a simple soul to see things rational | Belongs to Dravidian Stock
Nov 10, 2021 • 12 tweets • 2 min read
*வீடியோ விளையாட்டு - சிக்கிய அண்ணாமலை, கொண்டாடித் தீர்த்த ராகவன்*
சென்னையை புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் பெரு மழையில் ஆளும் அரசின் சார்பாக முதலமைச்சர் சென்னையின் மூலை முடுக்கெங்கும் மூன்று நாட்களாக சுற்றிவர, (1/n)
பொதுமக்களின் கவனம் முழுக்க மு.க.ஸ்டாலினை சுற்றியே இருப்பதை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் டெல்லிக்கு குறிப்பு அனுப்பி வைக்க, டெல்லி மேலிடம் அதிமுக மற்றும் பாஜக தலைமைகளை அழைத்து செயலற்று நிற்பதற்காக கடிந்துக் கொண்டிருக்கிறது. (2/n)
Apr 3, 2021 • 6 tweets • 2 min read
இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ன தெரியுமா? என்று கேட்டபடியே வந்து அமர்ந்தார் கழுகார். தெரியவில்லையே என தோல் சீவிய வெள்ளரி சாலட்டை நீட்டினோம். அதிமுக சார்பில் வாக்குக்கு 2000 ரூபாய் வெள்ளிக்கிழமை வந்துவிடும் என ஏற்கனவே கூறியிருந்தார்கள். சென்ற தேர்தலின் அனுபவங்கள் அடிப்படையில்(1/6)
அதிமுக அனுதாபிகளும் இதை பெரிதும் நம்பியிருந்தனர். சிலர் அட்வான்ஸ் புக்கிங்காக, எங்கள் வீட்டில் நாலு ஓட்டு. 8000 வரும். பணம் வந்த உடன் கடனை அடைத்து விடுகிறேன் என இதை நம்பி கடன் வேறு வாங்கியிருந்தனராம்.
பல ஊர்களில் நேற்று இரவு கரண்ட் கட் ஆனதும் மிகவும் ஆசையுடன் வாசலில் (2/6)
Apr 2, 2021 • 7 tweets • 2 min read
ஸ்டாலின் வீட்டில் ரெய்டு, சீறிய எடப்பாடி!
தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் இன்று காலை ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பாஜக நம்பிய (1/7)
நிலையில் திமுக நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. திருச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ரெய்டு நடத்தும்படி அழைப்பு விடுக்க, திமுக வேட்பாளர்கள் அனைவரும் பிரதமர் தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், அது தாங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் (2/7)
Apr 2, 2021 • 4 tweets • 1 min read
அமித்ஷா வருகிறார் என்று மொத்த நெல்லையையும் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு வியாபாரம் நடந்தால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்று பிழைப்பு நடத்துகிற பெட்டிக்கடைகள், கரும்புச்சாறு விற்கும் கடைகள் முதற்கொண்டு சாலையோரக் கடைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. வண்ணாரப்பேட்டையில்
உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைக் கடந்த போது தான், அமித்ஷா அங்கு இறங்குவதற்கு ஹெலிபேட் அமைத்திருப்பது தெரிந்தது. அந்தக் கல்லூரியில் வேலை பார்ப்பவர்களையே சோதனை என்கிற பெயரில் உள்ளே அனுமதிப்பதற்குப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒருவகையில் கடைகளை அடைப்பது நல்லது தான்.
Apr 1, 2021 • 10 tweets • 2 min read
தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து விட்டு தன் ஹோட்டல் அறைக்கு வந்த அமித்ஷா பாஜகவின் நிர்வாகிகளோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.களநிலவரம் பற்றி மத்திய உள்துறை ரிப்போர்ட்டை எடுத்து வீசியுள்ளார் அமித்ஷா. என்ன தான் நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தன் நிர்வாகிகளை பார்த்து கோவப்பட்டாராம்.
இதுவரை அமித்ஷா இவ்வளவு கோவப்பட்டு நாங்கள் யாரும் பார்த்ததில்லை என்றார் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி.
அமித்ஷா வின் கோவத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பாஜக உட்கட்சி பூசலும் அவர்கள் தமிழகத்திற்கு வகுத்த திட்டம் ஒன்று கூட பலனளிக்கவில்லை
Apr 1, 2021 • 14 tweets • 2 min read
— Read Full Thread —அரவக்குறிச்சி பயணம் முடித்து உற்சாகமாக வந்திறங்கிய கழுகாரிடம் தகிக்கும் வெயிலுக்கு இதமாக இளநீர் பாயாசத்தை நீட்டினோம்.
அதை வாங்கி மேசையின் ஓரத்தில் வைத்த கழுகார், அரவக்குறிச்சியா? கோவையா? என்ற கேள்வியை நம்மிடம் கேட்க, அரவக்குறிச்சி என்றோம்.
அண்ணாமலையின்(1/14)
அத்தனை வெறுப்பை
தூண்டும் பேச்சுகளையும் அமைதியாகவே எதிர்க்கொண்ட இஸ்லாமியர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். தன் முயற்சிகள் தோல்வி அடைந்ததை உணர்ந்த அண்ணாமலையும் சோர்ந்துவிட்டார்.
தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் தனித்தனியாகவும், கட்சிப் பிரமுகர்களை முன்னிறுத்தியும் பணம் கறக்க(2/4)
Apr 1, 2021 • 6 tweets • 1 min read
பத்திரிக்கையாளர் தெ.சு. கவுதமன்
இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்... கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றுவார்கள் எனத் தோன்றுகிறது. அதேபோல இன்று யோகி ஆதித்யநாத் கோவைக்கு (1/6)
வந்ததையொட்டி, பைக் பேரணி என்ற பெயரில் ரவுடிகளைக் குவித்து, மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.
வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து (2/6)
Mar 31, 2021 • 7 tweets • 2 min read
—-கோவையிலிருந்து வந்த செய்தி —-
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆலாந்துரை பகுதியில் நடந்த கூட்டத்தில் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்திருக்கின்றனர் வெள்ளாள கவுண்டர்கள் சங்க நிர்வாகிகள்.
வேலுமணியால் நாம் பயன் அடைந்திருக்கிறோம், மறுக்கவில்லை (1/7)
அவர் அமைச்சராக இருந்த காரணத்தால் மட்டுமே தான் நமக்கு ஏதாவது செய்தார். நமக்கு மட்டும் செய்யவில்லை அவருக்கும் அவர் குடும்பத்திற்க்கும் சேர்த்து தான் செய்திருக்கிறார்.
வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை, எதிர்கட்சி MLA வால் என்ன பெரிய நன்மை செய்துவிட முடியும் ? (2/7)
Mar 30, 2021 • 5 tweets • 2 min read
காலைல டீ கடைல ஒருத்தர் சொல்லிட்டு இருந்தார்:
ஒன்றிணைவோம் வா திட்டத்தினால் மக்களிடம் திமுக வரலாறு காணாத வகையில் செல்வாக்கு பெற்றுவிட்டது என உளவுத்துறை எப்போவோ EPS ட்ட சொல்லிருச்சாம். அதனால ஜெயலலிதா மாதிரி முதல்வரா இருந்து தோற்க கூடாது (1/5) #GoBackModi
அப்புறம் கட்சியை கைபத்த முடியாதுன்னு சுனில் டீம்ட்ட சொல்லி சர்வே எடுத்தா எடப்பாடி தொகுதில வன்னியர்கள் அதிகமாம் அதுனால அவங்கள கவர் பண்ணா போதும்ன்னு சொல்ல தைலாபுரம் தோட்டகாரர் உடன் கூட்டு சேர்ந்து போட்ட பிளான் தான் இந்த வன்னியர் தனி இடஒதுக்கீடு டிராமா.
(2/5) #GoBackModi
Mar 30, 2021 • 9 tweets • 3 min read
திமுகவின் ஆ.ராசா பேசாத ஒன்றை பிடித்துக் கொண்டு, பாஜக ஐடி விங் லிரித்த வலையில் சிக்கி தன் தாயை முன் வைத்து எடப்பாடி பேசியதை பெரும்பாலான அதிமுக ஆதரவு கவுண்டர்களும், கொங்கு மண்டல அமைச்சர்களும் ரசிக்கவில்லை.
ஒரு முதலமைச்சரின் தரத்தை விட்டு இறங்கி தேவையில்லாமல் (1/9) #GoBackModi
சொந்த தாயை வைத்து அனுதாபம் தேடும் வகையில் பேசியதன் மூலம் தங்கள் சமூகத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக பார்க்கிறார்கள் கொங்கு பகுதி மக்கள்.ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவின் பெயர் கெட்டுப் போயிருப்பதும், கொங்கு சமூக பெண்களே பாதிக்கப்பட்டதையும் (2/9)#GoBackModi
Mar 28, 2021 • 12 tweets • 2 min read
கோயமுத்தூர் காரய்ங்க சொல்லுங்கபா இது உண்மையா?
என்ன தான் நடக்கிறது கோவை அதிமுக வில் ?
SP வேலுமணிக்கு எதிராக கிளம்பும் கட்சி நிர்வாகிகள்!
சிட்டிங் எம்எல்ஏ க்கள் எல்லாம் கடந்த ஒரு வருடாமாக எங்கள் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று வேலுமணியிடம் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள்(1/12)
அவரும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார்.
பிரச்சினை ஆரம்பித்தது கோவை தெற்கு தொகுதியில் இருந்து தான். தொகுதியை பாஜக குறி வைத்து வானதி சீனிவாசன் அவர்களை களத்தில் இறக்கி விட்டது கடந்த நவம்பரில், அப்போது இருந்தே அம்மன் அர்ஜுனன் வேலுமணியிடம் (2/12)
Mar 24, 2021 • 5 tweets • 1 min read
21 தொகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என சவால் விட்ட வேலுமணி 20ஐ கை கழுவி ஒரு தொகுதிக்குள் சுருங்கிவிட்டார்.
வாடி பார்த்தசாரதி என போடி தொகுதி கவுண்டமணியைப் போல கவுண்டர் கொடுப்பதால் பன்னீருக்கு கண்ணீர்
முதலில் ஜெயித்துவிடுவோம் என தெம்பாக இருந்த ஹெல்த் (1/5)
விஜயபாஸ்கரோ சுகர் வந்துருச்சு ஓட்டு போடுங்க என்று கதறும் நிலை.
போக்குவரத்து விஜயபாஸ்கருக்கு போக்கு மட்டும்தான் இருக்கு வரத்து இல்லை.
ஆர்பி உதயகுமார் அகமுடையார் ஓட்டு பிரிவதால் அலறிப் போய் உள்ளாராம்.
(2/5)
Mar 24, 2021 • 8 tweets • 2 min read
பாசகவின் தேர்தல் அறிக்கை..
தமிழர்களுக்கு 1.5 இலட்சம் வேலை வாய்ப்பு...!!!
எப்படி?
இப்பொழுது நடந்த போட்டியில்
நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர்
பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர்
கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை (1/8)
தபால் துறை தேர்வில் தமிழ் இல்லை கோர்ட் சொல்லி பின்பு சேர்ப்பு, சென்ற ஆண்டு ரயில்வே நிறுவனத்தில் ஹிந்தி மொழி மட்டும் தான் கடிதப் போக்குவரத்து என ஆணை, அது போலவா???
தமிழகத்தை மேம்படுத்துவோம்..!
எப்படி?
ஐந்து வருடங்களாக மதுரை எய்ம்ஸ்சில் ஒரே ஒரு செங்கல் உள்ளதே..
(2/8)
Mar 22, 2021 • 6 tweets • 1 min read
எடப்பாடிக்கு சொந்த தொகுதிலேயயே கறுப்புக்கொடி.
பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய சொந்த தொகுதிலேயே எதிர்ப்பு .
MLA அ.தி.மு.க கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டிஸ் அடித்து விநியோகம்.
பல சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி வேட்புமனு தாக்கல்.
பெருந்துறை வெங்கடாச்சலம் கட்சியினருடன் ஒப்பாரி..
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமை ஏற்பு.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைமை ஏற்பு
மேலூர் அதிமுக MLA க்கு ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.
Mar 22, 2021 • 4 tweets • 1 min read
லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும்,
போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.