#மகாபெரியவா
நீங்கள் பலமுறை இந்த சம்பவத்தைப் பற்றி படித்திருப்பீர்கள், இது பற்றி தெரியாதவர்களுக்காக இன்னும் ஒரு முறை.
சென்னையைச் சேர்ந்த திருமதி கலா மூர்த்தி பகிர்ந்தது:
ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து
என்ன ரொம்ப வலிக்கிறதா? என்று கருணையுடன் கேட்டார். பிறகு, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.
அஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி
வாதாலய வாஸ விஷ்ணோ
- ஸ்ரீமத் நாராயணீயம்
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும்
கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
நன்னாயிட்டியே என்றார் அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள் என்றார்.
அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி
பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஹனுமந்த_வாகனம்
ஹனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை. அவன் ஒரு சிரஞ்சீவி இன்னும் பூமியில் தானே வசிக்கிறான். அப்படி இருக்க ஏன் ஹனுமந்த வாகனம்?
இராமாயணத்தில் ஶ்ரீஇராம இராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு. ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை லக்ஷ்மணன் முதலில் எதிர்த்து போரிடுகிறார். ராவணன்
எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச் செய்து கொண்டே வருகிறான். ஶ்ரீலஷ்மணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன் இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு பிரம்மா விசேஷமாக தனக்கு தந்த அஸ்திரத்தை லஷ்மணன் மேல் ஏவுகிறான் ராவணன். தன் மார்பை நோக்கி வரும் அஸ்திரத்தை
மகிமையை உணர்ந்த லஷ்மணன் அதனை எதிர்க்காமல் விட அந்த வேல் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான். ராவணன் வேகமாக வந்து லஷ்மணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான். அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் ஹும் முடியவில்லை. இதை
#அகிலாண்டேஸ்வரி_சமேத_ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர்_கோவில் ஊட்டத்தூர்
பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில், திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த விக்ரகம் உளி கொண்டு செதுக்கப்பட்டது அல்ல. சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே
உருவாகிய அற்புதமான விக்ரகம் ஆகும். இது உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும். 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய
கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் #பஞ்சநதன_நடராஜர் என்று அழைக்கப் படுகிறார். சூரியன் காலையில் புறப்படும் போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக் கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகிறோமோ அது அப்படியே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி
#பஞ்சமுக_ஆஞ்சநேயர்
இராமருக்கும், இராவணனுக்கும் போர் நடந்தது. இதில் இராவணன் நிராயுதபாணியானான். இதனால் இராமர் இராவணனை கொல்ல மனமின்றி, இன்று போய் நாளை வா என திருப்பி அனுப்பி விட்டார். இராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை இராவணன் உணரவில்லை. மீண்டும் இராமருடன் போர்
செய்ய நினைத்த இராவணன் மயில் இராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். இராமரை அழிப்பதற்காக மயில் இராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் இராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை
அனுப்பும்படி இராமரிடம் கூறினான். இராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றி பெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்
#காஞ்சி_வரதராஜப்_பெருமாள்_கோயில் #திருக்கச்சி என்றும் அழைக்கப்படும் கோவில். 108 திவ்ய தேசங்களுள் கோயில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், மலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும். வைணவ பாரம்பரியத்தில்
திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில் நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ளதுஇராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிகிறார். #பெருந்தேவி
தாயார் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் பொ.யு. 1053ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது. முதலாம் விக்கிரம சோழனும் கோயிலை விரிவு
#தேசியம்
இந்திரா காந்தியை இரும்பு பெண்மணி என்று அழைப்பார்கள். அது உண்மையா? #விங்கமாண்டர்_அபிநந்தன் பெயரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த ஒற்றை பாரத வீரன் பத்திரமாக நாடு திரும்பவில்லை என்றால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருக்காது என்று முழக்கமிட்டவர் பாரத பிரதமர்
#மோடி. அபிநந்தன் போல வேறு சில விமானிகளின் பெயர் பட்டியல் இதோ!
விங் கமாண்டர் ஹர்சரன் சிங் டாண்டோஸ்,
படைத் தலைவர் மொஹிந்தர் ஜெயின்,
படைத் தலைவர் ஜே.எம்.மிஸ்திரி,
படைத் தலைவர் ஜே.டி.குமார்,
ஸ்க்வாட்ரன் லீடர் தேவ் பிரசாத் சாட்டர்ஜி,
விமான லெப்டினன்ட் சுதிர் கோஸ்வாமி
விமான லெப்டினன்ட்
வி வி டாம்பே,
பிளைட் லெப்டினன்ட் நாகசாமி சங்கர்,
பிளைட் லெப்டினன்ட் ராம் எம் அத்வானி,
ப்ளைட் லெப்டினன்ட் மனோகர் புரோகித்,
பிளைட் லெப்டினன்ட் தன்மய் சிங் டாண்டோஸ்,
பிளைட் லெப்டினன்ட் பாபுல் குஹா,
பிளைட் லெப்டினன்ட் சுரேஷ்சந்திரா சண்டல்,
பிளைட் லெப்டினன்ட் ஹர்விந்தர் சிங்,
ப்ளைட்