அன்பெழில் Profile picture
Jun 7 20 tweets 4 min read Twitter logo Read on Twitter
#பூரிஶ்ரீஜெகன்நாதர் #நிர்மால்ய_பிரசாதம்
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணிகளில் கட்டி, உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு Image
வைத்திருப்பார்கள். பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று நிர்மால்ய மகா பிரசாதத்தை வாங்குவார்கள். ஏனென்றால் மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் மிகப்பெரிய புண்ணியத்தை அடைவதாக ஐதீகம்.
ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய Image
பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள். ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற
மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள். மேலும் மரண சமயத்தில் நிர்மால்ய பிரசாதத்தையும், புனித துளசியும் தண்ணீருடன் சேர்த்து வாயில் ஊற்றப்படுகிறது. இதை உட்கொண்டதால் ஆத்மா எமனுடைய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படும். இது இந்துகள் நம்பிக்கை. மகா பிரசாதத்திற்கு பின்னால் ஒரு வரலாறு
இருக்கிறது திரேதாயுகத்தில் 10 தலை அசுரனான இராவணனை வென்ற பிறகு ஶ்ரீஇராமச்சந்திர மூர்த்தியும் லக்ஷ்மணனும் மற்றவர்களும் அப்போதுதான் அயோத்திக்குத் திரும்பினார்கள். அயோத்திவாசிகளும் அவர்களுடைய வீரதீர செயல்களை கேட்டு மகிழ்ச்சியில் இருந்தனர். லக்ஷ்மணனுடைய மனைவி ஊர்மிளா மிகவும் அமைதியாக
அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்தாள். எல்லோரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்றதையும், இந்திரஜித்தின் பலத்தையும், அவன் பெற்றிருந்த ஒரு வரத்தை பற்றியம் பேசி கொண்டிருந்தார்கள். இந்திரஜித் பெற்ற வரம் என்னவென்றால், எவனொருவன் 14 வருடங்கள் தொடர்ந்து சாப்பிட வில்லையோ
எவன் ஒருவன் தொடர்ந்து 14 வருடங்கள் தூங்கவில்லையோ அவன் மட்டுமே இந்திரஜித்தை கொல்ல முடியும் என்பதாகும். ராமர் லட்சுமணனை பார்த்து, லக்ஷ்மணா! நீ 14 வருடங்களாக உணவு உண்ணாவில்லை என்றால் பஞ்சவடியில் நாம் தங்கியிருந்த போது நான் தந்த உணவை என்ன செய்தாய் என்று வினவினார். லக்ஷ்மணன், பிரபுவே
நான் அந்த உணவை பஞ்சவடியில் ஷமி மரத்தில் உள்ள ஒரு பெரிய துவாரத்தில் வைத்திருக்கிறேன் என்றார். இதை மெய்ப்பிப்பதற்க்காக லக்ஷ்மணன் தனது பலம் பொருந்திய அம்பினால் அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வந்தார். ஸ்ரீராமச்சந்திர பிரபு அதிசய பட்டவராக ஆஞ்சநேயரிடம் 14 வருடங்களாக சேமிக்கப்பட்ட உணவை
சரி பார்க்க சொன்னார். அப்படி சரிபார்த்தபோது அதில் 7 பொட்டலங்கள் மட்டும் குறைவதாக கூறினார். பிரபு ராமர் லக்ஷ்மணனிடம் இருந்து 7 உணவுப் பொட்டலங்கள் குறைந்ததைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டார். லக்ஷ்மணன் மிகவும் பணிவாக நாம் இருவரும் காட்டில் இருக்கும் போது, தந்தையின் மரணச்
செய்தியைக் கேட்ட போது தாங்கள் அன்று எனக்கு முதல் முறையாக உணவு அளிக்கவில்லை. இராவணன் பஞ்சவடியில் இருந்து சீதையை கடத்திக் கொண்டு சென்ற போது தாங்கள் எனக்கு இரண்டாவது முறையாக உணவு அளிக்கவில்லை. மூன்றாவது முறை லங்கேஸ்வரிக்கு முன்பு பலிகொடுக்க பாதாளம் சென்ற போது நாம் உணவு இல்லை.
இந்திரஜித்தின் பானத்தால் மயங்கி விழுந்த அன்று நான்காவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. இந்திரஜித் தலை துண்டிக்கப்பட்ட போது ஐந்தாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. நீங்கள் ராவணனை சிரச்சேதம் செய்த போது ஆறாவது முறையாக உணவு உட்கொள்ளவில்லை. புலஸ்தியர் ரிஷியின் மைந்தனான, இராவணன்.
பிராமணன்னாவான். அந்த இராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்ததாக நீங்கள் எண்ணினீர்கள். அப்போது ராவணனின் மரணத்திற்கு இலங்கையில் துக்கம் அனுஷ்டித்த போது அதில் கலந்து கொண்டு உணவு உண்ணாமலே. நாம் லங்கையை விட்டு கிளம்பினோம். இராமர் லக்ஷ்மணனுடைய மிக உயர்ந்த தியாகத்தினாலும்
அர்ப்பணிப்பு உணர்வினாலும் தழுதழுத்து லக்ஷ்மணனுடைய தியாகம் ஈடு இணை இல்லாதது என்று கூறினார். பின்பு மிகவும் உன்னதமான தியாகம் புரிந்த லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவை புகழ்ந்து கூறினார். நான் எனது மனைவியுடன் 14 வருடங்கள் காட்டில் கழித்தேன் ஆனால் ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்து
இருக்கின்றாள். இந்த 14 வருடங்களும் லக்ஷ்மணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் எல்லா புகழும் ஊர்மிளாவிற்கே என்று கூறினார். அயோத்தியில் நமக்கு 3 சிம்மாசனங்கள் இருக்கிறது ஒன்று எனக்கு மற்றொன்று சீதைக்கு மற்றொன்று லக்ஷ்மணனுக்கு. இன்றிலிருந்து ஊர்மிளாவிற்காக நான்காவது சிம்மாசனம்
ஏற்பாடு ஆகட்டும் என்று ஆணையிட்டார். ஊர்மிளா கூப்பிய கரங்களுடன் ராஜா ராமரிடம் கூறினாள், எனக்கு சிம்மாசனத்தின் மீது எந்த பற்றுதலும் இல்லை. எனக்கு உங்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் மட்டும் அளிக்க வேண்டும் எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்றாள். ராமர் மிகவும் மகிழ்ந்து அவளிடம் வேறு
ஏதாவது வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறினார். அப்போது மிகவும் பணிவுடன் இருகரம் கூப்பி தாங்கள் எனக்கு ஏதாவது வரம் தர நினைத்தால் இனி வரும் காலங்களில் எனக்காக கோவில்களோ அல்லது வழிபாடோ கூடாது. நான் எல்லோருக்கும் மனம் தரும் ஒரு ஊதுபத்தியாக இருக்க விரும்புகின்றேன். இனிவரும்
காலங்களில் நான் தங்களது தாமரை பாதத்திற்கு கீழ் நிவேதனமாக இருக்க விரும்புகின்றேன் எனக் கூறினாள்
பகவான் ஶ்ரீ ராமசந்திரன் ஊர்மிளாவின் பக்தியை கண்டு பின்வருமாறு கூறினார், வரப்போகும் கலியுகத்தில் நான் பூரி க்ஷேத்திரத்தில் அவதரிக்கும் போது லக்ஷ்மிதேவி எனது அருகில் இருக்க மாட்டாள்.
லக்ஷ்மணன் எனது மூத்த சகோதரராக பலராமர் என்ற பெயருடன் என் அருகில் இருப்பார். எனக்கு நெய்வேதியம் செய்யப்படும் எந்த பிரசாதமும் விமலாதேவிக்கு நைவேத்தியம் செய்யப்படும். பிறகுதான் அது மகா பிரசாதமாக மாறுகிறது. நீ மகா பிரசாதமாக இருப்பாய். உமது இனிய நறுமணத்தால் தெய்வீகத்தை பரப்புவாய். Image
நீ மகா பிரசாதமாகவும் நிர்மால்யமாகவும் வரும் காலங்களில் விளங்குவாய். பக்தர்கள் உன்னை வழிபட்டு புண்ணியம் அடைவார்கள். ராமர் மேலும் கூறினார் கலியுகத்தில் நீ அன்ன பிரம்மமாக வழிபட படுவாய் ஊர்மிளா மேலும் வேண்டினாள், நீங்கள் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நான் வங்கக்
கடலில் ஒரு நீர்க்குமிழியாக வந்து தங்களது பொற்பாதங்களை தொட வேண்டும். இந்த வரங்களை ஊர்மிளாவிற்கு வழங்கி, ஊர்மிளா உன்னுடைய தன்னலமற்ற அன்பும் தியாகமும் ஈடு இணையற்றது என்று வாழ்த்தினார்.
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஜகன்னாதர்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 9
பூஜையின் போது பயன்படுத்தும் மந்திரங்களை தவறுதலாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா? இது பலருக்கும் உள்ள சந்தேகம்.

ஒரு பக்தர் இருந்தார். பரம்பரையாக அவர்கள் செய்து வந்த தொழில் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டது. வறுமையின் கொடுமையை அவரால் தாங்க முடியவில்லை. வசதியாக வாழ்ந்து பழகிய Image
பிள்ளைகள் அரை வயிற்றுக்கு கூட உண்ண வழியில்லாமல் தவித்தனர். பக்தருக்கு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களில் கடைசியாக மிஞ்சியவைகளை விற்று அரிசி பருப்பு வாங்கி கொண்டார். கூடவே விஷமும் வாங்கினார். சாகும் நேரத்திலாவது
குழந்தைகள் பசியாறி சாகட்டும் என்பது அவரது எண்ணம். வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பக்தரின் காதில் அவ்வூர் கோவிலுக்கு ஆதிசங்கரர் என்ற மகா ஞானி வந்திருப்பதாக செய்தி விழுந்தது. ஒரு வேளை இந்த ஞானியை தரிசனம் செய்தால் நமது கஷ்டம் தீர கூடுமோ? என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி நடந்தார்.
Read 8 tweets
Jun 9
#MahaPeriyava
Author: Mrs Seetha Chidambaram
Source: kamakoti.org
My mother Mrs. M.S. Chidambaram and her mother visited Paramacharya of Kanchi Kamakoti Peetham in 1952 at a Siva temple in Mambalam to ask and receive His benign blessing before Sri M.A. Chidambaram Image
started to build the Adyar House at Kotturpuram, Madras. The Paramacharyal greeted the proposal heartily. He recalled His stay many times at the residence of Mrs. Chidambaram's father in Konapet in Chettinad and reminisced His carrying her as a baby.
At this meeting, His Holiness
was seated under the Nelli tree. Suddenly Nelli fruit got dislodged and fell on the ground. His Holiness asked my mother to eat the fruit remarking that it would taste sweet. Then He blessed her and granted her wish. He said that the house to be built at Kotturpuram will be
Read 6 tweets
Jun 9
#மகாபெரியவா
"நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’ ‘தண்டனிடுவது’ என்றுதான் சொல்வதென்றாலும் அங்கே அர்த்தமே வேறே. தண்டம் என்பது அங்கேயும் கழிதான். ஆனால் அஸல் கழியை இல்லாமல், அதை உபமித்து [உவமித்து] ‘தண்டனிடுவது’ என்று வந்திருக்கிறது. கழியை நிறுத்திப் பிடித்தால் Image
அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. ‘கழியாட்டம் விறைச்சுண்டு நிக்கறயே!’ என்று பணிவு இல்லாதவர்களைக் கேட்கிறோம். அதே கழி பிடியை விட்டு விட்டால் ஒரே படிமானமாக பூமியோடு பூமி படிந்து அப்படியே கிடக்கிறது.  ஜீவ மனஸ் பொதுவாகக் கழி மாதிரி விறைத்துக் கொண்டு நிற்பதுதான்.
அஹம்பாவப் பிடிப்பில் அது அப்படி இருக்கிறது – அஹம்பாவம் அதைப் பிடித்துக் கொண்டு உசத்தி கொண்டாடிக் கொண்டு நிறுத்தியிருப்பதில்! அந்த அஹம்பாவப் பிடிப்பை விட்டு விட்டால் மனஸ் தாழ்மையாகக் கிடக்கும். அப்படிக் கிடந்தே நிஜமாக உசந்ததில் உசந்த ஸெளக்யத்தைப் பெற்று விடும். இந்த மாதிரி மனஸைக்
Read 15 tweets
Jun 8
#Kambar
He was born in Mayiladuthurai district in a town called Thiuvrezhundhur in the 12th century. It is said that Kambar's father was Adithan and Kambar's son was Ambigapathi. Ambikapati, being a poet, fell in love with Amaravati, the daughter of the Chola king. A failed Image
competition in poetry led to the Chola king refusing his daughter and killing Ambikapati. Due to this misfortune Kambar poignantly poems by Dasaratha when he misses his son Rama in Ramayana. Due to the conflict with the Chola king, Kambar went to Andhra for sometime. He was
supported by Sadayappa Vallal when he had no support from the king. Sadayappar was the Lord of a small area called Trikartha. Later the Chola king himself supported Kambar. The Chola king bequeathed Kambanadu to Kambar. Chola also gave the title Kavichakaravarthy. The epic
Read 7 tweets
Jun 8
#மகாபெரியவா
கும்பகோணம் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் கூறியது.
ஸ்ரீ மஹாபெரியவா சிவாஸ்தானத்தில் அருள் செய்து கொண்டிருந்த சமயம். 12 வயது சிறுவன் கருணாமூர்த்தியிடம் அடைக்கலமாக வந்து நின்றான். சிறுவன் கண்களில் நீர்மல்கியிருந்தது “பெரியவா! எனக்கு அப்பா இல்லே, என் Image
தாயாரும், தங்கையும் பம்பாயில் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா சமையல் வேலை செய்கிறாள். என்னை மெட்ராஸில் கிறிஸ்துவ கான்வெண்டில் சேர்த்தார்கள். நான் எட்டாவது படிக்கிறேன். நிறைய மார்க்கு வாங்கறேன். இப்போ என்னை அவா கிறிஸ்துவ மதத்தில் சேருமாரும், எம். ஏ வரைக்கும்
படிக்க வைச்சு வேலை வாங்கி தருவதாயும் சொல்கிறார்கள். ஆனா எனக்கென்னவோ மதம் மாற மனசே இல்லை. மதம் மாற மாட்டேன். எனக்கு உபநயனம் நடக்க வேண்டும். எங்கம்மா கிட்டேயிருந்து நாலுமாசமா கடிதமே இல்லே. என் தாயும் தங்கையும் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை”
சிறுவன் அழுதவாறே
Read 11 tweets
Jun 8
#அறிவோம்_மகான்கள் #தாமாஜி_பண்டிதர்
வயல்கள் சூழ்ந்த பேதரி கிராமத்தில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற இவர் தர்மசிந்தனை மிக்கவராகவும் இருந்தார். ஊர் மக்கள் இவரை ஆசானாகவும் நண்பராகவும் காக்கும் கடவுளாகவும் மதித்து வாழ்ந்தனர். இவரது நற்குணங்களை அறிந்த அந்த நாட்டு மன்னன் Image
தாமாஜியை மங்கள்பட் என்னும் ஊருக்கு அதிகாரியாக நியமித்தான். பண்டிதர் மக்களிடம் பக்தி உணர்வை வளர்த்தார். ஒரு சமயம் மழை பெய்யாமல் வஞ்சித்தது. பஞ்சம் தலை விரித்தாடியது. விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் வருந்தினர். மக்கள் உணவின்றி வாடுவார்களே என்று வருந்திய தாமாஜி பண்டிதர் தன்னிடம்
இருந்த தானியங்களை வாரி வழங்கினார். இதனால் அவரது புகழ் ஊரெங்கும் பரவியது. பண்டரிபுரத்தைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற தாமாஜி விருந்து படைத்தார். இலையில் உணவைப் பார்த்ததும் அந்தணரின் கண்கள் கலங்கி விட்டன. சுவாமி உங்கள் கண்கள் ஏன் கலங்குகின்றன?
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(