கோரமண்டல் விபத்துக்குள்ளான
10 நாளில் மேலும் 6 விபத்துக்கள்.
அதனைத் தொடர்ந்து சங்கி கூட்டம் முன்வைக்கும் ரயில்வேயை தனியார் மயமாக்கு கோஷம்.
இதற்கு முன்பும் ரயில்வேயை கைவிட அரசு முயன்ற போது கோமாளி என்று சங்கிகளால் அழைக்கப் பட்ட லாலு பொறுப்பேற்று லாபகரமாக்கினார்
2004-09 இல் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து
முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது.
இந்தச்சூழ்நிலையில் தான் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார். லல்லு ஒன்றும் பொருளாதார மேதை அல்ல ரயில்வே துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு.
தற்போதைய நிலவரப்படி 1.23 மில்லியன் தொழிலாளர்கள் வேலைப்பார்க்கும் உலகின் மிகப்பெரிய நிறுவனம். அப்படிப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்கிறார். அன்றைய காலகட்டத்தில ரயில்வேக்கென்று தனியாகவே பட்ஜெட் இருந்தது.
யாரும் ஏற்க முன்வராத பதவியை ஏற்று அதை வெற்றிகரமாக செய்தும் காட்டினார்.
2004 ஜுலை 6 -ம் நாள் லல்லு தன் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நாடே திரும்பிப்பார்த்தது. காரணம், பொதுவாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விலையேற்றம் தான் இருக்கும்.
ஆனால், லல்லு தன் பட்ஜெட்டில் விலை குறைப்பு செய்தார். சாதாரண வகுப்பில் இருந்து முதல் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு வரை
அனைத்துக்கும் பயணக்கட்டண குறைப்பு செய்தார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் துறை, இவர் வேறு பயணக்கட்டண குறைப்பு செய்கிறார் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை
லல்லு தன் வித்தியாசமான செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். .மக்கள் அனைவரும் ரயில்களை பயன்படுத்த போதிய இருக்கைகள் இல்லை.
புதியதாக ரயில்கள் வாங்கலாம் என்ற யோசனையை லல்லு ஏற்கவில்லை. இயங்கிக்கொண்டிருக்கும் ரயில் என்ஜின்களின் இழுவிசையை சற்று அதிகரிக்கச் சொன்னார்.
இதன் மூலம் ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை 15 ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது.
ரயில்வேக்கு வருவாயும் அதிகரித்தது. அடுத்ததாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்கச் சொன்னார். சாதாரணமாக 45 KMPH என்ற அளவில் இருந்த ரயில்களின் வேகம் 55 KMPH என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. கூடவே, சூப்பர் பாஸ்ட் ரயில்கள் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயண நேரம் மிச்சமாகியது.
பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியது.
அடுத்ததாக சரக்கு ரயில்களிலும் கவனத்தை செலுத்தினார். வெகு நாட்களாக உயர்த்தப்படாமலிருந்த சரக்கு ரயில்களின் கட்டணத்தை உயர்த்தினார். மேலும் சரக்கு ரயில்களின் சுமக்கும் அளவை அதிகரிக்க திட்டமிட்டார். ஆனால் உயர் அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை
இப்படிச்செய்தால் ரயில்களில் ஆக்ஸில்கள் உடைந்து மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும் என்றனர். லல்லு நேரடியாக ஆய்வுகளில் இறங்கினார். அதிகாரிகள் மட்டுமல்லாது பொறியாளர்கள், இன்ஜின் இயக்குபவர்கள், ரயில்வே தொழிலாளர்கள் என்று அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. முடிவாக 20.3 டன் என்ற
அளவில் இருந்து 22.9 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதனால் ரயில்வேவிற்கு 3000 கோடி லாபம் கிடைத்தது. நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த துறையை லாபகரமான துறையாக மாற்றினார் லல்லு. பதவியேற்கும் போது கையிருப்பு 149 கோடி.
ஆனால் பதவியேற்றப்பின் கையிருப்பு 12000 கோடி.
அன்று, லல்லு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ரயில்வே துறை என்றைக்கோ தனியார் வசமாயிருக்கும்.தன் மீது வைக்கப்பட்ட எல்லா எதிர்மறையான எண்ணங்களையும் அடித்து தூள் தூளாக்கினார். மிகச்சிறந்த பிசினஸ் பல்கலையான ஹாவர்டில் "லல்லு வின் ரயில்வே பணிகள்" இன்றும் பாடத்திட்டத்தில் உள்ளது.
யார் ஒருவரை ஊழல்வாதியாக, கோமாளியாக ஊடகங்கள் சித்தரிக்கிறதோ, அவர் உண்மையில் மக்களுக்காக சிந்திக்கும், உழைக்கும் சமூகநீதி சிந்தனையாளராக இருப்பார் என்பதற்கு லல்லு பிரசாத் யாதவ் உதாரணம்.
அவரது பிறந்த நாள் இன்று.
அவர் மகன் @yadavtejashwi டேக் பண்ணி ஒரு வாழ்த்து பதிவிடுங்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
9 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து எவ்வளவு லட்சம் கோடிகள் வரி வருமானமாக ஜிஎஸ்டி..தனிநபர் வருமானவரி...பிற வரிகள்....நீங்க ( ஒன்றிய அரசு) வாங்கினீங்க ???
அதில் எத்தனை % தமிழ் நாட்டிற்கு கொடுத்தீங்க.????
அதையும் சொன்னாத்தானே... மக்கள் நம்புவாங்க....
ஹலோ...
2023 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதும், தோனி பாஜகவில் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவார் என புரளியை சங்கிகள் கிளப்புகிறார்கள்.
அவர்களுக்கு சிறிய வரலாற்று சுருக்கம்
2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்தபோது விராட் கோலி வரவேற்று பேசி தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் கேட்டதற்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார்.
அந்தச் சிரிப்பே பொருள் பொதிந்ததுதான்.
தோனி 2017ல் கேப்டன் பதவியிலிருந்து விலகியவுடன், தோனியை பாஜக கையகப்படுத்திவிடலாம் என எண்ணியது. தோனி அதற்கு பிடிகொடுக்கவில்லை.
2018 ஆகஸ்டில் அமித் ஷா தனது படை பரிவாரங்களுடன் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்குப் படையெடுத்து 2014 ல் இருந்து மோடி செய்த சாதனைகளை எடுத்து கூறினாராம்
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சன்பீம் என்ற தனியார் பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியின் முதல்வர் மாணவியின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
காலை 9 மணி அளவில் மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பெற்றோருக்கு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
பதறிப்போன பெற்றோர் பள்ளிக்கு வந்து பார்த்த போது அவர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணம் குறித்து
பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல் தந்துள்ளது.
மாணவி ஊஞ்சலில் இருந்து விழுந்து இறந்ததாக பள்ளி தரப்பு கூறிய நிலையில், அவர் மாடியில் இருந்து விழுவது சிசிடிவி காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே, மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள் என பெற்றோருக்கு
செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ்:
"கடவுள் நம்பிக்கை குறித்து உறுதியான நிலைப்பாடில்லாத ஜவாஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராவதற்கு முந்தைய நாள் மாலையில், ஆன்மிக உணர்வில் வீழ்ந்தார்.
தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்து இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென கூறினர்
அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர்