ஒரேநாளில் ஆண்கள் தினமும், கழிப்பறை தினமும்.. ஏனெனில் இரண்டையுமே மேம்படுத்த வேண்டும் போன்ற மீம்ஸ் நேற்று முழுவதும் கண்களில் பட்டபோதும், உலகில் 420 கோடி மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றனர் என்றிருக்கும்போது, Sustainable Sanitation isn't a joke என்பதே உண்மை! 1/n
நமது வாழ்நாளில், சராசரியாக மூன்று வருட காலங்களை, நாம் கழிவறைகளில் கழிக்கிறோம். அதிலும் ஆண்களைக் காட்டிலும், ஒன்றிலிருந்து ஒன்றரை வருட காலம் அதிகம் செலவிடுகின்றனர் பெண்கள் என்கிறது ஓர் ஆய்வு.. 2/n
Nov 19, 2020 • 14 tweets • 7 min read
"எனக்கு ஐஜியைத் தெரியும்...
...ஆனா அவருக்கு என்னைத் தெரியாது..."
"எல்லா இடத்திலயும் ப்ளாஸ்டிக்கை வைச்சு எரிக்கறான்... ஓசோன்ல ஓட்டையைப் போட்டுட்டான்..."
...என சர்வ சாதாரணமாக ஓரிரு வரிகளைப் பேசிவிட்டு சர்வகாலமும் நம்மை சிரிக்க வைப்பவர் தான் பத்மஸ்ரீ விவேக் அவர்கள்... 1/n
"என்ன..
காமெடி நடிப்பு தானே... அதெல்லாம் அசால்ட்டா அடிச்சுட்டுப் போயிடலாம்..." என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் தருகிறார் விவேக்..?
2/n
கவிதா..
மிகவும் புத்திசாலித்தனமான பெண். குழந்தைப்பேறுக்காக, பல வருடங்களாக முயன்று, சவிதாவில் செயற்கைக் கருத்தரிப்பு மூலமாக, இரட்டையர்களைக் கருத்தரித்து, கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்தே ஏற்பட்ட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளை சமாளித்த தைரியம் மிகுந்த பெண்.. 1/n
ஏழு மாத முடிவில், (முப்பது வாரங்கள்) கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம், கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் அதிக நீர் சுரப்பு ஆகிய காரணங்களால், அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டையர்களைப் பெற்றெடுத்தாள் கவிதா.. 2/n
இரவு வார்ட் ரவுண்ட்ஸ்.
கர்ப்பப்பை பிரச்சினைக்காக அனுமதியாகியிருந்த அந்த 50 வயதுப் பெண்மணியுடன் அவரது மகளும், 4 வயதுப் பேரனும் அதே அறையில் இருக்க,
"ஏம்மா குழந்தையை ஹாஸ்பிடலுக்கெல்லாம் அழைச்சுட்டு வர்றீங்க?
அதுவும் இந்த சமயத்தில!" என்று கடிந்து கொண்டேன். 1/n
"சாரி மேடம்...
இவங்கப்பாவுக்கு நைட் ஷிஃப்ட்..
வீட்டில வேற யாரும் இல்ல மேடம்..
நாளைக்கு காலைல வந்து, இவனை கூப்ட்டுட்டு போயிருவாரு.."
என்று மன்னிப்பு கேட்கும் குரலுடன் அவரது மகள் கூற, அனைத்தையும் துறுதுறுக் கண்களோடு கவனித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.. 2/n
சாலையில் தூரத்தில் பயணிக்கும்போதே வெண்ணிறக் கட்டிடமாக "சவிதா" நீலநிற LED விளக்குகள் ஒளிர, மருத்துவமனையாக சவிதா இயங்கத் துவங்கி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன.. 1/n
ஆறு வருடங்களுக்கு முன்பு, வெற்றிடமாக இருந்த ஒரு சிறிய இடம்.. இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்க..
அதன் முகப்பில் ஒளிரும் "சவிதா மருத்துவமனை" பெயர்ப் பலகை, பல நினைவலைகளை அள்ளி வீசுகிறது.. 2/n
Aug 31, 2020 • 17 tweets • 9 min read
#வாமனனா? #மகாபலியா?
"செத்த மகாபலியையும் கொண்டாடறாங்க, அவனைக் கொன்ன வாமனனையும் கும்பிடறாங்க."
நண்பர் @minimeensன் ஸ்டேட்டஸ் இது..!
உடன் கன்னத்தில் கைவைத்த ஸ்மைலி வேறு.!
...ஆக இவர்களில் நல்லவர் யார்.?
ஏன்..?
ஒரு சிறிய விவாத மேடை இது..! 1/n
மகாபலி..
அசுர அரசர்களிலேயே வலிமை மிகுந்த அரசர். சிவபக்தர். அறிவார்ந்த ஞானி. அன்பானவர். தர்மத்தின் அடையாளச் சின்னமாக விளங்கியவர். தன்னிடம் பிச்சை கேட்டுவந்த வாமனன் என்ற ஏழை பிராமண வேடம் தரித்த கடவுளுக்கு, கொடுத்த வாக்கிலிருந்து தவறாததால், தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தவர். 2/n
"என்னது..
பிரசவ வலியில்லாம இருக்கற ஊசியா..?
அதெல்லாம் வேணாம்..!"
என்று மறுத்துக் கூறிய புவனேஸ்வரியின் பாட்டிக்கு வயது எண்பதைத் தாண்டியிருக்கும்..
கூன் விழுந்த உடல்..
சுருக்கங்கள் நிறைந்த முகம்..
ஆனால் குரலில் மட்டும் அத்தனை தெளிவு.. 1/n
"பாட்டிம்மா..
உங்க பேத்தி வலி தாங்க மாட்டேங்கறா..
பனிக்குடம் வேற உடைஞ்சிடுச்சிருக்கு..
இந்த ஊசியைப் போட்டுட்டா, அவளுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும்..
இந்த ஊசியால, அம்மாவுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு எதுவும் இல்ல.."
என்று நான் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. 2/n
மருத்துவருக்கும், செவிலியருக்கும் இடையே ஓர் உரையாடல்..
"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் கொதிக்குது..
எதுவுமே சாப்பிட மாட்டேங்கறா..
காய்ச்சல் மருந்து தந்தவுடனே அப்படியே துப்பிடறா..
யூரின் போகவே இல்ல..
விடாம அழுதுட்டே இருக்கா..
என்ன பண்றதுன்னே தெரியல மேம்.." 1/n
"குழந்தைக்கு ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்ல கொஞ்சம் ஆரஞ்சு இல்லே ஆப்பிள் சேர்த்துக் குடும்மா..
சரியாயிடும்.."
"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் இருக்கும்போது ஐஸ்கிரீமா..?
அதிகமாயிடாதா..?"
"நீ முதல்ல சாப்பிடக் குடுடா..
அப்பறமா வந்து சொல்லு.." 2/n
திடீரென ரோட்டில் மயக்கமுற்று கீழே விழுந்த அந்தப் பெரியவரை அவசர சிகிச்சைக்கு தூக்கிக் கொண்டு ஓடிவந்தனர் அருகிலிருந்தவர்கள்.
விழுந்தவருக்கு அறுபது வயதிருக்கும். மயக்கமான நிலையில் தர்ஷன் எனும் பெயரைச் சொல்லி சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்...
1/n
ஈ.சி.ஜி.யில், மாரடைப்பு தெரியவர
"Tab. Aspirin (2) 300mg,
Tab. Clopidogrel (4) 300mg,
Tab. Atrovastatin (4) 80mg,
என மாத்திரைகள் அனைத்தையும் விழுங்கச் செய்து,
Tab. Sorbitrate 5mg நாக்கின் அடியில் வைத்து, அவரை இருதய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்.. 2/n
விருந்து மணக்க, ஒரே ஒரு ஜாதிக்காய் போதும் எனப்படும் ஜாதிக்காயின் தாவரப்பெயர் Myrsitica fragrans.
தோன்றிய இடம்: பாண்டா தீவு.
"காரணமில்லாம குழந்தை அழுதா, ஜாதிக்காய் அரைச்சு ஊத்து. அழுகை சுத்தமா நின்னு, தூங்கிடும்"
என்ற கிராமப்புற குரல்களுடன் ஒரு பதிவாக, #ஜாதிக்காய்
சீரான வாழ்விற்கு உதவிடும் சின்னஞ்சிறு விதைகளான
Chia விதைகளின் தாவரப் பெயர்
Salvia hispanica.
தோன்றிய இடம்: மெக்சிக்கோ.
அஸ்டெக் மற்றும் மாயன் நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து பயன்பாட்டில் உள்ள சியா விதைகள், அவர்களின் ஆற்றலின் ஆதாரமாக விளங்கினவாம்..