#Thread#Excerpts #Anitha 's father writes to AK Rajan committee
நானும் என் குடும்பமும் எப்படியும் என் மகள் அனிதா மருத்துவராகி விடுவார் என்று நினைத்த வேளையில்தான், இந்திய ஒன்றிய அரசு "நீட்" தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்தது. மருத்துவராகி விடலாம் என்று பெரும் நம்பிக்கையுடன்
காத்திருந்தஎன் மகளின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தெறிந்ததுஇந்திய ஒன்றிய அரசு. தமிழ் நாட்டுக்கு ஓராண்டு விலக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதால், உச்சநீதி மன்றம் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று (22/08/2017) அன்று தீர்ப்பளித்தது
Apr 11, 2021 • 8 tweets • 2 min read
2,3 வருடங்கள் இருக்கலாம். ஒரு மதிய பொழுதில் ஒன்றரை மணி நேரம் இரு சக்கர வண்டியில் பயணம் செய்து மதுரை பேரையூர் அருகில் இருக்கும் அந்த சிறு கிராமத்தை முரளியும் நானும் சென்றடைந்தோம். தோழர் ச தமிழ்செல்வன் எழுதிய அந்த ஊரில் இருந்த சீலைக்காரி கோப்பம்மாள் கோவிலைதான் தேடிப் போனோம்.
சிறு வீடு அது. உள்ளே ஒரு பெட்டியின் மீது சேலையும் வளையல்களும் போர்த்தப்பட்டிருந்தன. கிணற்றில் தவறி விழுந்த பெண் என்று எங்களிடம் அந்த மக்கள் சொன்னார்கள்.அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு தோழரிடம் சொன்ன தகவல் வேறு.