அன்பெழில் Profile picture
Jun 18 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
சங்கராம்ருதம் - 536
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

இளம் வயதுப் பையன். பழத்தட்டுடன் வந்து பவ்யமா நமஸ்காரம் செய்தான் பெரியவாளுக்கு.
"நீங்கதான் என்னோட குரு" என்றான்.

“ரொம்பப் பேர், அப்படி சொல்லிண்டிருக்கா!"

உதடு பிரியாத Image
புன்னகையுடன் பெரியவா.

"நான் அப்படியில்லே. உங்களைக் குருவாக வரித்து விட்டேன். எனக்கு ஸ்ரீ வித்யா ஷோடசி மந்த்ரம் உபதேசம் பண்ணணும். என்னைப் பரம சாக்தனாக ஆக்கணும். ஜான் வுட்ராஃபின் தந்திர நூல்களை எல்லாம் படிச்சு முடிச்சுட்டேன். Serpent Power எனக்கு நெட்டுருவே ஆயிடுத்து”

பெரியவாள்,
நிதானமாகக் கேட்டார்கள் "நீ இப்போ என்ன சாதனை பண்ணிண்டிருக்கே?"

"லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சௌந்தர்யலஹரி, மூக பஞ்சசதி, ஆனந்த ஸாகர ஸ்தவம்,சியாமளா தண்டகம்”

"இதுபோறும்.அம்பாளைத் தியானம் செய்” -பெரியவா

பையனுக்கு எரிச்சலாக வந்தது. சாக்தத்தில், தான் இவ்வளவு ஊறி இருந்தும் பெரியவா,
மந்திரோபதேசம் செய்ய ஏன் மறுக்கிறார்? என்பது புரியவில்லை. தன்னைப் போன்று தகுதி வாய்ந்த அபூர்வமான பாத்திரம் வெகு அருமையாகத் தானே கிடைக்கும்.

"பெரியவா எனக்குக் கட்டாயமா மந்திரோபதேசம் செய்யணும். அதற்காகவே நாள் பார்த்துக்கொண்டு இன்றைக்கு வந்திருக்கேன். உபதேசம் பெறாமல் போகமாட்டேன்"
என்றான் கடுமையான குரலில்.

பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். "உனக்குப் பசிக்கிறதா?"

"இல்லே.."

"பசி எடுத்தா என்னென்ன சாப்பிடுவே?"

"சாதம், குழம்பு, கூட்டு, கறி, அவியல், அப்பளம், ரசம், மோர்"

"உங்கம்மா, நீ பிறந்த அன்றைக்கே சாதம் போட்டாளா?"

"இல்லை. பால்தான் கொடுத்தா”
“அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சாதத்தையும் பருப்பையும் வெழுமூணா பிசைஞ்சு ஊட்டினாள். அப்புறமா இட்லி, தோசை சாம்பார், வெண்டைக்காய் கறி, புடலங்காய்க் கூட்டு இப்படித்தானே?"

"ஆமாம்”

"ஏன், அப்படிச் செய்தா? பொறந்த உடனேயே சாதம் ஊட்டி இருக்கலாமே?"

"ஜீரணம் ஆகாது. குழந்தைகளுக்கு ஒத்துக்காது.
கெடுதல் பண்ணும்”

இடையில், யார் யாருக்கோ பிரசாதம் கொடுத்தார்கள், குறைகளைக் கேட்டு ஆறுதல் கூறினார்கள். ஸ்ரீ மடம் அலுவல்களை உத்தரவிட்டார்கள். பின்னர், பையனைப் பார்த்தார்கள்.

"மந்திரங்களுக்கு ஜீவசக்தி உண்டு. கண்ணுக்குத் தெரியாத தெய்விக அலையாக தேகம் முழுவதும் பரவும். அதை,
குழந்தைகளாலே தாங்கிக்க முடியாது. பால் குடிக்கிற அதே குழந்தை, தக்க வளர்ச்சி ஏற்பட்டதும் சாதம், சாம்பார் சாப்பிடும் உனக்கு இப்போது பால பருவம், பால் பருவம். காத்திண்டிரு. சாதப் பருவம் வரும். அப்போது உனக்குச் சாதம் ஊட்டுவதற்கு, ஒருவர் வந்து சேருவார்."-பெரியவா.

ஸ்ரீ வித்யா மந்திரம்
கேட்டு வந்த வாலிபனுக்கு 'ஸ்ரீ'யே (பெரியவா) 'வித்யை' (வித்தை) காட்டி விட்டாள். ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்றான்.

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 20
#மகாபெரியவா அருள்வாக்கு
பசுவின் சாணம்/மலமும் பவித்திரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும். சாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களின் #பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே Image
சாயங்காலத்தில் பசுக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ணிய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது.
கோமாதா,
பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள். புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்ணிய ஸ்நானமாக இருக்கிறது! அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில்
Read 5 tweets
Jun 20
#மாவிளக்கு_தத்துவம்
காணும் இடங்களெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பேரொளி வடிவான இறைத்துவத்தையே மாவிளக்கு உணர்த்துகிறது. கடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு Image
மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். இது பலகாலமாக முன்னோர்களால் செய்யப்படும்  சம்பிரதாயமான வழிபாடு. பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த Image
மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, மாவின் நடுப்பகுதியில் குழிபோல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னிதியில் குறிப்பாக அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, வழிபாடு செய்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது. அரிசி [அன்னம்] பிராணமயம். அன்னம்
Read 9 tweets
Jun 20
#Foodforthough
There was an astrologer who was very renowned for calculating and predicting the horoscopes perfectly. People from far and near came to him seeking help. One day a poor peasant came to him with his horoscope. He was undergoing a lot of troubles and wanted to know Image
about his future. He had 2 small children and was worried how he was going to provide for them. The astrologer examined his horoscope, rolled the chozhi (cowry) and became thoughtful. He said I need to examine your horoscope in more detail, so you go home and come back tomorrow. Image
The peasant asked him about the fees. He said, there was no hurry for that, he can pay tomorrow. The astrologer's daughter was surprised by his behavior. She asked him why he sent the person away and asked him to come the next day when he could have easily told him what the water
Read 13 tweets
Jun 19
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
On several occasions I have learnt of Maha Periyava’s telepathic powers. Once my father’s bhiksha vandanam was fixed for a particular day in a town. Image
The previous evening at about six o’clock several persons from that town came to Maha Periyava and requested that they may be permitted to do Samashti bhiksha vandanam the next day. Maha Periyava said “The Dental Surgeon, Dr.Subramanian will be coming” The devotees said “Usually
he comes the previous afternoon itself. May be, he is held up at work and will not be able to come; Maha Periyava replied “You go out and see. He is just entering”. And sure enough my father appeared on the scene in a few seconds. At Sholapur I had the very unique opportunity of
Read 13 tweets
Jun 19
#திருக்காமீஸ்வரர்_திருக்கோயில் வில்லியனூர்
இத்தலத்தில் இறைவன் திருக்காமீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாய் அருள்புரிகிறார். ஒரு சமயம் பெருமாளுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவனும் Image
அவர்கள் இருவரில் யார் தன் அடியையும் முடியையும் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் எனக் கூறினார். இருவரும் அடி முடி தேடிச் சென்றனர். அப்போது பிரம்மா தான் போட்டியில் வெல்லும் நோக்கில் சிவனின் முடியைக் கண்டதாக பொய் கூறிவிடுகிறார். பொய் கூறியதால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. அந்த Image
சாபத்தை போக்க அருளுமாறு சிவனிடம் வேண்டினார். சிவனும் தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து அதில் சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும் என கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்தில் இருந்து விடுபட்டார். Image
Read 17 tweets
Jun 19
#மகாபெரியவா அருள்வாக்கு
பெயருக்கு தொண்டு செய்தால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணியதாகத் தான் அர்த்தம்.
சிக்கனமாயிருப்பது கருமித்தனம் அல்ல. சொந்த விஷயத்தில் ஆடம்பரமாக இல்லாமல் கணக்காயிருப்பது சிக்கனம். சிக்கனம் செய்யும் பணம் தர்மம் செய்வதற்கு உதவும்.
பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் Image
திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து, எளிமையாக இருக்க வேண்டும்.
நம் தவறுகளைக் கழுவிக் கொள்ள ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அழவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம், இந்த நிலையில் பிறருடைய தவறுகளை கண்டுபிடித்து கோபிப்பதில் நியாயம் இல்லை.
ஒருவரிடம்
எத்தனை தவறுகள் இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாதே. சிறிய நல்ல விஷயம் இருந்தால் அதனை கொண்டாட வேண்டும்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு அதிக பாக்கியங்கள் உள்ளது. அனைத்து பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதாகும். - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(