தங்கமணி / Thangamani Profile picture
Material Scientist, Naturalist, Bird-watcher. Interested in Tamil heritage, language, literature, archeology and temple architecture.
Aug 1 8 tweets 2 min read
1/8
1955ல் #கங்கைகொண்டசோழபுரம் இருந்த நிலைமை. அப்போது அது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் வந்திருக்க வேண்டும். அதற்கு முன், குறிப்பாக விடுதலைக்கு முன் அதன் சொத்துக்கள், நிலங்கள், நகைகள் எல்லாம் அரசு அல்லது #தொல்லியல் துறையின் கீழ் அல்லாமல் சாதி #இந்துக்கள் கொண்ட அறங்காவலர் 2/8
குழுவாலும், ஆகமவழிபாட்டைச் செய்து வந்த அந்தணோத்தமர்களாலும் தான் பேணப்பட்டு வந்திருக்கும். தஞ்சைப்பகுதி இஸ்லாமிய/ ஆங்கிலேயே படையெடுப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியும் அல்ல. அது நாயக்கர்கள் பிறகு மராட்டிய இந்து மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பகுதிதான். எனவே சமூக அதிகார அமைப்பு
Jul 11 5 tweets 1 min read
பெரியார் கருப்பையை அகற்றச் சொன்னார் என்று ஒருவர் ஆபாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். பெண்கள் நடமாடும் கருப்பைகள்; அவர்கள் பிறப்பதும், வாழ்வதும் கருப்பைகளாகவே; கருப்பைகளாக அன்றி அவர்களுக்கு சுயமான மதிப்போ ஏன் இருப்போ கூட இல்லாத சமூக கட்டமைப்பை காட்டவே அவர் கருப்பையை அகற்றுவதை
1/5 Image பேசினார். மேலும் குழந்தை பிறப்பும், வளர்ப்பும் முழுக்க முழுக்க பெண்களின் பொறுப்பாகவும், அவர்களது உடல்நலம், கல்வி, திறன்கள், வாழ்க்கைத் தேர்வுகளை என்று அனைத்தையும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும் ஒரு சமூக சூழல் மாற அவர் கர்ப்ப ஆட்சி என்ற புதிய சொல்லாடலையே தமிழில் கொணர்ந்தார்.
2/5
Jul 10 4 tweets 1 min read
தமிழ்நாடு இப்படித் தனிச்சட்டகத்தில் இயங்குவதற்குக் காரணம் திராவிட இயக்கம் என்றாலும், திராவிட இயக்கம் ஒரு பொய்யான பிராந்திய தேசியவாதத்தை கர்நாடகம் போல பேசாமல் சுயமரியாதையும் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டிருப்பது தமிழ்ப்பண்பாட்டின் நீட்சியாக அது எழுந்ததால்தான். 1/4 திராவிட இயக்கத்தின் குரல் அதனிடமிருந்து தொடங்கியதல்ல. 2000 வருட தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்களை அது மீள்கண்டுபிடிப்பு செய்து அரசியல்படுத்தியது. வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபில் வந்தவன் என்ற வள்ளலாரின் 6ம் திருமுறையை பெரியார் பதிப்பித்து வழங்கியது அத்தொடர்ச்சியால்தான். 2/4
May 9, 2023 11 tweets 5 min read
1/10
சில நாட்களுக்கு முன் #திருவள்ளுவர் பாறைக்கும் #விவேகானந்தர் மண்டபத்திற்கும் சென்றோம். திருவள்ளுவரின் 7000 டன் எடை கொண்ட, 133 அடி உயரச் சிலை (மண்டபம் + சிலை) மிக முக்கியமான, அழகான மிகச்சரியான இடத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. எல்லா சிலைகளும் பண்பாடு, அரசியல் நோக்கங்கள் கொண்டவை. ImageImage 2/10
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்ததாக கருதபட்ட பாறையில் RSS ன் ஏக்நாத் ரானடே 1971ல் #கலைஞர் அரசிடம் அனுமதி பெற்று சிலை எழுப்பிய சில வருடங்களிலேயே அங்கு வள்ளுவருக்கு தக்கதொரு சிலை எழுப்பவேண்டியதை கலைஞர் உணர்ந்து 1973ல் அப்பணியைத் தொடங்கியிருக்கிறார். ImageImage