#அறிவோம்_மகான்கள்#தாமாஜி_பண்டிதர்
வயல்கள் சூழ்ந்த பேதரி கிராமத்தில் அவதரித்த தவசீலர் தாமாஜி பண்டிதர். வேதம் கற்ற இவர் தர்மசிந்தனை மிக்கவராகவும் இருந்தார். ஊர் மக்கள் இவரை ஆசானாகவும் நண்பராகவும் காக்கும் கடவுளாகவும் மதித்து வாழ்ந்தனர். இவரது நற்குணங்களை அறிந்த அந்த நாட்டு மன்னன்
தாமாஜியை மங்கள்பட் என்னும் ஊருக்கு அதிகாரியாக நியமித்தான். பண்டிதர் மக்களிடம் பக்தி உணர்வை வளர்த்தார். ஒரு சமயம் மழை பெய்யாமல் வஞ்சித்தது. பஞ்சம் தலை விரித்தாடியது. விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் வருந்தினர். மக்கள் உணவின்றி வாடுவார்களே என்று வருந்திய தாமாஜி பண்டிதர் தன்னிடம்
இருந்த தானியங்களை வாரி வழங்கினார். இதனால் அவரது புகழ் ஊரெங்கும் பரவியது. பண்டரிபுரத்தைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் தாமாஜியின் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற தாமாஜி விருந்து படைத்தார். இலையில் உணவைப் பார்த்ததும் அந்தணரின் கண்கள் கலங்கி விட்டன. சுவாமி உங்கள் கண்கள் ஏன் கலங்குகின்றன?
என்று பரிவுடன் கேட்டார் தாமாஜி. அதற்கு அந்த அந்தணர், ஐயா நான் சாப்பிட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. பண்டரிபுரத்தில் என் மனைவி மக்களும் பட்டினியாக கிடக்கிறார்கள், அவர்களை நினைத்ததும் என் கண்கள் கலங்கி விட்டன என்றார். சுவாமி கலங்க வேண்டாம். சாப்பிடுங்கள் என்று ஆசுவாசப்படுத்தினார் தாமாஜி
பின் 60 மூட்டை நெல்லை வண்டியில் ஏற்றி தகுந்த பணியாட்களுடன் பண்டரிபுரத்திற்கு அனுப்பி வைத்தார். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் அந்தணர். இந்த செய்தி ஊருக்குள் பரவியதும் நிலைமை விபரீதமானது. இங்கே நாம் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் பண்டரிபுரத்தில் இருந்த வந்த அந்தணருக்கு
தாமாஜி பண்டிதர் நெல் மூட்டைகளை அனுப்பியிருக்கிறாரே இதை அனுமதிக்கக் கூடாது. தடுத்து நிறுத்த வேண்டும் என்று கிராமத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி 60 நெல் மூட்டைகளையும் பறித்து சென்றனர். அந்தணர் புலம்பியபடியே தாமாஜியை காண வந்தார். செய்தி அறிந்த தாமாஜி, சுவாமி! உங்கள் குடும்பம் உண்பது
போல பல குடும்பங்கள் உண்ண வேண்டும் என்பது என் அப்பன் பாண்டுரங்கனின் விருப்பமாக இருக்கிறது, போனால் போகிறது விடுங்கள். உடனே ஊருக்குச் சென்று மனைவி மக்களை இங்கு அழைத்து வாருங்கள் என்று கூறி செலவுக்கு சில வராகன்களை கொடுத்து அனுப்பினார். இதையறிந்த மக்கள் அனைவரும் மங்கள்பட் நோக்கி படை
எடுத்தனர். எலும்பும் தோலுமாக வாடி இருந்த மக்களைக் கண்ட தாமாஜியின் மனம் வருந்தியது. களஞ்சியம் முழுவதையும் காலி செய்து விட்டோமே, இந்த மக்களுக்கு எப்படி உதவுவது என்று எண்ணி அழுதார். அந்த நேரத்தில் தாமாஜி பண்டிதரின் மனைவி சுவாமி அரசாங்கத்திற்கு வரியாக செலுத்த வேண்டிய நெல் அம்பாரமாக
குவிந்து கிடக்கிறதே அதை கடனாக எடுத்துக் கொண்டு அடுத்த ஆண்டு விளைச்சல் வந்ததும் அரசுக்கு செலுத்தி விடலாமே என்று யோசனை சொன்னாள். துள்ளி எழுந்த தாமாஜி பண்டிதர் நிறைந்த மனதுடன் மக்களுக்கு வாரி வழங்கினார். இந்த விஷயம் மன்னனின் காதில் விழுந்தது. தன்னிடம் அனுமதி பெறாமல் அதிகார
துஷ்பிரயோகம் செய்து விட்டதை எண்ணி கோபம் கொண்டான். தாமாஜியை கைது செய்ய உத்தரவிட்டான். காவலர்கள் கை விலங்கிட்டு அழைத்து வந்தனர். வழியில் பண்டரிபுரம் கோயில் வந்தது. காவலர்களின் அனுமதியுடன் கோவிலுக்கு சென்றார் தாமாஜி பண்டிதர். பாண்டுரங்கா!! மக்களுக்கு அளித்தது எல்லாம் உனக்கு நீயே
அளித்துக் கொண்டது என்று தத்துவம் பேசுகிறாய். ஆனால், நீ சொன்னதுபோல் செய்தால் தண்டனைக் கிடைக்கச் செய்கிறாய். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாயே நீ அருள் செய்தால் மழை பொழிந்து நாடு செழிக்க எவ்வளவு காலம் ஆகும். பஞ்சத்தை உண்டாக்கி மக்களை ஏன் வாடச் செய்கிறாய்? உனக்கு
மட்டும் இங்கே படையல் ஒழுங்காக நடக்கிறதே, இது நியாயமா! என்று கேட்டார். இந்த நேரத்தில் அரசவையில் மன்னன் இருந்தபோது கரிய நிறத்துடன் காண்போரை வசப்படுத்தும் கண்களுடன் ஒரு வாலிபன் வந்தான். தலையில் முண்டாசு முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டி இருந்தான். அரசே நான் தலையார் தாமாஜி பண்டிதர்
அரசுக்கு செலுத்த வேண்டிய வரி நெல்லுக்குரிய தொகையான எண்பத்து நாலு லட்சம் வராகன்களை என்னிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதைப் பெற்றுக்கொண்டு ரசீது தாருங்கள் என்றான். தாமாஜி கைது செய்யப்பட்டு இன்னும் சிறிது நேரத்தில் அரசவைக்கு கொண்டு வர இருக்கும் நிலையில் இப்படி ஒருவன் வந்து
நிற்கிறானே என்று மன்னன் திகைத்தான். இதற்குள் அந்த இளைஞன் தன் கையில் இருந்த மூட்டையை பிரித்து காசுகளைக் கொட்டினான் கொட்ட கொட்ட பணம் விழுந்துகொண்டே இருந்தது. புத்தம் புது பொன் நாணயங்களாக அவை இருந்தன. மன்னன் வியப்பில் ஆழ்ந்தான். இந்த சிறு மூட்டையில் இவ்வளவு நாணயங்கள் எப்படி இருந்தன
என்று மெய் சிலிர்த்தான். இளைஞனை உற்றுப் பார்த்தான். ஏ தலையாரி உண்மையாக சொல் நீ யார்? உனக்கு எந்த ஊரு? என்று கேட்டான். இளைஞன் அரசே நான் ஒரு அனாதை எனக்கென்று ஒரு பெயர் இல்லை ஊரார் என்னை ஆயிரம் பெயர் சொல்லி அழைப்பார்கள் யார் என்னை பிரியமாக அழைக்கிறார்களோ அவ்ர்களிடமே தங்கி விடுவேன்
நீங்கள் சீக்கிரம் ரசீது கொடுங்கள் நேரமானால் பண்டிதர் கோபித்துக் கொள்வார் என்றான். ரசீதை பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து புறப்பட்டான். அப்போது அரசவைக்கு தாமாஜி பண்டிதர் காவலர்களால் இழுத்து வரப்பட்டார். அவரைக் கட்டியணைத்த அரசன், பண்டிதரே! என்னை மன்னித்து விடுங்கள், இப்போது தான்
தாங்கள் அனுப்பி வைத்த பணம் வந்து சேர்ந்தது அறியாமல் உங்களைக் கைது செய்து விட்டேன். பணத்தை கொடுத்து அனுப்பியது பற்றி முன்கூட்டியே ஏன் தகவல் சொல்லவில்லை காவலர்களிடமாவது விஷயத்தை சொல்லியிருக்கலாமே என்றார். இதற்கு பண்டிதர் நான் பணமே கொடுத்து அனுப்பவில்லையே உங்களிடம் யார் கொடுத்தது
என்று கேட்டார். இதன் பிறகு வந்தவர் சாட்சாத் பாண்டுரங்கன் என்பதை இருவரும் புரிந்து கொண்டனர். தாமாஜியால் தனக்கும் கடவுள் தரிசனம் கிடைத்ததை எண்ணி மன்னன் மகிழ்ந்தான். இதன் பிறகு தாமாஜி அரசுப் பணியை உதறி விட்டு பண்டரிபுரத்திலேயே தங்கியிருந்து பாண்டுரங்கன் வழிபாட்டில் வாழ்நாளைக்
கழித்தார்.
இராம க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பூஜையின் போது பயன்படுத்தும் மந்திரங்களை தவறுதலாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா? இது பலருக்கும் உள்ள சந்தேகம்.
ஒரு பக்தர் இருந்தார். பரம்பரையாக அவர்கள் செய்து வந்த தொழில் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டது. வறுமையின் கொடுமையை அவரால் தாங்க முடியவில்லை. வசதியாக வாழ்ந்து பழகிய
பிள்ளைகள் அரை வயிற்றுக்கு கூட உண்ண வழியில்லாமல் தவித்தனர். பக்தருக்கு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களில் கடைசியாக மிஞ்சியவைகளை விற்று அரிசி பருப்பு வாங்கி கொண்டார். கூடவே விஷமும் வாங்கினார். சாகும் நேரத்திலாவது
குழந்தைகள் பசியாறி சாகட்டும் என்பது அவரது எண்ணம். வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பக்தரின் காதில் அவ்வூர் கோவிலுக்கு ஆதிசங்கரர் என்ற மகா ஞானி வந்திருப்பதாக செய்தி விழுந்தது. ஒரு வேளை இந்த ஞானியை தரிசனம் செய்தால் நமது கஷ்டம் தீர கூடுமோ? என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி நடந்தார்.
#MahaPeriyava
Author: Mrs Seetha Chidambaram
Source: kamakoti.org
My mother Mrs. M.S. Chidambaram and her mother visited Paramacharya of Kanchi Kamakoti Peetham in 1952 at a Siva temple in Mambalam to ask and receive His benign blessing before Sri M.A. Chidambaram
started to build the Adyar House at Kotturpuram, Madras. The Paramacharyal greeted the proposal heartily. He recalled His stay many times at the residence of Mrs. Chidambaram's father in Konapet in Chettinad and reminisced His carrying her as a baby.
At this meeting, His Holiness
was seated under the Nelli tree. Suddenly Nelli fruit got dislodged and fell on the ground. His Holiness asked my mother to eat the fruit remarking that it would taste sweet. Then He blessed her and granted her wish. He said that the house to be built at Kotturpuram will be
#மகாபெரியவா
"நீங்கள் செய்யும் நமஸ்காரத்தையும் ‘தண்டாகார நமஸ்காரம்’ ‘தண்டனிடுவது’ என்றுதான் சொல்வதென்றாலும் அங்கே அர்த்தமே வேறே. தண்டம் என்பது அங்கேயும் கழிதான். ஆனால் அஸல் கழியை இல்லாமல், அதை உபமித்து [உவமித்து] ‘தண்டனிடுவது’ என்று வந்திருக்கிறது. கழியை நிறுத்திப் பிடித்தால்
அது துளிக்கூட குழைவு இல்லாமல் அப்படியே நிற்கிறது. ‘கழியாட்டம் விறைச்சுண்டு நிக்கறயே!’ என்று பணிவு இல்லாதவர்களைக் கேட்கிறோம். அதே கழி பிடியை விட்டு விட்டால் ஒரே படிமானமாக பூமியோடு பூமி படிந்து அப்படியே கிடக்கிறது. ஜீவ மனஸ் பொதுவாகக் கழி மாதிரி விறைத்துக் கொண்டு நிற்பதுதான்.
அஹம்பாவப் பிடிப்பில் அது அப்படி இருக்கிறது – அஹம்பாவம் அதைப் பிடித்துக் கொண்டு உசத்தி கொண்டாடிக் கொண்டு நிறுத்தியிருப்பதில்! அந்த அஹம்பாவப் பிடிப்பை விட்டு விட்டால் மனஸ் தாழ்மையாகக் கிடக்கும். அப்படிக் கிடந்தே நிஜமாக உசந்ததில் உசந்த ஸெளக்யத்தைப் பெற்று விடும். இந்த மாதிரி மனஸைக்
#Kambar
He was born in Mayiladuthurai district in a town called Thiuvrezhundhur in the 12th century. It is said that Kambar's father was Adithan and Kambar's son was Ambigapathi. Ambikapati, being a poet, fell in love with Amaravati, the daughter of the Chola king. A failed
competition in poetry led to the Chola king refusing his daughter and killing Ambikapati. Due to this misfortune Kambar poignantly poems by Dasaratha when he misses his son Rama in Ramayana. Due to the conflict with the Chola king, Kambar went to Andhra for sometime. He was
supported by Sadayappa Vallal when he had no support from the king. Sadayappar was the Lord of a small area called Trikartha. Later the Chola king himself supported Kambar. The Chola king bequeathed Kambanadu to Kambar. Chola also gave the title Kavichakaravarthy. The epic
#மகாபெரியவா
கும்பகோணம் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் கூறியது.
ஸ்ரீ மஹாபெரியவா சிவாஸ்தானத்தில் அருள் செய்து கொண்டிருந்த சமயம். 12 வயது சிறுவன் கருணாமூர்த்தியிடம் அடைக்கலமாக வந்து நின்றான். சிறுவன் கண்களில் நீர்மல்கியிருந்தது “பெரியவா! எனக்கு அப்பா இல்லே, என்
தாயாரும், தங்கையும் பம்பாயில் ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் அம்மா சமையல் வேலை செய்கிறாள். என்னை மெட்ராஸில் கிறிஸ்துவ கான்வெண்டில் சேர்த்தார்கள். நான் எட்டாவது படிக்கிறேன். நிறைய மார்க்கு வாங்கறேன். இப்போ என்னை அவா கிறிஸ்துவ மதத்தில் சேருமாரும், எம். ஏ வரைக்கும்
படிக்க வைச்சு வேலை வாங்கி தருவதாயும் சொல்கிறார்கள். ஆனா எனக்கென்னவோ மதம் மாற மனசே இல்லை. மதம் மாற மாட்டேன். எனக்கு உபநயனம் நடக்க வேண்டும். எங்கம்மா கிட்டேயிருந்து நாலுமாசமா கடிதமே இல்லே. என் தாயும் தங்கையும் என்ன ஆனார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை”
சிறுவன் அழுதவாறே
#பூரிஶ்ரீஜெகன்நாதர்#நிர்மால்ய_பிரசாதம்
பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணிகளில் கட்டி, உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு
வைத்திருப்பார்கள். பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று நிர்மால்ய மகா பிரசாதத்தை வாங்குவார்கள். ஏனென்றால் மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் மிகப்பெரிய புண்ணியத்தை அடைவதாக ஐதீகம்.
ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய
பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள். ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற