அன்பெழில் Profile picture
Jun 19 17 tweets 4 min read Twitter logo Read on Twitter
#திருக்காமீஸ்வரர்_திருக்கோயில் வில்லியனூர்
இத்தலத்தில் இறைவன் திருக்காமீஸ்வரர் என்ற திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாய் அருள்புரிகிறார். ஒரு சமயம் பெருமாளுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவனும் Image
அவர்கள் இருவரில் யார் தன் அடியையும் முடியையும் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் எனக் கூறினார். இருவரும் அடி முடி தேடிச் சென்றனர். அப்போது பிரம்மா தான் போட்டியில் வெல்லும் நோக்கில் சிவனின் முடியைக் கண்டதாக பொய் கூறிவிடுகிறார். பொய் கூறியதால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. அந்த Image
சாபத்தை போக்க அருளுமாறு சிவனிடம் வேண்டினார். சிவனும் தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து அதில் சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும் என கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்தில் இருந்து விடுபட்டார். Image
வில்வ காடாய் இருந்ததால் வில்வநல்லூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி வில்லியனூர் என்றாகியது. இத்தலத்து இறைவன் மீது பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய ஒளி படுகின்றது. இத்தலத்து அம்மன் முன் இரண்டு நந்திகள் இருப்பது சிறப்பாகும். இங்கு பைரவர் தனது நாய் வாகனம் இல்லாதிருப்பதால்
இத்தலம் முக்தி தளமாக விளங்குகிறது. இக்கோயிலின் உள்ளே வடபுறத்தில் பிரம்ம தேவரால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம் மிகப்பிரம்மாண்டமாக நடுவில் மஞ்சள் நிறத்தில் தக தகவென்று காட்சி தரும் நீராழி மண்டபத்துடன் காட்சி தருகிறது. குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத்தல தீர்த்தத்தில் நீராடி
சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. மண்டபத்தின் முடிவில், கோபுர வாசலின் வலது புறத்தில் விநாயகரின் சன்னதியும் இடப்புறத்தில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுருகப்பெருமான் சன்னதியும் உள்ளது. ராஜகோபுரத்தின் ஒரு நமக்கு வலதுபுறத்தில் அதிகார நந்தி மற்றும் சுயசாம்பிகை ஆகியோர் உள்ளனர்.
பிரகாரத்தில் சமயக் குறவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரையும், சந்தான குறவர்களான மெய் கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார், பொள்ளாப் பிள்ளையார் ஆகியோருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை சரி செய்யப் Image
பட்டு உள்ளது. ஈசனின் கருவறை பின்புற கோஷ்டத்தில் பெருமான் காட்சி தருகிறார் பிராகாரம் வலம் வரும்போது பிரம்மா துர்க்கை ஆகியோர் காணலாம். கருவறையில் அம்பிகை அருள் மிகு கோகிலாம்பாள் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். சிவபெருமானின் சன்னதியைப் பார்த்தபடி ஒரு நந்தியும் அம்பிகையின் Image
சன்னதியைப் பார்த்தபடி மற்றொரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அம்பிகை சன்னதியில் பார்த்தபடி உள்ள நந்திக்கு முன்பாக மற்றொரு சிறிய நந்தி அஷ்டபந்தனம் சாத்தாமல் உள்ளது. அந்த நந்தியைச் சுகப்பிரசவ நந்தி என்று கூறுகின்றனர். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருப்பவர்கள் இங்கு Image
வந்து சுகப்பிரசவ நந்திக்கு அபிஷேகம் செய்து, பிறகு அந்த நந்தியின் முகத்தை தெற்குப் பக்கமாக இருக்கும்படி திருப்பி வைத்து விட்டால் சுகப்பிரசவம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் திரும்பவும் வந்து அபிஷேகம் செய்து, நந்தியை முன்பு இருந்ததை
போலவே அம்பிகை சன்னிதி பார்க்கும்படி வைத்துவிட வேண்டும் என்கிறார்கள். இந்தப் பிரகாரத்தில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்களையும் காணலாம். முதலில் இங்கே அம்பிகை சன்னதி இல்லை பிற்காலத்தில் தர்மபாலன் என்ற மன்னன் வெண்குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டார். நோயில் இருந்து விடுபட தன்
குருவிடம் யோசனை கேட்டார் மன்னன். குரு கூறியபடி, வில்வ வனம் என்ற பெயரில் உள்ள பிரம்மனால் பூஜிக்கப்பட்ட திருக்காமேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டார். பின்னர் அவனுடைய நோய் முற்றிலும் நீங்கியது. அப்போது அந்த குளத்திலிருந்து அம்பிகையின் திருவுருவம்
கிடைக்கவே அந்த திரு உருவத்தை எடுத்து கோகிலாம்பிகை என்ற திருப்பெயருடன் கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார். இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமி, வைகாசி விசாக பிரம்மோற்சவம், 9-ம் நாள் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், அம்பிகைக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்தசஷ்டி, சூர சம்ஹாரம் Image
கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, சங்கரபாணி நதியில் மாசி மக தீர்த்தவாரி, பங்குனியில் சூரிய பூஜை, பிரதோஷம் என இங்கே அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடந்து வருகிறது. ஆலய தீர்த்தம் ஹிருத்தாபநாசினி. தலவிருட்சம், வில்வமரம். சுயம்புவாகத் தோன்றிய திருமேனி, பிரம்மன் பூசித்த தலம், சோழ
மன்னன் தருமபாலனால் உருவாக்கப்பட்ட ஆலயம் - சூரியன், சந்திரன், இந்திரன், மன்மதன், ஆதிசேஷன் எனப் பலரும் வழிபட்ட தலம், சுகப் பிரசவத்திற்கு உதவும் பிரசவ நந்தியுள்ள தலம், பங்குனியில் சூரியன் வழிபடும் தலம், வில்லைப்புராணம் கொண்ட கோவில், ஆண்டுதோறும் கவர்னரும் முதல்வரும் தேர் இழுக்கும்
தலம், பிரெஞ்சு ஆட்சியில் கண்காணிப்பு கோபுரமாக விளங்கிய ராஜகோபுரம், புதுவை மாநிலத்தின் பெரிய கோவில், என வரலாற்றுப் பெருமைகள் கொண்ட கோவிலாக விளங்குவது வில்லியனூர் திருக்காமீசுவரர் திருக்கோவில். இந்த ஆலயம் தினமும் காலை 4.30 மணி - 12 மணி வரை, மாலை 4 மணி - 9 மணி வரை திறந்திருக்கும். Image
புதுச்சேரி விழுப்புரம் சாலையில் 8 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 21
#ஸ்ரீவைஷ்ணவர்கள்_காலை_எழுந்தவுடன்_செய்ய_வேண்டியவை
1. காலையில் எழுந்தவுடன் ஹரி ஹரி என்று ஏழு முறை சொல்லித் தியானித்த பிறகு கண்களை திறக்க வேண்டும்.

2. கஜேந்திர மோட்சத்தை 5 நிமிடம் அளவு நாமே கற்பனை செய்து, அந்த தடாகத்தையும் தடாகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தாமரை மலர்களையும் அதில் 1000 Image
இதழ் கொண்ட ஒரு தாமரை மலரை அந்த கஜேந்திர ஆழ்வான் பறித்து எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க எண்ணியதையும், அந்தக் கைங்கர்யத்தை தடுக்க, முதலை அதன் காலைப் பற்றியதும், தன்னால் முடிந்த அளவு போராடி (ஆயிரம் யானைகளை வைத்துக் கொண்டு ஆயிரம் வருடங்கள் தன் கூட்டத்தோடு) முடியாத பிறகு எம்பெருமானிடம்
சரணாகதி செய்ததை நினைக்க வேண்டும் அந்த சரணாகதிக் குரல் கேட்டு எம்பெருமான் உடனே ஓடி வந்து அதனை ரட்ஷித்ததையும் நம் மனக் கண்ணாலே அனுபவித்து நம்மையும் அதுபோல காப்பான் என்று விசுவாசத்தோடு எம்பெருமானைத் தியானிக்க வேண்டும்.

3. நம் பாதத்தை பூமாதேவியின் மேல் வைப்பதற்கு முன் அவளிடம்
Read 9 tweets
Jun 21
#FoodForThought A Swamiji was traveling in a flight. When they were on air an airhostess started serving complimentary liquor to everyone. When she came to offer Swamiji, he politely refused. The airhostess said, "We offer this service which is not done in any other airlines, top Image
quality drink, please take it Sir."
Again the Swamiji refused. She persisted, "once you taste this drink you will never stop drinking this."
He refused again. The stewardess said, "At least for my repeated request you should taste a sip."
The Swamiji said, "I am sorry Amma, a
thinker like me cannot consume this mind altering drink. Why don't you offer my share to the pilot please?"
Immediately she replied, "Oh how can he drink when he is working? He might get inebriated and make some mistake while flying, causing an accident killing us all!"
Read 4 tweets
Jun 21
#MahaPeriyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal

A wrestler whose strength it was said was immeasurable, came to Kanchipuram. If a fistful of sesame seeds were given to him, he could crush it to oil quite casually. He had also won a number of competitions in boxing Image
and martial arts. So he had a horde of followers that admired him. His intention was to get a prize from Periyava. He was ready to exhibit his prowess in front of Periyava and was all set to wrestle with any one Periyava deputed as his opponent. A youngster who visited SriMatham
now and then and served there, let us call him Manakkal Krishna Sastri was a hefty, well-built man. Periyava sent for Krishna Sastri.

“Krishna, stand near the entrance for an hour. You must not move, what do you say?”

“As commanded”

Although no one including Krishna Sastri
Read 8 tweets
Jun 20
#Kapardeeswarar #Vellai_Pillaiyar #Shweta_Vinayakar Thiruvalanchuzhi, Thanjavur

Cauvery which was enshrined in the Kamandalam of sage #Agasthiyar liberated by Vinayakar and she started flowing towards Chola Nadu. When informed of the arrival of the holy river, King Haridhwajan Image
received her with pujas and prayers. The river took a right turn around Lord Siva, circumambulating him (valan-chuzhi) and entered a hole near the Lord (called the piladwaram). The king tried his best to block it but was unsuccessful. He took the help of sage Herandar, who took Image
the shape of a bee as ordained by Lord Siva and blocked the hole. The Kaveri started flowing again, out of the earth. Since the Kaveri came up from here, this place is also called Melakaveri. The temple is primarily a Chola period construction, and has some beautiful architecture Image
Read 22 tweets
Jun 20
#மகாபெரியவா
இந்த சம்பவத்தை சொன்னவர் பெயர் விவரம் தெரியவில்லை.

மகாபெரியவாள் எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தி இருக்கிறார். சாதாரண நிகழ்வு போலவே அற்புதங்கள் நிகழ்த்தும் கருணா மூர்த்தி அவர். சென்னையில் வசித்து வந்த ஒரு பெண்மணி ஒரு விபத்தில் தன் கணவர் மகன் மருமகள் மூவரையும் இழந்து Image
பேரன் ஒருவனுக்காகவே வாழ்ந்து வந்தார். பணத்திற்குக் குறைவில்லை. இன்ஷ்யூரன்ஸும் நிறையவே கிடைத்தது. பாங்கில் போட்டு விட்டு கிடைத்த வட்டியில் நன்றாகவே வாழ முடிந்தது. மகா பெரியவாளின் பக்தையான அவர் அடிக்கடி காஞ்சீபுரம் வந்து தரிசித்துப் போவார். பேரன் பள்ளிப் படிப்பு வரை நன்றாகப்
படித்து நல்ல மார்க்குடன் தேறி காலேஜ் சேர்ந்தான். காலேஜில் கெட்ட சகவாசத்தில் புகை மதுப் பழக்கங்கள் வந்தன. பாட்டி கண்டிக்க ஒருநாள் வீட்டை விட்டு ஓடிப் போனான். பாட்டி அழுதழுது பேப்பரில் எல்லாம் விளம்பரம் செய்து பார்த்தாள். பேரன் திரும்பி வரவே இல்லை.
காஞ்சிபுரத்திற்கே குடி வந்தாள்.
Read 8 tweets
Jun 20
#MahaPeriyava
From Mr P. Swaminathan who is well known in giving talks on Mahaperiyava at various places in and outside India.(Check YouTube)

Today (19.6.23 Monday) I gave a lecture on The greatness of Maha Periyava at Mylapore Kapalishwarar Temple. I spoke about Veda and Image
Vedanta. At one point I said, Veda Mantras can be realized, benefitted and enjoyed only through sound, by hearing them. The power of Vedas are such I told. After the event was over I went to Karpagambal Sannadhi with my wife and friend Ravi. We sat in front of Ambal on the left
side. Next second 4 young boys who are learning Veda came and sat opposite us. During Aarathi they chanted the Veda in a loud voice. I was very surprised. I have never seen boys reciting Veda there so far. “Veda can be enjoyed through sound and listening is what you said, so have
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(