🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰 Profile picture
உலகை காக்கும் இனிய ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் பரமே பராபரமே 🙏 🌿எம் தந்தை வெள்ளியங்கிரி ஆண்டவரின் துணை 🌿🌿🌿🌿 ஓம் சரவண பவ 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை
Jul 4, 2023 6 tweets 1 min read
எம் தந்தை சிவபெருமானின் ஆசியுடன் செவ்வாய்க்கிழமை காலை வணக்கங்கள் 🙏🏻

திருவாசகம் எட்டாம் திருமுறை 29. அருட்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை

துணைமுலைக் கண்கள்தோய் சுவடு

பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு

பொங்கொளி தங்குமார் பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : துடிகொள் - உடுக்கை வடிவம் கொண்ட, நேர் இடையாள் - நுண்ணிய இடையினையுடையாளாகிய, சுரிகுழல் மடந்தை - சுருண்ட கூந்தலையுடைய உமையம்மையின், துணை -
Jun 30, 2023 6 tweets 1 min read
எம் தந்தை சிவபெருமானின் ஆசியுடன் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கங்கள் 🙏🏻

திருவாசகம் எட்டாம் திருமுறை 29. அருட்பத்து
(திருப்பெருந்துறையில் அருளியது)

நிருத்தனே நிமலா நீற்றனே நெந்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி
உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையிற்
செழுமலர் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.

பதப்பொருள் : நிருத்தனே - கூத்தப்பெருமானே, நிமலா - மலமில்லாதவனே, நீற்றனே - திருவெண்ணீற்றையுடையானே, நெற்றிக் கண்ணனே - நெற்றிக்கண்ணையுடையானே, விண்ணுளோர் பிரானே - தேவர்
Feb 17, 2023 5 tweets 1 min read
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

எம் தந்தை சிவபெருமானின் இனிய ஆசியுடன் சிவ காலை வணக்கங்கள் 🙏

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. இப்பாடலில் ஐந்தொழிலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது

விடையேறி-படைத்தல்: விடை-அறக்கடவுள் சங்காரத்தில் அறக்கடவுள் இறைவனோடு இருந்து மீண்டும் உலகப்படைப்பின் போது உளதாகக் குறிப்பு

மதிசூடி-காத்தல்: மதி-சந்திரன்: தக்கனது சாபத்தால் அழியாமல் காத்த குறிப்பு

பொடிபூசி-ஒடுக்குதல்:-மாசங்காரம்
Feb 16, 2023 11 tweets 4 min read
அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏
#வெள்ளியங்கிரி மலை ஏற நடை நாளை முதல்
17 :02:2023அன்று திறக்கப்பட்டது.may 30 வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூண்டி செல்லும் பேருந்தில் செல்லலாம் . அல்லது ஈஷா செல்லும் பேருந்தில் செல்லலாம். Image ஈஷா செல்லும் பேருந்தில் சென்றால் தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் இறங்கி ஒன்றரை கிலோ மீட்டர் நடக்கவேண்டும் அல்லது அங்கு இருக்கும் ஆட்டோவில் செல்லலாம்.
மலை ஏறுகிறவர்கள் ஒருவருக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் கேன் உணவு (புளி சாதம் சப்பாத்தி அல்லது விரைவில் கெடாத உணவு ஒரு நேரத்திற்கு),
Feb 16, 2023 4 tweets 2 min read
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

எம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

திருமூலா் அருளிய #திருமந்திரம்
#பத்தாம்திருமுறை

திருச்சிற்றம்பலம் 🙏

உடலில் புகுந்து நின்றனன் இறைவன்

குறைந்து அடைந்து ஈசன் குரைகழல் நாடும்

நிறைந்துஅடை செம்பொனின் நோ்ஔி ஒக்கும் மறைஞ்சுஅடம் செய்யாது வாழ்த்தவல் லாா்க்குப்

புறம் சடம் செய்யான் புகுந்துநின்றானே.

சிவபெருமான் திருவடியில் மிக்க விருப்புடையவராய் அவன் திருவடி உணா்வால் தாழ்ந்தடைந்து அத்திருவடியினை அடைய விரும்புவாராக. அப்பெருமான் நிறைந்த செம்பொன்னின் ஔியைப் போன்றவன். வஞ்சனையால் மறைந்து
Feb 15, 2023 4 tweets 2 min read
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏

எம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

அப்பனுமாய் அம்மையுமாய் இடரினும் தளரினும் நீயே கதி என் அப்பான் ஈசனே🌿
சர்வமே சிவம் 🔥
ஈசனே தவம் 🙏
ஓம் நம சிவாய 🌿🌿

#வெள்ளியங்கிரிஆண்டவர் Image ஓம் நம சிவாய 🌿

திருச்சிற்றம்பலம்

"இணைஆர் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணைஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்துஒழித்தேன்
அணைஆர் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடி பூவல்லி கொய்யாமோ!" Image
Aug 9, 2021 6 tweets 2 min read
#மாயை
இதற்கான பல விளக்கங்களில் ஒரு விளக்கம் யாதெனில்...

நாம், காண்பவை அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க விளையும் போது அது விரிந்து கொண்டே செல்கிறது. அதற்கு உதாரணம் வானம். அதைப் பார்க்கும் போது அதன் எல்லைகள் முடிவில்லாமல் விரிந்து கொண்டே இருப்பதுதான்...1

நாம் தனியாக ஒரு பொருளை மாத்திரம் எடுத்து அதை நுணுக்கமாக அறிய விரும்பி பொடித்துக் கொண்டே போனால், அணுக்களாகி, குவார்க்குகளாகி இன்னும் என்னவெல்லாமோ ஆகி, ஆகி, ஆகிக்கொண்டே இருக்கும்.2
ஆக,நாம் இந்த இரு extremeகளையுமே தொடர்ந்து விரட்டிக் கொண்டே போகும்போது..

"இந்தா புடிச்சிக்கோ"வென அவைகளும் விரிந்து கொண்டும்,
Aug 9, 2021 6 tweets 3 min read
#இன்றையசிந்தனைகள்

#இராமகிருஷ்ணரின்உபதேசம்

எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி. இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம்.
#சுவாமிவிவேகானந்தரின்
#வீரமொழிகள்
இல்லறத்தான் இறைபக்தி கொண்டவனாக இருக்க வேண்டும் இறை ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும்.அதேவேளையில் அவன் இடையீடின்றிச் செயல்புரிய வேண்டும்.செயல்கள் அனைத்தின் பலனையும் அவன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
Aug 9, 2021 6 tweets 2 min read
#பகவத் #கீதையில் #பகவான்

கிருஷ்ணன் உபதேசம்; திருநீறு
'விபூதி பூதிரைச்வர்யம்' என்று ‘அமர கோச’த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்த பின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும். எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னியுடம் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மகா பஸ்மம்.
Aug 7, 2021 4 tweets 1 min read
ஓம் சரவணபவ 🙏

மனிதனுக்கு உயிரை கொடுத்தவன் இறைவன்

அந்த மனிதனுக்கு விதி முடிந்தால் அவனது மரணம் தவிர்க்க முடியாது.

இறைவனின் அங்கமாக இருந்து வரும் இயற்கைக்கு எதிராக‌‌..விரோதமாக..‌. மனிதன் செயல்பட்டால்..

நோயின் தாக்கத்துக்கு ஆட்பட்டு நோயாளி ஆகி துன்ப்படுகிறான், துயரப் படுகிறான். Image அத்தகைய கொடிய நோயின் தாக்கத்துக்கு உள்ளான் மனிதனுக்கு...

இறைவனின் கருணை பார்வை கிட்டினால்..

இறைவன் அவனை நாடினால்..

எந்தவித நோயானலும் அந்த நோயிலிருந்து விடுபடுகிறான், குணமாகிறான்.என்பது

உலகில் பிறந்து..இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகின்ற உலக மக்கள் 99% சதவீத நம்பிக்கையாகும்.
Jul 28, 2021 11 tweets 2 min read
பத்தர்தமக்கு எளியோனே ...

அந்த காட்டில் ஒரு வேடன் மிருகங்களை வேட்டையாடி தம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருந்தான்.அவன் போதாத நேரம் அதே காட்டில் தவத்திற்காக தங்க வந்த ஒரு துறவி அவனிடம் , "இப்படி மிருக்கங்களைக் கொன்று பாவம் சேர்க்கிறாயே..இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பு உன்னிடம் இல்லவே இல்லையா..?"என்றார்.
"சாமி...என்னைப் போல ஆட்களுக்கு எல்லாம் உங்களைப் போல பெரியவங்கதான் சாமி...எனக்கு எல்லாம் எப்படி சாமி கண்ணுக்குத் தெரிவார்.."
துறவிக்கு தவம் கெடக்கூடாது ...இவன் வேட்டை யாடுவது அவருக்கு இடைஞ்சல்,, .. "இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்...
Jul 28, 2021 4 tweets 2 min read
#அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய மாலை வணக்கம் ..!🙏🙏🙏

#திருச்சிற்றம்பலம் ..!

23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?

ஆமாம் உண்மை தான் .

நீங்கள் கிரிவலம் போகும் பாதையில் அமைந்துள்ளது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது .

1 ஸ்ரீ அப்புசாமி சுவாமிகள்
2 அய்யன் சுவாமிகள்
3 அவிநாசி லிங்கம் சுவாமிகள்
4 அருணாசல சுவாமிகள்
5 இராமலிங்க சுவாமிகள்
6 இராமகிருஷ்ண சுவாமிகள்
7 கண்ணப்ப சுவாமிகள்
8 சங்கலி சுவாமிகள்
9 பட்டாம்பி சுவாமிகள்
Jul 27, 2021 4 tweets 1 min read
இனிய மாலை வணக்கம் நண்பர்களே

திருஞானசம்பந்தர் சுவாமிகள்
தேவாரத்திரட்டு
திருச்சிற்றம்பலம்

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ
🌹வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் வாளை மீன்கள் துள்ளிச்செல்கின்றன; பெண்கள் குளத்தில் குளிக்கின்றனர். இப்படி இருப்பது கோலக்கா என்னும் தலம். இங்கே இருக்கிறான் சிவன்.
இச்சிவன் சடையில் பிறை சூடி இருக்கிறான்; உடம்பில் விபூதி பூசி இருக்கிறான்; கீள்உடை கட்டி இருக்கிறான். இப்படிப்பட்ட உருவத்தை ஏன் கொண்டான்?
நலங்கொள் காழி
Jul 27, 2021 5 tweets 1 min read
ஓம் சிவாய நமஹ
சிவ சிவாய நமஹ.....

**சிந்திப்போமே"*

_*சிவத்தைப் பெறுவதற்கு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்?*_

முதலில் நாம் " விட " பழகிக்கொள்ளவேண்டும். கைவிட முயல்வோம்.

குரங்கு ஒன்று அந்த விவசாயிக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தது. குரங்கைப் பிடிக்க திட்டமிட்டார் விவசாயி. Image குரங்கு பார்க்கும் வண்ணம் ஒரு கண்ணாடி ஜாடியில் அதற்கு மிகவும் பிடித்த வாழைப்பழங்களை வைத்தார். ஜாடிக்கு மூடி போடவில்லை. ஜாடியின் வாய் சற்றே சிறியது.

இதைப் பார்த்த குரங்கு ஆசைப் பட்டு அந்த வாழைப்பழத்தை பற்றியது. அதைப் பார்த்த விவசாயி அதனருகே வந்தார். அவர் வருவதற்குள் குரங்கு
Jul 27, 2021 4 tweets 1 min read
அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம்...!

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ஆறாம் திருமுறை.

திருத்தாண்டகம்.

தலம்; திருஆலவாய் (மதுரை )

அருள்மிகு மீனாட்சி அம்மை உடனுறை சுந்தரேஸ்வரா் போற்றி .

வாயானை மனத்தானை
மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் Image தூயானைத் தூவெள்ளை
யேற்றான் தன்னைச்
சுடா்த்திங்கட் சடையானைத் தொடா்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தம்மையானைத்
தலையாய தேவாதி தேவா்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
பாடல் விளக்கம்;
பேசுதற்கும் எண்ணுதற்கும் உாிய வாய் மனம் ஆகியவற்றில் கலந்து