அப்படிப்பட்ட அரிக்கொம்பனுக்கு பல்லியாறு எஸ்டேட் பகுதியில் மனைவி யானையும், மகனாக குட்டி யானையும் உண்டு.
தவிர அரிக்கொம்பனின் நண்பரான சக்கைக் கொம்பன் யானை என்பவர் சூரிய நல்லிப் பகுதியில் இருக்கிறான்.
8/25
பலாப் பழங்களைத் தின்றுவிட்டு சக்கைகளைப் போட்டு விடுவதால் அவருக்கு சக்கைக் கொம்பன் என்று பெயர் வந்தது.
பழங்குடியினர் அவனுக்கு அரிசியை வைத்து பழக்கபடுத்தி விட்டதால் அவனுக்கு அரிசி மீது தீராத காதல்,
காட்டில் வாழ்ந்தவனுக்கு உணவு கிடைக்கப் பெற்றால் எந்த பிரச்சினையும் இல்லை,
9/25
அதே காட்டில் உணவு தட்டுப்பாடும் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது அவனுக்கு பிடித்தமான அரிசி ஞாபகம் வந்து காட்டில் அரிசி தேடி அலைந்தவன் கடைசியில் அரிசியை தேடி எஸ்ட்டேட்டுகுள் அடிஎடுத்து வைக்கிறான்.
கேரளாவின் மூணாறு பகுதியின் சின்னக்காணல் மற்றும் உடும்பன் சோலை பஞ்சாயத்துக்களில்
10/25
வருகிற சின்னக்காணல், பெரியகாணல், பல்லியாறு, சூரியநல்லி, 301 காலனி, செண்பகத்தெரு உள்ளிட்ட ஏரியாக்கள் மலை முகடுகளின் பகுதிகளிலிருப்பவை.
இவைகள் தேயிலை மற்றும் ஏலக்காய் விளைச்சலைக் கொண்ட எஸ்டேட்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளக் குடும்பங்கள் எஸ்டேட்களில் வாழ்கின்றன.
11/25
இடுக்கி, மூணாறு சந்திக்குமிடத்தின் மலை வனப்பகுதியில் ஒற்றையாய் திரிந்து கொண்டிருக்கிற #அரிக்கொம்பன் 🐘 எதிர்பாராத வகையில் திடீர் திடீரென்று அருகிலுள்ள சின்னக்காணல் பஞ்சாயத்திற்குட்பட்ட தேயிலை எஸ்டேட்களுக்குள் நுழைந்து,
தொழிலாளர்கள் வைத்திருக்கிற உணவுகளை ஒரு பிடிபிடிப்பான்
12/25
காட்டுக்குள் இருப்பவன் ஏன் எஸ்டேட்டுக்கு வர வேண்டும்?
ஏன் அங்கு இருக்கும் தொழிலாளர்கள் உணவை பிடுங்கி தின்ன வேண்டும்?
என்று நீங்கள் கேட்பது புரிகிறது,
(பேராசை கொண்ட ஆறறிவு மனிதர்கள் அவனின் வழித்தடத்தை ஆக்கிரமித்ததின் விளைவு)
யானைகளுக்கான பாரம்பரிய வலசை பாதைகள் இருக்கிறது,
13/25
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை மொட்டையடித்து வைத்துள்ள தேயிலைத்தோட்டம் போன்ற பணப்பயிர்கள் உள்ள எஸ்டேட்டுக்கள் பெரும்பாலும் யானை வலசைப் பாதைகளையும் சோலைக்காடுகளையும் முழுங்கிவிட்டது,
தேயிலை தோட்டங்களும் அதனின் மின்சார வேலிகளாலும், தன் வலசை இழந்து திக்குத் தெரியாமல்,
14/25
தன் உணவு முறையை தொலைத்துவிட்டு அரிசியை தேடி எஸ்டேட்க்குள் நுழைகிறான்.
மலை மீது பல வேளைகளில் உணவு கிடைக்காத போது சின்னக்காணல் பஞ்சாயத்தின் எஸ்டேட் பகுதிகளில் நுழைந்து விடுகிற #அரிக்கொம்பன் 🐘 முதலில் மனிதர்களை தொந்தரவு செய்யாமல் அரிசியை மட்டும் தின்றுவிட்டு சென்று விடுவான்
15/25
2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சாதுவாக இருந்த #அரிக்கொம்பன்🐘 அதற்கு பிறகு அதாவது தனது 23வது வயதுக்கு பிறகு அவ்வப்போது விளையாட்டாக கோபம் கொள்ளத் தொடங்கியவன்,
ஒரு கட்டத்தில் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியதற்கு காரணமே அதற்கு ஏற்பட்ட மன அழுத்தம் தான் என்று சொல்லப்படுகிறது.
16/25
மனஅழுத்தத்தில் இருந்தவனை மேலும் உக்கிரமடைய செய்யும் வகையில் சிலரது நடவடிக்கைகள் அமைந்ததால் இப்படி காண்போரை கதி கலங்க வைக்கிறான்.
கம்பீரமான நடை பார்வையில் கூர்மை, மூர்க்க குணமான மிரட்டுகிற தோற்றம் என்பதால் மற்ற யானைகளை விட #அரிக்கொம்பன் 🐘 மீது மக்களுக்கு உதறலெடுகும் பயம்.
17/25
வீரப்பனுக்கு பின் அந்த காடுகளில் மிக மிக பிரபலமானதும் வனதுறை தூக்கத்தை கெடுப்பதும் நம்ம #அரிக்கொம்பன்🐘 தான்,
அவன் போக்கில் எல்லோரையும் கலங்கடித்து கொண்டிருக்கின்றான், அவனை என்கவுண்டர் செய்யமுடியாது, வழக்கு பதிய முடியாது என்பதால் மொத்த வனத்துறையும் நம்ம ஹிரோவின் 🐘
18/25
காலில் விழுந்து கெஞ்சி கதறிகொண்டிருக்கின்றனர், அவன் மனமிறங்குவதாக தெரியவில்லை,
காரணம் இதுவரை 60 ரேஷன் கடைகளை உடைத்து மற்றும் பல வீடுகள் புகுந்து அரிசியையும் சீனியையும் சாப்பிட்டுருக்கான்.
தமிழகம் கேரளம் என இரு மாகாண மலைபக்கமும் அவன் செய்த அட்டகாசங்கள் மிக அதிகம்,
19/25
வனத்துறையினருக்கு அவனை பிடிப்பதே பெரிய Mission,
கேரள வனப்பகுதியில் சர்வாதிகாரியாகவும் சக்கரவர்த்தியாகவும் கலக்கி வந்தான் #அரிக்கொம்பன்🐘
மூணாறுப் பகுதியில் தொடர் விரட்டல், மிரட்டல், காரணமாக 5 கோடிக்கும் மேல் செலவு செய்து கேரள வனத்துறையினர் மூணாற்றின் கீழ் பகுதிக்கு
20/25
மேகலை வழியாக போடி மெட்டுக்குப் போய் விட்டான்.
முதலில் பிடிபட்டபோது கழுத்தில் கட்டபட்ட ஜிபிஎஸ் பட்டையினை வைத்து விட்டார்கள்,
கம்பம் நகரின் முக்கிய வீதிகளுக்குள் ஜாலியாக உலா வந்தான்,
கம்பம் நகரே மிரண்டு போக, மக்கள் வெளியே வராமலிருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
21/25
மிடுக்கும் மூர்க்கத் தன்மையும் எள்ளளவு குறையாத அவனை வனத்துறையினர் Follow செய்தபோது, சண்முகநதி அணை அருகிலுள்ள காப்புக்காடு பகுதியில் ஒரு வாரம் காலம் தங்கி ஆட்டம் காட்டிய தலைவன்.
சாப்பிட போதுமான உணவு கிடைக்காமல் பசி காரணமாக ஆவேசமாகக் காணப்பட்டவனை பிடிப்பதற்காக வனத்துறையினர்
22/25
படாத பாடு பட்டனர் என்பது தனிக்கதை,
கடும் பசியிலிருந்த #அரிக்கொம்பன்🐘 உணவுக்காக சின்ன ஒவுலாபுரம் அடர்ந்த காட்டிலிருந்து, வெளியே வந்தபோது 12.45க்கு பிஸ்டல் மூலம் மயக்க ஊசி செலுத்தினர். 3.30 மணியளவில் மயக்கம் அடைந்த பின் 3 கும்கி யானை உதவியுடன் மிகவும் கஷ்டபட்டு கைது செய்து
23/25
தும்பிக்கையில் காயத்துடன், ஒரு காலின் பாதத்தில் ஒட்டை விழுந்த நிலையில் இப்போ முத்துக்குளி வயல் விட்டுருக்காங்க,
அங்கே மதம் பிடித்தது போல் சுற்றித்திரியும் #அரிக்கொம்பன் சற்று பக்குவப்படுத்தினால் அவன் குணாதிசியங்களில் மாற்றம் ஏற்படக்கூடும் என வனஉயிரின ஆர்வலர்கள் நம்பிக்கை,
24/25
அப்படியே கேரளா பக்கம் போய்விட்டால் நமக்கு தொல்லை விட்டது என்று தமிழக வனத்துறையினர் நினைக்கிறார்கள்,
கேரள வனத்துறையினர் அவன் இங்கே வரக்கூடாது என நினைக்கிறார்கள்
அவன் எங்கே செல்ல வேண்டும் அவன் ஒருவனால் மட்டுமே முடிவெடுக்க முடியும் அவன் #அரிக்கொம்பன்🐘 மட்டுமே,
தொடரும்...!
25/25
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பொதுவாக காட்டு யானைகள் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை,
வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும் சில நேரம் மீறும்,
ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.
அவைகளது புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்
2/25
வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி,
'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க,
சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்,
'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, மூனு நொடிக்கு Current Supply இருக்கும், அடுத்த ஐந்து நொடிக்கு சப்ளை வராது.
3/25
நேற்று நீண்ட நாட்களுக்கு பின் கோயிலில் அடியார் ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது,
தனக்கு எழரை சனி நடக்கிறது அதனால் மிகுந்த கஷ்டம் எற்படுகிறது, அனுபவிப்பதனால் தினமும் கோவிலுக்கு வருகிறேன் என்று புலம்பினார்,
நான் அமைதியாக அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தேன்,
1/28
15 நிமிடங்களுக்கு மேல் புலம்பி தள்ளிட்டார்,
நான் எதுவும் பேசாமல் இருப்பது அவருக்கு புரிந்தது நீங்களும் கும்பம் தானே என்றார்,
நான் ஆம் என்றேன்,
அப்ப உங்களுக்கும் தான் எழரை சனி நடக்கிறது நீங்க என்றார் ?
வேலை பளு தவிர எந்த பிரச்சனையும் இல்லை Normal ஆக இருக்கிறேன் என்றேன்.
2/28
நானும் தான் அடியார், தினமும் கோவிலுக்கு வருகிறேன், உங்களை மாதிரி தீட்சை மட்டும் தான் வாங்கல மத்தபடி நாம ஒன்னு தான் நீங்க சந்தோஷமா இருக்க நான் மட்டும் கஷ்டபடுறேன் ஏன் இப்படி ?
கடவுளுக்கு ஒரு நியாயம் தருமம் இல்லையா அடியார்களை கூட சமமாக பார்க்கமாட்டாரா என்று கடவுளை திட்டினார்
இத்திருச்சுற்றில் தெற்கில்
அகோர சிவன்,மேற்கில் தத்புருஷர்,வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்க பெற்று சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார்
கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது
மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
2/22
நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.
இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக,
“கதலிகா கர்ணம்’ என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது.
108 பரத நாட்டியமுத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள்,
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.
திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,
இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,
2/25
இராஜராஜன் என்றால் நம் நினைவுக்கு வருவது
அவரின் வீரமும்,
அவரின் ஆட்சியும்,
ஆட்சி நடத்திய விதமும்,
அவரின் பிரம்மாண்ட பெருவுடையாரை தாங்கிய தஞ்சை கோவிலும்,
கோவில் இருக்கும் கல்வெட்டுகளும்,
செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் தான்.
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,
இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,
எல்லாருக்கும் சிறு வயசு தான்.
2/24
வாய் வாத்தியம் இல்லாம சங்கு மட்டும் வாசித்தால் இந்த பிரச்சனை வரும் என்று இவர்களுக்கு யார் கூறுவது,
சங்கு மட்டும் தான் வாய் வாத்தியம் என்றும் மற்ற வாத்தியத்தின் பெயரும் பெருமையும் தெரியாத நிறைய அடியார்கள் கைலாய வாத்தியம் வாசிப்பது தான் கொடுமை
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,
இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,
2/23
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.