தமிழ் இனியன் Profile picture
May 23, 2022 5 tweets 1 min read
#ஐயம்:

ஐயப்படுத்தலுக்கு வேர்ச்சொல்லாய் 'அய்' என்ற வடிவம் இருந்திருக்கலாம்.

*அய் → அயிர்-த்தல் = To suspect, doubt; ஐயப்படுதல், சந்தேகித்தல்.

அயிர் = Doubt, suspicion; சந்தேகம், ஐயம்

அயிர் → அயிர்ப்பு = ஐயம்; doubt, suspicion. *அய் → ஐ

ஐயுறு-தல் (ஐ + உறு) = To doubt; சந்தேகித்தல்

ஐயுறவு (ஐயுறு + அவு) = Doubt, suspicion; ஐயம்

ஐ → ஐயம் = doubt, hesitation, சந்தேகம்.
Malayalam. ayyam "doubt"

ஐயமுறல் (ஐயம் + உறல்) = ஐயங்கொள்ளுதல்.

ஐயங்கொள்ளுதல் = நம்பிக்கை தளர்தல்; to have doubt.
May 22, 2022 5 tweets 1 min read
#ஏமாற்றம்:

ஏம் = மயக்கம்; distraction, perplexity.

ஏம் → ஏமம் = கலக்கம், மயக்கம், perplexity, confusion.
ஏம் → ஏமல் = குழப்பம், மனக்கலக்கம்.
Malayalam. ēmal "confusion of mind, bewilderment"

ஏம் → ஏம்பு-தல் = மனங்கலங்குதல்.
ஏம்பு → ஏம்பல் = வருத்தம். ஏம் → ஏமரு-தல் = திகைத்தல், கலங்குதல்; to be confused.
ஏம் → ஏமார்-தல் = மனங்கலங்குதல்; to be confused, bewildered.
ஏமார் → ஏமாறு-தல் = To be beguiled; மோசம் போதல், to be confused, bewildered; அலமருதல்.

ஏமாறு → ஏமாற்று-தல் = வஞ்சித்தல்; to deceive.