#இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது ஒற்றை தலைமையின் ஆட்சியில் இருந்ததில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று இருந்ததில்லை. அதற்கென்று ஒற்றை அடையாளம் என்று எதுவும் இல்லை.
மாறாக இந்தியா என்பது,
பெரிய , தனி மன்னராட்சி அதிகாரத்துடன் கூடிய அரசுகளான
1. ஐதராபாத் நிஜாம் 2. ஜம்மு காஷ்மீர் ராச்சியம், 3. மைசூர் சமஸ்தானம், 4. சிக்கிம் ராச்சியம், 5. திருவிதாங்கூர் சமஸ்தானம 6. பரோடா அரசு,
மற்றும்
டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளான
1. சதாரா அரசு 1848 2. நாக்பூர் அரசு 1854 3. தஞ்சாவூர் மராத்திய அரசு 1855 4. அயோத்தி இராச்சியம் 1859 5. அங்குல்(அனுகோள்) அரசு (Angul State-1848) 6. ஆற்காடு அரசு 1855 7. பண்டா அரசு (Banda State-1858) 8. குல்லர் அரசு (Guler State-1813) 9. ஜெயந்தியா அரசு (Jaintia State_1835)
10. ஜெய்த்ப்பூர் அரசு (Jaitpur State_1849) 11. ஜலாவுன் அரசு (Jalaun State_1840) 12. ஜஸ்வன் அரசு (Jaswan State_1849) 13. ஜான்சி அரசு (Jhansi State-1854) 14. கச்சாரி அரசு (Kachari State-1830) 15. காங்கிரா அரசு (Kangra State-1846) 16. கண்ணனூர் அரசு (Kannanur State-1819)
17. கிட்டூர் அரசு (Kittur State-1824) 18. குடகு இராச்சியம் (1834) 19. கொலபா அரசு (Kolaba State-1840) 20. கோழிக்கோடு அரசு (Kozhikode State-1806) 21. குல்லூ அரசு (Kullu State-1846) 22. கர்னூல் அரசு (Kurnool State-1839) 23. குட்லேஹர் அரசு (Kutlehar State-1825)
24. மக்கரை அரசு (Makrai State-1890 - 1893) 25. நர்குண்டு அரசு (Nargund State-1858) 26. பஞ்சாப் அரசு (Pañjab State-1849) 27. ராம்கர் அரசு (Ramgarh State-1858) 28. சம்பல்பூர் அரசு (Sambalpur State-1849) 29. சூரத் அரசு (Surat State-1842) 30. சிபா அரசு 31. துளசிப்பூர் அரசு (1859)
32. உதய்ப்பூர் அரசு, (சத்தீஸ்கர் மாநிலம்) (1860)
மேலும், ஏறக்குறைய 225 சிறு குறு மன்னராட்சி அரசுகளையும் உள்ளடக்கிய பல்வேறு இன, மொழி, கலாச்சாரங்களை உள்ளடக்கிய தனி நாடுகளாக இருந்தது.
1948 க்கு பிறகு இவற்றை எல்லாம் ஒன்றிணைத்து உருவான பல நாடுகளின் கூட்டமைப்பு தான் இன்றைய இந்தியா
என்பது கடந்த கால வரலாற்றை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
இதில் எந்த நாடுகளும் ஒரே மொழியை பேசியதில்லை, ஒரே உணவு பழக்கத்தை கொண்டிருக்கவில்லை, ஒரே கலாச்சாரத்தை உடையதாக இல்லை, ஒரே தெய்வ வழிபாடு முறை கொண்டிருக்கவில்லை, ஒரே நிறமும், தோற்றமும் கொண்டவர்களாக இருக்கவில்லை.
300 க்கும் மேற்றப்பட்ட நாடுகள் ஒரே கூட்டமைப்பில் இணைந்த ஒரே காரணத்திற்காக ஒரே கலாச்சாரம், ஒரே மொழி , ஒரே மதத்தை பின்பற்றி ஒரே குடிகளாக மாற வேண்டும் என்பதும், வாழ வேண்டும் என்பதும் அந்த மக்களின் மேல் திணிக்கப்படும் அதிகார வன்முறை தான் அன்றி வேறில்லை.
இந்த 300 நாடுகளில் எதை நீங்கள் இந்திய தேசமாக சொல்கிறீர்கள்?
எந்த நாடு பழைய இந்தியா?
இந்திய தேசம் என்பதின் ஆரம்ப புள்ளி எந்த நாடு? என்று உங்களால் சொல்ல முடியுமா?
இத்தனை நாடுகளையும் 1948 ம் ஆண்டிற்கு பின் ஒருங்கிணைத்து உருவாக்கிய மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இன்றைய இந்தியா.
இதை தான் டாக்டர் அம்பேத்கர் " India, that is Bharat, shall be a Union of States " என்று தான் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தில் எழுதி இருக்கிறார்.
#ஒன்றிய_அரசு என்பது தான் அரசியல் சாசனம் சொல்வது. சட்டபடியானது.
#தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் தனி அடையாளமும், தனி மொழியும்
கலாச்சாரமும் கொண்ட ஒரு மாநிலம்.
மத்திய அரசு என்பது மக்களின் மீது மாநிலங்களின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறை.
(1). அரசுக் காரியம் எதை செய்தாலும் அதற்குரிய சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சர்வே செய்யும்போது சர்வே மற்றும் புல எல்லை குறித்த சட்டம் 8/1923-ன்படி சர்வே செய்ய வேண்டும். இதில் 27 பிரிவுகள் உள்ளது. அவை பின்வருமாறு..
(2). சர்வே அதிகாரியின் பெயரிலோ (அல்லது) பெயரில்லாமலோ சர்வே செய்வது பற்றியும் அவரின் அதிகாரம், பணிவிவரம், காலம் பற்றிக் கூறுவதாகும்.
(3). ஒரு இடத்தை சர்வே செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட விவரம், தமிழ்நாடு அரசிதழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும்.
(4). சட்டப்பிரிவு 5-ன்படி
நியமிக்கப்பட்ட சர்வே அதிகாரி, அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை வைத்து அவரை சர்வே செய்யும் இடத்தைப் பற்றி அவ்விடத்தின் சம்பந்தப்பட்டவர்களின் நலனுக்கான அந்த மாவட்டத்தில் பிராந்திய மொழியில் 2 பிரசுரம் செய்ய வேண்டும். அதில் நில உரிமையாளர்களோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ சர்வே அதிகாரி
ஒரு காலத்தில் உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்.
பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று
உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான்
வாங்கிச் சென்று வெளியே சாப்பிட வேண்டும்.
சென்னையில் அன்றைய மவுண்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும்
இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர்.
இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்ல. இருப்புப் பாதைகள் போடப்பட்டு, இரயில்
பயணம் தொடங்கிய காலத்தில்,
நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் இரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.