GJ Profile picture
GJ
ஒடுக்கப்படுவது எந்த இனமாயினும், அந்த இனத்தின் குரலாய் வாழ்வதே சிறப்பு
Mar 4, 2022 9 tweets 3 min read
வரலாறு அறிவோம் - 4
இன்றைய உக்ரைன் தலைநகரமான கீவ் நகரில் தான் 2ம் உலகப்போரில் அன்றைய ஹிட்லரின் நாஜி படையுடன் சோவியத் படைகள் எதிர்த்து போரிட்டன.. கடுமையான 2 ஆண்டுகள் தொடர் போரிலும் ஹிட்லரால் முதல் முறையாக வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. அதே இரண்டு தேசங்களும் கச்சா எண்ணெயை டாலரில் பெற வேண்டும் என்கிற புள்ளியில் இணைந்துவிட்டன. Russia லிருந்து European நாட்டிற்க்கு natural gas pipeline Ukraine வழியாகவும், சிரியா வழியாகவும் எடுத்துச்செல்ல ஏராளமான குழாய்கள் பூமிக்கடியில் போடப்படப்பட்டன. இதிலிருந்து நீங்க புரிந்து கொள்ள வேண்டியது உக்ரைன் & சிரியாவில் எதற்காக
Mar 1, 2022 11 tweets 3 min read
பாகம்-3
அமெரிக்கா, ஈராக்&ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து போர் புரியும் போதே kennen எதிர்த்தார்.இதனால் அமெரிக்கா பலமிழந்த நாடாகத்தான் மாறும் என்றும் இப்போருக்கு பின்னால் அமெரிக்காவிற்கு சமமான எதிரிகள் உருவாகும் வாய்ப்பும் இருக்கிறது என்று எச்சரித்தார்.ஆனால் PNAC போரை எல்லாம் நிறுத்த முடியாது. அகண்ட மத்திய கிழக்கை அமெரிக்கா வெகு சீக்கிரத்தில் உருவாக்கி தனது கட்டுக்குள் வைக்கவேண்டிய நேரமிது என்றது. அங்கெல்லாம் தான் உலகின் மிக அதிகமான எண்ணை வளங்கள் புதைந்துகிடக்கின்றன பெட்ரோல் கிடைக்கிற எல்லா நாடுகளையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டாலே அமெரிக்கா
Feb 28, 2022 7 tweets 2 min read
USSR vs USA பாகம் 2

இரண்டாம் உலகப் போருக்குப்பின் Potsdam Agreement படி ஜெர்மனி மேற்கு & கிழக்கு என பிளவுப்பட்டு கிடந்த காலம். USSR கூட்டமைப்பு நாட்டின் அதிபராக Mikhail Gorbachev இருந்த போது அது தான் ரஷ்யாவில் கம்யூனிச கட்சிக்கு இறுதி காலம் என்று கூட சொல்லலாம். அமெரிக்காவும் Image நேட்டோவும், ஐ.நா.சபையும் அவரிடம் கோரிக்கை வைக்கிறது கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்போம். அதன் பின் மத்திய ஐரோப்பாவைத் தாண்டி நேட்டோ படைகள் விரிவாக்கப்படமாட்டாது என்று அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் அந்த வாக்குறுதி எல்லாம் பின்னர் காற்றில் பறக்கவிடப்பட்டன
Feb 28, 2022 13 tweets 3 min read
வரலாறு அறிவோம்

இன்றைக்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் சண்டையை வைத்துக்கொண்டு பேசாமல் சற்று நாம் இதற்கு முன்னாடி என்னவெல்லாம் நடந்திருக்கு என்பதை எல்லாம் விரிவாக தெரிந்துகொண்டு பேசினால் தான் நம்மால் பிரச்சனையை சரியாக புரிந்துக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். அதே போல் உலகில் போரே இருக்கக்கூடாது என்பது தான் நம் அனைவரின் விருப்பம். ஆனால், தொடர்ச்சியாக நடத்தப்படும் போர்களை நாம் தடுக்கவேண்டுமென்றால், அவை துவக்கப்பட்ட வரலாற்றினை நாம் அவசியம் தெரிந்துகொண்டே ஆக வேண்டும்.

இதற்கு முன்னாடி இந்த உலகம் இரண்டு உலகப்போர்களை சந்தித்து இருக்கிறது. அதன் பின்
Sep 19, 2021 12 tweets 4 min read
நீண்ட நாட்களாகவே இதை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

முதல் விஷயம் இருபாலருக்கும் பொதுவானது.

உங்களுடைய 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண்கள், மாறுதல் சான்றிதழில் உங்களுடைய பெயர் எப்படிக் குறிப்பிடப் பட்டிருக்கிறதோ அதனை அடிப்படையாக வைத்து உங்களது பெயரையும் இனிஷியலையும் உங்களுடைய பிற சான்றுகளிலும் சரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.அதாவது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு,பான் கார்டு, பாஸ்போர்ட்,மொபைல்,லேண்ட் லைன் ரிஜிஸ்ட்ரேஷன்,கேஸ் கனெக்‌ஷன்,உங்களது அலுவலக அடையாள அட்டை, முதியோர் உதவித்தொகை அட்டை,இன்ஷ்யூரன்ஸ், ஸ்காலர்ஷிப்
Sep 5, 2021 31 tweets 5 min read
#TeachersDaySpecial
நல்லாசிரியர் Y.சவரிராஜ்

சுருட்டை முடியும் தடிமனான கண்ணாடியும், முழுக்கை சட்டையும் பேரகான் செருப்பும் கையில் ஒயர் கூடையில் மதிய உணவுமாக, சாலையை மேலோட்டமாக பார்த்து கொண்டு நிற்கிறார் சவரிராஜ். கிருஸ்த்துவத்தில் மனம் அடங்கி போன மனிதர்.

அரசு உயர்நிலை பள்ளியில் வேப்ப மரத்தடியில் 5 வரிசைகளாக மாணவர்கள் அமர்ந்து சிலேட்டில் எழுதிக்கொண்டு இருக்கும் சத்தம்.

சிலேட்டில் எழுதிக்கொண்டு இருப்பது 4ம் வகுப்பு 5ம் வகுப்பு மாணவர்கள் இல்லை. 10ம் வகுப்பு ஆங்கில கட்டுரை கராத்தேயின் வரிகள் சிலேட்டில் ஓடிக் கொண்டிருந்தன. அதுவரை அமைதியாக இருந்த தார்சாலை
Aug 7, 2021 6 tweets 4 min read
கொரோனோ ஊரடங்கில் நடந்த பல வினோதங்களில் ஒன்று, சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை நோக்கிப் படையெடுத்தது. இது இந்தியா மட்டுமில்லைங்க உலகம் முழுக்க இதான் நடந்திருக்கு.

அதுவும் குறிப்பாக இளைஞர்களும் இளம் முதலீட்டாளர்களும் பணம் சம்பாதிக்கும் பேராசையி்ல் காசை கொட்டியிருக்கின்றனர். Image முன் அனுபவம் இல்லாமல் நுழைந்த இவர்கள் பல தவறுகளை செய்ததன் மூலம் தங்களுடைய கை சுட்டுக்கொண்டது தான் மிச்சம்.

இப்படி எதுவும் தெரியாமல் வர்த்தகத்தில் பணத்தை போட்டு, இழந்துவிட்டு பின்னர் பங்குச் சந்தையே மோசம்; அது ஒரு சூதாட்டம் என்றெல்லாம் புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லைங்க..
May 14, 2021 19 tweets 6 min read
Term insurance part - 02
நேற்று பல பேர் தனிப்பட்ட முறையில் நிறைய கேள்விகளை கேட்டீர்கள் என்னால் எல்லோருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும் இந்த பதிவில் எனக்கு தெரிந்த வரை எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். நான் சொன்னதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எதுவும் கிடையாது. நீங்கள் உங்களுடைய financial advisor தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்த பின்பு நீங்கள் முதலீடு செய்யலாம்.

நிறைய பேர் நேற்று கேட்ட போது 5 மடங்கு தேவை உள்ள பாலிசி எடுத்தால் போதுமா கேட்டார்கள்

இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும் பொதுவா ஆண்டு வருமானத்தின் 20 மடங்கு
May 13, 2021 12 tweets 3 min read
நான் போன வருஷம் கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து சொல்லி வருவது நீங்க முதலீடு செய்ய விரும்பினால் முதலில் ஒரு நல்ல term insurance plan எடுத்து வைங்க.. அதன் பின்னர் முதலீட்டு திட்டங்களை பற்றி பார்ப்போம் என்பது தான். உடனே எல்லோரும் நான் lic ல insurance போட்டு வைச்சு இருக்கேன் என்று சொல்லுகிறார்கள். Term insurance என்பது வேறு என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். Term plan பொறுத்த வரை தாங்கள் செலுத்தும் பிரீமியம் இன்சூரன்ஸ்க்கு மட்டுமே செல்வதால் இந்த பிளானில் எந்தவிதமான முதிர்வு தொகையும் இருக்காது.

இந்த மாதிரி கொரோனா பெரும் நோய் தொற்று காலத்தில் இன்சூரன்ஸ்
Apr 18, 2021 14 tweets 5 min read
எல்லோரும் space ல share market பற்றி பேசுறாங்க நாம bitcoin பற்றி பேசுவோம்..

இரு மாதத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது நினைவிருக்கலாம். அது தான் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயம் இந்திய மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உத்தரவு என்று..உண்மையை சொன்ன யாராலும் அதை தடை எல்லாம் செய்ய முடியாது..மத்திய அரசும் இப்படி பம்மாத்து காட்டிக்கிட்டு இருக்கலாம்.

அந்த கிரிப்டோகரன்சி பற்றிய நமது புரிதல் அல்லது நாம் அறியவேண்டிய சில உண்மைகளை பற்றி சின்ன example உடன் பார்ப்போம்.

கிரிப்டோ சுர்ரெனசி என்றொரு (Innovative)
Sep 5, 2020 10 tweets 4 min read
Part-2
Compounds-போன முறை நாம பார்த்த போது ஒவ்வொரு முறையும் பணம் இரு மடங்காக உயர்ந்து கொண்டே போச்சு.. ஆனா இது ரியாலிட்டி ல சாத்தியமா?என்றால் மிகப்பெரிய கேள்வி குறி தான்

ஆனா சின்ன வித்தியாசம் கூட (1%)நீண்ட கால திட்டத்திற்கு நீங்க பார்க்கும் போது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும் நீங்க mutual fund முதலீடு செய்வதற்கு முன்பு யாராவது expense ratio என்ன எவ்வளவு என்று பார்த்து இருக்கிறீங்களா?
AMFI (Association of mutual funds in India) இந்த நிறுவனம் அந்த expense ratio 2.5% மேல் இருக்க கூடாது என்று சொல்லி உள்ளனர்.

இதனால் என்ன இது எப்படி பாதிப்பை தரும் அதானே
Aug 30, 2020 6 tweets 4 min read
சின்ன #thread Warren buffet பிறந்த நாளை முன்னிட்டு அவர் சொல்லும் compounds.. எப்படி compounds வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.

நீங்கள் ஒரு வேலைக்கு interview போறிங்க என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் ஒரு 3 வருட ஒப்பந்தத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள், வெளிப்படையாக இப்போ நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்குறிங்க..

அப்போ Salary discussion வருது, HR உங்களுக்கு இரண்டு choice கொடுக்கிறாங்க..ஆனால் அதில் என்ன விஷயம் என்றால்

அந்த இரண்டு விருப்பங்களில் ஒன்றை தான் நீங்கள் ஏற்க முடியும்: -

1) மாத சம்பளமாக உங்களுக்கு ஒரு லட்சம் தருவதாக சொல்லுகிறார்கள்.
Aug 2, 2020 24 tweets 5 min read
என்ஜினீயரிங் மேல் உள்ள அபிப்பிராயத்தை மாற்றவே இந்த பதிவு. 2010க்கு பின்பு Mechanical, Electrical படித்தவர்களுக்கு சரியான பாதை அமையவில்லை. அண்ணா பல்கலைக்கழகம், PSG போன்ற கல்லூரிகளில் படித்தவர்கள் கூட பாதிப்பேர் படித்த பின்பு மென்பொருள் துறையை தான் தேர்வு செய்கிறார்கள்.

ஆனால் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று என்னது என்ஜினீயரிங் ஆ? அதெல்லாம் ஸ்கோப் இல்லாத படிப்பு இப்போ. இப்போ லாம் அக்ரி க்கு தான் ஸ்கோப், CA க்கு தான் scope என்று எங்க அண்ணன் சொன்னாரு னு நீங்க கோவப்படுறது தெரியுது.

ஒரு காலத்துல ஊருக்கு ஒரு என்ஜினீயர் இருக்கிறதே பெரிய விஷயம் இப்போ வீட்டுக்கு
Jul 26, 2020 26 tweets 7 min read
அணு உலை இறுதி பாகம் - 10
ரியாக்டர் ஹாலிலிருந்து பெரும் தீயும் புகையும் மேல்நோக்கியவாறு சென்று கொண்டிருந்ததால அலெக்ஸாண்டருக்கு இன்னமும் ரியாக்டரின் உண்மை நிலை தெரியவில்லை.
அவர் சில உதவியாளர்களை அழைத்து ரியாக்டர் ஹாலுக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்தவர்களை தேடி மீட்க அனுப்பினார். உலையின் கதிரியக்கத்தை கண்காணிக்கும் பணியாளரை அழைத்து வரச்சொன்னார். அவரோ இடிபாடுகளில் சிக்கி மயக்கமுற்று கிடந்தார். அவரது முகத்தில் உள்ள தோல் முழுவதும் சிதைந்து எலும்புகள் தெரிந்தன. அவரை தூக்கும்போது உடலில் உள்ள தோல் கையோடு உரிந்து வந்தது. இருவர் சேர்ந்து அந்த மயங்கிய பணியாளரை
Jul 18, 2020 19 tweets 4 min read
அணு உலை பாகம் - 09
ரியாக்டர் எண் 4ன் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்களுக்கு என்ன நடக்கிறது என கணிக்க அவகாசம் ஏதும் கிடைக்கவில்லை. கண்ட்ரோல் ரோடுகள் வினாடிக்கு 15 இன்ச் வீதம் மொத்தமுள்ள 7 மீட்டர் ஆழம் இறங்க 18sec ஆகும். போர்மேன் அலெக்ஸாண்டர் அகிமோவ் கண்ட்ரோல் ராடுகள் இறங்கும் வேகம் போதவில்லை என கருதி, அவற்றை இயக்கும் கிளட்ச்சுக்கான மின்சாரத்தை துண்டித்தார். இப்படி செய்தால் ராடுகள் வடிவமைக்கப்பட்ட வேகத்தில் அல்லாமல் தனது சுய எடையால் வெகு வேகமாக ஒரே நொடியில் கீழிறங்கும். ஆனால் ராடுகள் அசையவில்லை. மாறாக ரியாக்டரிலிருந்து வினோதமான
உருட்டும் ஒலிகள் வந்தன.
Jul 15, 2020 17 tweets 4 min read
நிறைய பேர் stock suggestion சொல்லுங்கன்னு சொல்லி கேட்கிறீங்க நாம அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல என்கிட்ட மட்டுமில்ல யார் இடத்திலும் டிப்ஸ் எல்லாம் கேட்காதீங்க அவுங்களுக்கு எங்க enter ஆகனும் எங்க exit ஆகனும் தெளிவா இருப்பாங்க..entry, exit இரண்டும் ரொம்ப முக்கியம் அதை பார்ப்போம் அப்புறம் ஒருத்தர் நான் வெளிநாட்டுல வேலை பார்க்கிறேன், எனக்கு ஒரு 20k முதல் 30k வரை வந்தா கூட போதும் வேலை விட்டு வந்திடலாம்ன்னு இருக்கிறேன் சொல்லுறார். தயவுசெய்து அந்த மாதிரி தப்பு எல்லாம் செஞ்சுடாதிங்க இது இரத்த பூமி, பல பேரை காவு வாங்கி இருக்கு. எனக்கு நல்லா தெரியும் ஒரு பையன்
Jul 15, 2020 6 tweets 2 min read
1961-ல் தேவகோட்டையில் பெரியார் பேசினார்..கிட்டதட்ட அது அவரது மரண வாக்குமூலம்போலத்தான்..அதில் தோழர்களே..!எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள்.. உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள்,மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள்,
Jul 12, 2020 25 tweets 5 min read
அணு உலை பாகம் - 08
1986, ஏப்ரல் 25ம் தேதி செர்நோபில் அணு உலையில் திட்டமிடப்பட்ட ஸ்டீம்-டர்பைன் டெஸ்ட் என்றழைக்கப்பட்ட சோதனைக்கான திட்டம் இதுதான்:
(1) அணுஉலையை சோதனை செய்வதற்கு அதன் வடிவமைப்பாளர்களால் சிபாரிசு செய்யப்பட்ட 700லிருந்து 1000க்குள்ளான மெகாவாட் திறனில் இயக்குவது. 2)நீராவி கொதிகலனில் அதிக நீராவியை முடுக்கி டர்பைனை அதன் முழு வேகத்தில் இயக்குவது.
3)டர்பைன் முழுவேகத்தை அடைந்த உடன் கொதிகலனிலிருந்து டர்பைனுக்கு செல்லும் நீராவியை நிறுத்துவது.
4)டர்பைன்,எஞ்சியிருக்கும் நீராவியாலும்,தனது சுய விசையாலும் எவ்வளவு நேரம் திறனுடன் சுழன்று குளிர்விக்கும்
Jul 10, 2020 16 tweets 4 min read
Stock market பத்தி நிறைய பேர் கேட்டிங்க எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.
வெறும் dividend மட்டும் பார்த்திட்டு குதிப்பது பணம் விரயம் என்று தான் சொல்லுவேன் அதுவும் இந்த வருடம் முதல் டிவிடெண்ட் tax செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.அது ஒரு ஃபேக்டர் இருக்கலாம்.மற்றப்படி ஒரு நிறுவனத்தை பத்தி முழுமையாக படிங்க அவுங்க management எப்படி அலசுங்க. Management கிட்ட clear vision இருக்கணும்.அடுத்த பத்து வருடம் என்ன பண்ண போறோம் என்ற தெளிவு நிறுவனத்திடம் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை பத்தியோ, Management பற்றியோ தெரியாமல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆழம்
Jul 8, 2020 12 tweets 2 min read
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானம்..2002 ம் ஆண்டு.. வெற்றி இலக்கான 326 ரன்னை எடுத்து இந்தியா தொடரை கைப்பற்றியது.. ஆனால் அந்த தொடரை விட எல்லோருக்கும் நினைவில் நிற்பது அப்போதைய கேப்டன் கங்குலி தன் சட்டையை கழற்றி ஆக்ரோசமாக சுழற்றியது தான்.. லார்ட்ஸ் மைதானத்தில் இப்படி செய்யலாமா ?கங்குலி Image இதை சுய நினைவோடு தான் செய்தாரா?என்று இங்கிலாந்து வர்ணனையாளர் கேட்டதற்கு உங்கள் பிளின்டாப் இதையே தான் வான்கடே மைதானத்தில் செய்தார்..அப்போது ஏன் கேட்கவில்லை?என்றார்.அதற்கு அவர் லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா என்றதும் வான்கடே எங்களுக்கு மெக்கா என்று அவரது வாயடைத்தார்.அதுதான் கங்குலி
Jul 7, 2020 17 tweets 3 min read
எனக்கு தோனியை பெரிதாக பிடிக்காது நான் யுவராஜை நேசிப்பவன்

ஆனா இந்தியாவில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து இன்னும் சொல்ல போனால் பின் தங்கிய மாநிலத்தில் இருந்து உச்சத்தை தொட்ட மனிதன் எனலாம். ஜார்கண்ட், பீகார் மாநிலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர்கள் வரலாற்றில் உச்சத் தொட்ட மனிதன் யாருமே இல்லை என சொல்லலாம்

Born to lead னு சொல்லுவாங்கல்ல அந்த வார்த்தை எங்க இருந்து உதிச்சதுனு தெரியல ஆனா அந்த வார்த்தை தோனிக்காவே கண்டுபிடிக்கப்பட்டதுனு சொல்லலாம்.

2005ம் ஆண்டு தோனி பாக்கிஸ்தான்க்கு எதிரான போட்டியில் அடித்த 148 ரன்கள்,