#தூர் என்ற கவிதையை கணையாழி இதழுக்கு இளைஞன் ஒருவன் எழுதி அனுப்ப, கணையாழியின் விழா மேடையில் எழுத்தாளர் #சுஜாதா அவர்கள் இந்த இதழில் வெளிவந்த சிறந்த கவிதை என்று இந்த கவிதையை வாசித்து முடித்தவுடன் இந்த கவிதையை எழுதியவர் இருந்தால் மேடைக்கு வரவும் என்று அழைத்தார் 1/n
அப்போது கூட்டத்திலிருந்து கையை உயர்த்தியபடி மெலிந்த ஒரு இளைஞன் வருகிறான்
இதுதான் உலகின் பார்வை அவர் மீது பட்ட நொடி...
அப்போது கவிதையை மிகவும் ரசித்த ஒருவர் அந்த மேடையிலேயே ரூபாய் ஆயிரம் கொடுக்கிறார் அந்த இளைஞனுக்கு 2/n