Sridhar Subramaniam Profile picture
Writer, Thinker, Feminist, Political Philosopher, Human Rights Advocate, Atheist
Feb 22, 2023 8 tweets 1 min read
பிபிசி அலுவலகத்தில் நடந்த வருமான வரி ரெய்டு குறித்து நேற்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்திருக்கிறது. இது குறித்த ஒரு எம்பியின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இதர எம்பிக்கள் பிபிசியை ஆதரித்து பேசி இருக்கிறார்கள். 'ஆவணப் படம் வெளியிட்ட காரணத்தினால் வேண்டுமென்றே மிரட்டுவதற்காக நடத்தப்பட்ட ரெய்டு என்பதில் எங்களுக்கு குழப்பம் இல்லை,' இது ஜிம் ஷானன் எம்பி, DUP கட்சி.
Feb 5, 2023 10 tweets 1 min read
வன்முறையாளர்களின் ஆடை
===
.
2019 மத்திய அரசின் சிஏஏ சட்டத்துக்கு எதிராக தேசமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. தில்லிப் போராட்டங்களுக்கு ஜாமியா மிலியா இஸ்லாமியா ஊற்றுக்கண்ணாக திகழ்ந்தது. அந்தப் போராட்டங்களில் நானும் இரண்டு நாட்கள் கலந்து கொண்டு என் சிறிய பங்களிப்பை வழங்கினேன். ஆனால் தில்லி போலீஸ் ஜாமியா மாணவர்களை சட்டவிரோதமாக அணுகியது. லைப்ரரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்குவது, அவசியமே இன்றி வன்முறையை பிரயோகித்தது, கண்ட வழக்குகளில் உள்ளே தள்ளியது என்று சர்வாதிகாரமாக நடந்து கொண்டது. அப்போது கைதானவர்கள்தான் ஷர்ஜீல் இமாம் ஸஃபூரா சர்கர், போன்றோர்.
Feb 1, 2023 14 tweets 3 min read
எனக்கும் இந்தப் பேனா நினைவுச் சின்னத்தில் பெரிய நாட்டமில்லை. கோடிக்கணக்கான செலவில் இப்படிப்பட்ட நினைவுச் சின்னங்கள் வைப்பது human hubris என்று நம்புபவன் நான். பண்டைய அரசர்கள் அதைத்தான் செய்ய முயன்றார்கள். மோடி, யோகி போன்ற புதிய அரசர்களும் அதையே செய்ய முயற்சி செய்கிறார்கள். நவீன ஜனநாயக ஆட்சி முறைகளில் நம்பிக்கை கொண்டு இயங்குபவர்கள் இப்படிப்பட்ட சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, கொடுக்கவும் கூடாது.

கலைஞரின் நினைவை தமிழ்நாட்டில் கண்டிப்பாக போற்ற வேண்டும்; அதற்கான சின்னங்களை எழுப்ப வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
Jan 24, 2023 12 tweets 2 min read
மூளைக்குள் சாணம்
==
.
'பசுவதையை மட்டும் நிறுத்தி விட்டால் உலகின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.'

'பசு வெறும் விலங்கு கிடையாது. தாயை ஒத்தது. அதனால்தான் கோ-மாதா என்று பெயரிட்டு அழைக்கிறோம்.'

'கோமியம் குடித்தால் பல்வேறு நோய்கள் குணமாகின்றன என்று அறிவியல் சொல்கிறது.'👇 'மாட்டு சாணத்தினால் வீட்டுக் கூரையை வேய்ந்தால் அந்த வீட்டை ரேடியேஷன் தாக்காது, என்பது நிரூபணமான விஷயம்.'

இதையெல்லாம் சொல்லி இருப்பது ஆர்எஸ்எஸ் நிர்வாகியோ, மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஒருவரோ அல்ல. குஜராத்தின் தாபி மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கும் நீதிபதி சமீர் வினோசந்திரா. 👇
Jan 21, 2023 19 tweets 2 min read
பாக்ஸிங் தழுவுதல்
==
.
இந்த வருடம் மட்டுமே இதுவரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் இரண்டு பேர் இறந்து போயிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றிருக்கிறார்கள். ஒரு நடிகரின் ரசிகர் லாரியில் இருந்து விழுந்து இறந்து போன போது அவரையும் அவர் பெற்றோரையும் தூற்றியவர்கள், ரசிகர்களை 'உருப்படாத கும்பல்கள்' என்று வர்ணித்தவர்கள், ரசிக மனப்பான்மையை கலாச்சார சீரழிவு என்று இழித்தவர்கள் எல்லாம் இப்போது மிக்சர் சாப்பிடப் போய் விட்டிருக்கிறார்கள்.
Jan 12, 2023 18 tweets 2 min read
ரசிகர்களின் காவடி
==
.
நேற்று முதல் அஜித்-விஜய் ரசிகர்களிடையே போட்டி நடந்து வருகிறது. அது எதிர்பார்த்ததுதான். அதை விட அதிகம் எதிர்பார்த்தது ரசிகர்கள் குறித்த விமர்சனம். 'இவங்கள்லாம் உ...ருப்படுவாங்களா?', 'இவங்க பெற்றோரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது...' 👇 ...என்றெல்லாம் பல்வேறு விதமான அங்கலாய்ப்புகள். ஒரு ரசிகர் ஒரு வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு இறந்ததில் 'அந்தப் பையனுக்கு நல்லா வேணும்!' என்று சாபங்கள். 👇
Jan 10, 2023 13 tweets 2 min read
ஆளுநர் ரவிக்கும் தமிழ் நாட்டு அரசுக்கும் இடையில் இருந்த பனிப்போர் முழுமையான போராக மாறி இருக்கிறது. நேற்று சட்டமன்றத்தில் நடக்கவிருந்த உரைக்காக தமிழ் நாட்டு அரசு தயாரித்துக் கொடுத்திருந்ததை முழுவதும் படிக்காமல் அதில் இருந்து சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்திருந்திருக்கிறார். 👇 'பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞர், போன்றோர் வழிகாட்டுதலில் திராவிட மாடலைப் பின்பற்றும் அரசு,' வரியை விட்டிருக்கிறார். 'தமிழகம் அமைதிப் பூங்காவாக அந்நிய முதலீடுகளைக் குவித்து, அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் நடைபோடுகிறது,' இதையும் படிக்காமல் விட்டிருக்கிறார்.👇
Jan 8, 2023 13 tweets 2 min read
இந்தப் புத்தகக் கண்காட்சியில் கோதை பதிப்பகம் அரங்கு எண் 303ல் நான் எழுதிய அனைத்துப் புத்தகங்களும் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

எனது புத்தகங்கள்: 1. ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்:

இது நாத்திகம் பற்றியதல்ல. பெண்ணியம், கருத்துரிமை, வரலாறு, இந்துத்துவம், இஸ்லாமியவாதம், பாகிஸ்தான், கஷ்மீர், விலங்குரிமை என்று என் மனதுக்கு நெருக்கமான தலைப்புகளில் 2014 முதல் 2017 வரை எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பு.
Jan 3, 2023 19 tweets 2 min read
பத்து கோடி ரூபாய்க்கு மாருதி கார்
==
.
பண நீக்க நடவடிக்கை நியமானதா, சட்டபூர்வமானதா என்று பதியப்பட்ட பல்வேறு வழக்குகளில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஐந்து நீதிபதிகள் குழுவில் நான்கு பேர் இது சட்டபூர்வமானதுதான் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். 👇 ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இணைந்து கலந்தாலோசித்துதான் இந்த நடவடிக்கை வந்திருக்கிறது, என்று சொல்லி இருக்கிறார்கள். பழைய கரன்சி நோட்டுகளை பரிமாற்றம் செய்வதற்கு விதிக்கப்பட்ட வரம்புமே கூட சரிதான் என்று தீர்ப்பு கூறுகிறது. 👇
Jan 2, 2023 27 tweets 3 min read
பதஞ்சலி சிட்டுக்குருவி லேகியம்
===============================
.
இன்று ஹிண்டு முதல் பக்கத்தில் பதஞ்சலி விளம்பரம் ஒன்று வந்திருக்கிறது. பிபி மற்றும் சுகர் இரண்டுக்கும் ஆயுர்வேத மாத்திரைகள் மற்றும் சூரணங்களுக்கான விளம்பரம் அது. [1] பிபி மற்றும் சுகர் இரண்டுக்கும் தற்போது நவீன அறிவியல் மருத்துவம் கொடுக்கும் மருந்துகளை விமர்சனம் செய்கிறது அந்த விளம்பரம். அவை மோசமானவை, கிட்னியை நாசம் செய்பவை. உடலின் இயற்கையான போக்கை பாதிக்கின்றன, என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
Dec 27, 2022 12 tweets 2 min read
Nasty, Brutish, and Short
=
.
'திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் நன்றாக தாழ்வு மனப்பான்மை வரவைத்து விட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புத வரலாறு நமக்கு பெருமையையும் தன்னம்பிக்கையையும்தான் கொடுத்திருக்க வேண்டும்.'

என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். 👇 அந்த செய்தி பார்த்ததும் எனக்கு தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது. காரணம், அதற்கருகில் இருந்த வேறு இரண்டு செய்திகள்தான். 👇
Dec 18, 2022 5 tweets 1 min read
விரைவில் வெளிவரவிருக்கும் 'பத்தான்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பேஷரம்' பாடலில் தீபிகா படுகோன் காவி கலர் பிகினி அணிந்திருந்தது எதிர்ப்பலையை உருவாக்கி இருக்கிறது.
அப்படி அவர் காவி அணிந்து கொண்டதை நானும் எதிர்க்கிறேன்.

காரணம்: 👇 - சுதந்திர இந்தியாவில் கலவரங்கள் நடத்தி ஆயிரமாயிரம் அப்பாவிகள் சாகக் காரணமான தீவிரவாதிகள் அணிந்த நிறம் அது.

- அக்கலவரங்களில் நினைக்கவே நடுநடுங்கும் வன்புணர்வுகளை அரங்கேற்றிய காமக்கொடூரர்கள் அணிந்த நிறம் அது. 👇
Dec 17, 2022 16 tweets 2 min read
பீகாரில் இன்னொரு கள்ள சாராய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சரண் எனும் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து சாவுகள் நடந்திருக்கின்றன. அரசுத் தரப்பில் 30 பேர் என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட கிராமத்து மக்கள் 56 பேர் என்று கணக்கு சொல்கிறார்கள். பலருக்கு கண்ணும் போயிருக்கிறது. இறந்தவர் குடும்பங்களுக்கு 10 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்திருக்கிறது நியாயமான ஒன்று. ஆனால் எந்த நஷ்டஈடும் கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்திருக்கிறார். 'கள்ள சாராயம் குடித்தால் சாவு உண்டு என்பது தெரியும்தானே? ' என்று கேட்கிறார்.
Dec 6, 2022 5 tweets 1 min read
படேலை ஆட்டையைப் போட்டாகி விட்டது; இப்பொழுது அம்பேத்கரை ஆட்டையைப் போடும் முயற்சி சிறப்பாக நடக்கிறது; அடுத்து ராஜாஜி, ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், நரசிம்ம ராவ் என்று போகும் என்று கணிக்கிறேன். 👇 பாவம் வேறு என்னதான் செய்வார்கள்? அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் தீன் தயாள் உபாத்யாய், ஷியாமா பிரசாத் முகர்ஜி, ஹெட்கேவார், சவர்க்கர் ஆகியோர் பற்றிப் பேசுவதற்கு அவர்களிடமே கூட கன்டென்ட் எதுவும் இல்லை. 👇
Dec 6, 2022 21 tweets 3 min read
லவ் டுடேவும் பெண்ணியமும்
=
.
(ஸ்பாய்லர்கள் பகிரப்படுவதில்லை.)

இன்றைய நவீன தலைமுறை இளைஞர்களுக்கான நவீன காதல் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்ட படம் லவ் டுடே. சரி, இளைய தலைமுறைக் காதலைப் புரிந்து கொள்ளலாம் என்று ஆவலாகப் பார்க்க ஆரம்பித்தேன். 👇 படத்தில் காதலர்கள் ஈருடல் ஓருயிர் என்று அலைகிறார்கள். 'உன் கையை நான் பிடிச்சிக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கணும், என்று சொல்லி அந்தப் பெண் அவனுக்கு கையில் காப்பு கட்டி விடுகிறாள். அவன் அவளுக்கு பதிலுக்கு மூக்குத்தி குத்தி விடுகிறான். 👇
Dec 5, 2022 6 tweets 1 min read
இந்து மத சீர்திருத்தம் பற்றிப் பேச ஆரம்பித்த உடனே இந்துத்துவர்கள் ராஜாராம் மோகன்ராயை பஞ்சாயத்துக்கு இழுக்கிறார்கள். அவர்தானே நிறைய சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். அவர் செக்யூலரா? என்று கேட்கிறார்கள்.

அவர் காலத்தில் செக்யூலரிசம் பற்றி பெரிய விழிப்புணர்வு இருக்கவில்லை. 👇 ஆனால் ராம் மோகன்ராய் இன்னொன்று செய்தார். சதிக் கொடுமை, மழலை மணம் போன்றவற்றை தடை செய்யும் தனது நோக்கங்கள் இந்து மதத்துக்குள் நிறைவேற வாய்ப்பில்லை என்று விரக்தியடைந்து அவர் தானே தனியாக ஒரு மதத்தை நிறுவினார். இது இந்துத்துவர்களில் பலருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது சோகம். 👇
Dec 5, 2022 7 tweets 1 min read
இந்தப் புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து பேசி வருகிறார்கள். எல்லாருமே மோடியின் பகட்டு ஆடையையும், தேர்தல் நேரத்தில் அம்மா சென்ட்டிமென்ட்டை கிளப்புவதையும் மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் வேறு ஒரு கோணத்தைப் பார்ப்போம். படத்தைப் பாருங்கள். ஒரு தனி ஆண்மகன், ஒரு தனி பெண்மணி படத்தில் இருக்கிறார்கள். ஒருவர் கலர் கலராக ஆடை அணிந்திருக்கிறார். இன்னொருவர் வெள்ளையாடை அணிந்து இருக்கிறார். அந்தப் பெண் ஏன் அப்படி ஒரு உடை உடுத்த வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.
Dec 5, 2022 10 tweets 2 min read
அலை பாயும் கூந்தல்
=
.
ஈரானில் இரு மாதங்கள் முன் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கலாச்சாரக் காவல் துறையால் கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி போலீஸ் காவலில் அடிபட்டு இறந்தது மாபெரும் உணரவெழுச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் இளைஞிகள் பெருவாரியாகத் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டார்கள். பல பெண்கள் ஹிஜாப்பை கழட்டுவதை வீடியோ எடுத்து இன்ஸ்டகிராமில் பகிர்ந்தார்கள். சிலர் ஹிஜாப் துணியை எரிப்பதை வீடியோ எடுத்து பகிர்ந்தார்கள். கால்பந்து வீரர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள் என்று ஈரானின் முக்கிய பிரமுகர்கள் பலர் போராட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை நல்கினார்கள்.
Dec 4, 2022 4 tweets 1 min read
நான் தினமும் மாலை ஐந்து மணி தாண்டியதும் ஒரு பக்கெட், கரண்டி, ஒரு பிளாஸ்டிக் பையில் கிழித்த நியூஸ் பேப்பர்கள் எடுத்துக் கொண்டு போவதை எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். போகும் போது பக்கெட் நிரம்பியும் முக்கால் மணி நேரம் கழித்து திரும்பி வரும் போது காலி பக்கெட்டுடனும் வருவதைப் பார்த்துக் கொண்டு இருந்தவர், இன்றைக்கு நான் போகும் போது என்னை அணுகி சற்றே தயக்கத்துடன் 'தம்பி, பக்கெட்ல என்ன கொண்டுட்டுப் போறீங்க?'என்று கேட்டார்.
Dec 4, 2022 21 tweets 3 min read
யாருமே கேக்கலையே!
====
.
'பிராமணர்களுக்கு எதிரான வன்முறைகள்,' என்றால் பண்டிட் படுகொலைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

பண்டிட்டுகள் பிராமணர்கள்தான். ஆனால் அவர்கள் பிராமணர்கள் என்ற காரணத்துக்காக குறி வைக்கப்படவில்லை. இந்துக்கள் என்று அடையாளப்படுத்திதான் குறி வைக்கப்பட்டார்கள். இன்றளவும் இந்துத்துவர்களின் விவாத ஸ்டாக்கில் இருக்கும் முக்கிய ஆயுதம் 'பண்டிட்டுகள் தாக்கப்பட்டார்களே என்பதுதான். காரணம் இந்துக்களுக்கு எதிராக இந்தியாவிலேயே நடந்த ஆகப்பெரிய வன்முறை அது. எனவே இப்போது திடீரென்று அதனை பிராமணர்கள் கணக்கில் வரவு வைக்கக் கூடாது.
Dec 3, 2022 28 tweets 4 min read
பிராமண உயிர்கள்
.
முந்தாநாள் ஜேஎன்யூ வளாகத்தில் சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' 'பிராமண, பனியாக்களே உங்களைத் தேடி வருகிறோம்', 'பழி வாங்கியே தீருவோம்' போன்ற வாசகங்கள் கொண்ட சுவர்கள் சமூக ஊடகங்களை அலங்கரித்தன. விளைவு, நேற்று #BrahminLivesMatter என்ற ஹேஷ்டேக் உலா வந்து மதியத்துக்குள் டிவிட்டரில் முன்னணியில் டிரெண்டிங் ஆனது. இந்த ஹேஷ்டேக் ஒரிஜினல் இல்லை. அமெரிக்காவில் அப்பாவி கறுப்பர்கள் போலீசாரால் கொலையுறுவதை கண்டிக்க துவங்கப்பட்ட #BlackLivesMatter ஹேஷ்டேக்கின் உல்டாதான்.