father was Adithan and Kambar's son was Ambigapathi. Ambikapati, being a poet, fell in love with Amaravati, the daughter of the Chola king. A failed
competition in poetry led to the Chola king refusing his daughter and killing Ambikapati. Due to this misfortune Kambar poignantly poems by Dasaratha when he misses his son Rama in Ramayana. Due to the conflict with the Chola king, Kambar went to Andhra for sometime. He was
supported by Sadayappa Vallal when he had no support from the king. Sadayappar was the Lord of a small area called Trikartha. Later the Chola king himself supported Kambar. The Chola king bequeathed Kambanadu to Kambar. Chola also gave the title Kavichakaravarthy. The epic
#மகாபெரியவா
கும்பகோணம் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் கூறியது.
ஸ்ரீ மஹாபெரியவா சிவாஸ்தானத்தில் அருள் செய்து கொண்டிருந்த சமயம். 12 வயது சிறுவன் கருணாமூர்த்தியிடம் அடைக்கலமாக வந்து நின்றான். சிறுவன் கண்களில் நீர்மல்கியிருந்தது “பெரியவா! எனக்கு அப்பா இல்லே, என்
தாயாரும், தங்கையும் பம்பாயில் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா சமையல் வேலை செய்கிறாள். என்னை மெட்ராஸில் கிறிஸ்துவ கான்வெண்டில் சேர்த்தார்கள். நான் எட்டாவது படிக்கிறேன். நிறைய மார்க்கு வாங்கறேன். இப்போ என்னை அவா கிறிஸ்துவ மதத்தில் சேருமாரும், எம். ஏ வரைக்கும்
படிக்க வைச்சு வேலை வாங்கி தருவதாயும் சொல்கிறார்கள். ஆனா எனக்கென்னவோ மதம் மாற மனசே இல்லை. மதம் மாற மாட்டேன். எனக்கு உபநயனம் நடக்க வேண்டும். எங்கம்மா கிட்டேயிருந்து நாலுமாசமா கடிதமே இல்லே. என் தாயும் தங்கையும் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை”
சிறுவன் அழுதவாறே
#அறிவோம்_மகான்கள்#தாமாஜி_பண்டிதர்
வயல்கள் சூழ்ந்த பேதரி கிராமத்தில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற இவர் தர்மசிந்தனை மிக்கவராகவும் இருந்தார். ஊர் மக்கள் இவரை ஆசானாகவும் நண்பராகவும் காக்கும் கடவுளாகவும் மதித்து வாழ்ந்தனர். இவரது நற்குணங்களை அறிந்த அந்த நாட்டு மன்னன்
தாமாஜியை மங்கள்பட் என்னும் ஊருக்கு அதிகாரியாக நியமித்தான். பண்டிதர் மக்களிடம் பக்தி உணர்வை வளர்த்தார். ஒரு சமயம் மழை பெய்யாமல் வஞ்சித்தது. பஞ்சம் தலை விரித்தாடியது. விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் வருந்தினர். மக்கள் உணவின்றி வாடுவார்களே என்று வருந்திய தாமாஜி பண்டிதர் தன்னிடம்
இருந்த தானியங்களை வாரி வழங்கினார். இதனால் அவரது புகழ் ஊரெங்கும் பரவியது. பண்டரிபுரத்தைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற தாமாஜி விருந்து படைத்தார். இலையில் உணவைப் பார்த்ததும் அந்தணரின் கண்கள் கலங்கி விட்டன. சுவாமி உங்கள் கண்கள் ஏன் கலங்குகின்றன?