Sriram Profile picture
Bharathiya. வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு. Vande Mataram.
Jan 23, 2021 14 tweets 3 min read
#சமஸ்கிருதம்
#தமிழ்
#செம்மொழி

சமூக வலைத்தளங்களில் சிலர், "சமஸ்கிருதம் செத்த மொழி" என்று சர்வசாதாரணமாகப் பேசிச் செல்கின்றனரே. சற்றுச் சிந்திப்போம்.

முதலில், சமஸ்கிருதம் பற்றிய ஒரு சிறு இழை👇1/ அடுத்து, ஒரு சிலர், "சமஸ்கிருதமே தமிழில் இருந்து தோன்றியது தான்" என்று ஒரு கதை விடுவர்.

சரி - அப்படியானால், அமிழ்தினும் இனிய
தமிழில் இருந்து தோன்றிய ஒன்று - சாகாவரம் பெற்றிருக்க வேண்டுமே?!

இவர்கள் சமஸ்கிருதம் மீதிருக்கும் வெறுப்பில் தமிழை அல்லவா பழிக்கின்றனர்! 2/
Jan 9, 2021 33 tweets 7 min read
#தமிழ்க்கடவுள்
#விநாயகர்
#பிள்ளையார்

"முருகன் தமிழ்க் கடவுள், ஆனால் பிள்ளையார் வடநாட்டுத் திணிப்பு" என்ற அறிவிலிப் பிரச்சாரம் செய்யும் திராவிட மற்றும் போலித் தமிழ் இயக்கங்களுக்கு,

பிள்ளையார் பெருமான் தமிழ்க் கடவுளே. ஆதாரங்களைப் பார்க்கலாமா?
@thirumaofficial
@SeemanOfficial + "கைத்தல நிறைகனி" திருப்புகழ் பாடல் என்ன சொல்கிறது?

"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே"

அதாவது,
முத்தமிழின் பெருமையை மூத்த மலையாகிய மேருவில் முதலில் எழுதினாராம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான்!

எப்படி! தென்பொதிகைத் தமிழ் வடமேருவில், விநாயகரால்+
Oct 27, 2020 20 tweets 4 min read
மநுதர்ம சாஸ்திரம் பற்றியும் பெண் அடிமைத்தனம் பற்றியும் வாய்கிழியப் பேசும் திராவிட/தனித்தமிழ்நாடு டுமீல் இயக்கங்களின் யோக்கியதையைச் சற்றுச் சிந்திப்போம்.
1/ ஈவெரா, தன் மனைவி நாகம்மையார் கோவிலுக்குச் செல்வதைத் தடுப்பது எப்படி என்று பகுத்தறிவு கொண்டு சிந்தித்துச் சில குண்டர்களை அழைத்தான். "நம் ஊருக்கு ஒரு புது தேவரடியாள் வந்திருக்கிறாள்" என்று தன் மனைவியை அவர்களிடம் கைகாட்டினான். அவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த அம்மையாரைக்
2/
Mar 17, 2020 9 tweets 1 min read
நமது பாராளுமன்ற மாநிலங்களவைக்கு முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரஞ்ஜன் கோகோய் (ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களால்) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சர்ச்சை சரியானதா?+ முதலில், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முறைகளைப் பார்ப்போம்.

மாநிலங்களவையின் மொத்த இடங்கள்: 245

இதில், மாநில, யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவது: 233

ஜனாதிபதி நியமிப்பது: 12
+
Feb 10, 2020 8 tweets 2 min read
#செவ்வேள்
#தமிழ்க்கடவுள்
#முருகன்

"முருகப்பெருமான் ஆரிய ஆகமங்களுக்கு உட்படாத அழகு; தமிழர்களின் முருகன் கருப்பு நிறம்" என்றெல்லாம் சிலர் பிதற்றுகிறார்களே;

உண்மையில், சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் முருகப்பெருமானின் நிறம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது எது?+ முருகன் "செவ்வேள்" என்று தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகிறார்.

செவ்வேள் = செம்மை நிறம் பொருந்தியவர்!

சங்க இலக்கியமான பரிபாடல்,

"மூவிரு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை.. செவ்வேள்"

என்று பாடுகிறது

அதாவது,உதிக்கின்ற செங்கதிர் நிறம் கொண்ட செவ்வேள்!+
Jan 31, 2020 8 tweets 1 min read
திருஞானசம்பந்தர் பெருமான் திருக்கல்லூர்ப்பெருமணம் திருக்கோவிலில், தம் திருமண நாளன்று, இறைவனின் ஜோதியில் கலந்தார்.

இதைக் கொச்சைப்படுத்தும் விதமாக "அவரைத் தமிழ் எதிரிகள் எரித்துக் கொன்றனர்" என்று வாதிடுவது எவ்வளவு மூடத்தனம் என்று பார்ப்போம்.+ பாண்டிய அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இருவரின் வேண்டுகோளை ஏற்றுப் பாண்டிய மண்ணில் சைவம் தழைக்க மதுரை வந்து சேர்ந்தார் சம்பந்தர்.

மதுரை சைவ மடத்தில், தம் பரிவாரத்துடன் தங்கியிருந்தார்.

அவரை அழிக்கச் சமணர்கள் மடத்திற்குத் தீ வைத்தனர்.+
Jan 31, 2020 15 tweets 2 min read
"தேவார மூவர் முதலிகள் , பிராமணர்களின் வேள்வி முறைகளை ஏற்கவில்லை" என்ற கூற்று மிக மிகப் பொய்யானது.

1) வேதத்தையும் வேள்விகளையும் சிறப்பித்தனர்
2) வேத நிந்தனை செய்தோரைக் கண்டித்தனர்.

சில எடுத்துக்காட்டுகள்.+ திருஞானசம்பந்தர் பெருமான், தான் கௌடின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் (கவுணியன்) என்று பலப்பல தேவாரப் பாடல்களில் உரைக்கிறார்.

வேள்விகள் பற்றிய சம்பந்தர் பிரான் பாடற்குறிப்புகளில் சிலக் கற்கண்டுச் சிதறல்கள்:

"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை"+
Jan 29, 2020 13 tweets 2 min read
திருநாவுக்கரசர் தேவாரத்தில் "தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்" என்று வருகிறதே; அப்படியானால் அவர் சமஸ்கிருதத்தை மறுக்கிறார் என்றா பொருள்?

அது போல், நான்மறை என்று தேவாரம் குறிப்பிடுவது அறம் பொருள் இன்பம் வீடுபேறா?

தமிழகச் சிவனும் "வடகத்திய சிவனும்" வெவ்வேறானவர்களா?+ முதலில் "தமிழோடு இசைபபாடல்" பற்றி.

இது எப்போது பாடப்பட்டது?

அப்பர் பிரான் சமண சமயம் தழுவி யிருந்தார். கடும் சூலை நோயால் (வயிறு வலி) அவதிப்பட்டார். சிவபெருமானை நோக்கிக் "கூற்றாயினவாறு" என்ற பதிகம் பாடினார்.

இதுவே, காலவரிசைப்படி முதன்முதல் தேவாரப் பாடல் ஆகும்.+
Jan 27, 2020 32 tweets 4 min read
#ஆகமம்
#சைவம்

சில காலமாகச் சிலர் இவ்வாறெல்லாம் சொல்லி வருகிறார்கள்:

"சைவம் வேறு, சனாதன தர்மம் வேறு.

வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை.

குடமுழுக்கு தமிழில் தான் நடத்தப்பட வேண்டும்.

சமஸ்கிருதம் எதற்கு?"

இவற்றில் உண்மையோ சைவம் சம்பந்தப் பட்ட விஷய அறிவோ இல்லை.+ முதலில் - சைவம், வை(ஷ்)ணவம், சாக்தம், கௌமாரம் முதலிய பெயர்கள் சமஸ்கிருதம் தான்.

சரி, தமிழ்ச் சைவ முதல்வர்கள் யார்? சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் பாடல்களில் மேலோட்டமான பரிச்சயம் இருந்தாலும் மேற்கண்ட கூற்றுகள் தவிடுபொடி ஆகிவிடும்.+
Jan 24, 2020 6 tweets 1 min read
"விடுதலை" 10.6.71ல் ஈவெரா:

"வள்ளுவனைச் சொந்த புத்தியுள்ளவன் என்பார்கள். அவனும் ஒரு சில இடங்களில் பார்ப்பன புத்தி கொண்டவனேயாவான். அவன் பெண்களை அடிமையாகவே இருக்க வேண்டுமென்றுதான் சொல்கின்றான். "

ஈவெரா திருக்குறள் மாநாடு நடத்தினான் என்று முட்டுக் கொடுப்பவர்களே! உங்கள் பதில் என்ன?+ திருக்குறள் மாநாடு நடத்திய பிறகல்லவா இப்படிப் பேசியிருக்கிறான் (1971ல்)!

வள்ளுவர் "பார்ப்பன புத்தி கொண்டவனேயாவான்" எனில் திருக்குறள் எப்படி உலகப் பொதுமறை ஆகும்?

ஈவெராவை ஆதரிப்பவர்கள் பதில் சொல்லவும்.+
Jan 14, 2020 11 tweets 2 min read
துக்ளக் தீவிர வாசகர்களில் சிலர்:

முகம்மது ரியாஸ், திருச்சி
கமால் பாட்சா, திருச்சி
சர்புதீன், பரமக்குடி
அ.ராஜா ரஹ்மான், கம்பம்
எம்.கஃபார்கான், பேராவூரணி
மு.க.இப்ராஹிம், வேம்பார்
தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10

வாசகர் கடிதம், கேள்வி பதில் பகுதிகளில் இவர்களைக் காணலாம். 1/11 துக்ளக்கில் "இனிய மார்க்கம் இஸ்லாம்" தொடர் எழுதியவர், மற்றும் அவ்வப்போது இஸ்லாம் கண்ணோட்டத்தில் முத்தலாக் தடைச் சட்டம், CAA பற்றி எல்லாம் கட்டுரை வரைபவர் இஸ்லாம் அறிஞர் டாக்டர் ஹபீப் முகம்மது.

முரசொலி, இது போல் வெவ்வேறு கோணங்களில் கருத்துகள் தாங்கிவந்ததாக வரலாறே கிடையாது. 2/11
Dec 27, 2019 4 tweets 1 min read
1857ல் வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த இந்தியர்களின் கிளர்ச்சியை வெறும் "சிப்பாய்க் கலகம்" என்ற வட்டத்துக்குள் அடைக்க முனைந்தது பிரிட்டிஷ் அரசு. 1/4 சாவர்க்கர் கடுமையான முயற்சிகள் எடுத்து, லண்டனில் பிரிட்டிஷ் நூலகங்களில் இருந்து குறிப்புகள் வைத்து "The Indian War of Independence 1857" என்ற நூலை எழுதினார்.

பிரிட்டிஷ் அரசு இந்த நூல் வெளிவராமல் தடுக்கப் பலவிதங்களிலும் முயன்றது.

சகப் புரட்சியாளர்கள் முயற்சியால் வெளிவந்தது.2/4
Jul 1, 2019 19 tweets 2 min read
ஆர்எஸ்எஸ் இயக்கம் "பிரிட்டிஷ் கையாள், தேசியக் கொடியை ஏற்காத இயக்கம்; அதில் யாராவது சிறை சென்றனரா?"

வரலாறு என்ன சொல்கிறது? ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த தீவிர சுதந்திரப் போராட்ட வீரர். நாக்பூர் காங்கிரஸ் செயலாளராகத் துடிப்புடன் செயல்பட்டவர்.

1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர். அதுவரை காங்கிரஸ் "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் சுயாட்சி"