The Subject Line (TSL) 🎯 Profile picture
செய்திகளை ஸ்மார்ட்டாகத் தெரிந்துகொள்ள உதவும் தமிழ் நியூஸ்லெட்டர். இனி உங்களின் தினசரி நியூஸ் டயட்... தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸில்! Do Subscribe 👇
Dec 23, 2021 33 tweets 5 min read
💳 மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்?

👉 வரும் ஜனவரி 1, 2022-லிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலாகின்றன. இதனால், ஆன்லைன் கார்டு பேமென்ட்களில் பெரியளவில் மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. 🔴என்ன மாற்றம்?

இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தற்போது ஆன்லைன் பேமென்ட்கள் எப்படி நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். #TSLExplainer #Tokenization #RBI
Dec 21, 2021 34 tweets 7 min read
🗳 Voter ID + Aadhaar; நிச்சயம் இணையத்தான் வேண்டுமா? #TSLExplainer #AadhaarVoterIdLink

🔴போதிய விவாதங்களின்றி, அவசர கதியில் நேற்று லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா 2021, அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. Image காரணம், அதில் இடம்பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் ஒரு அம்சம்தான்.

என்ன பிரச்னை அதில்?

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவில் மொத்தம் 4 திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்றுதான் இந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு. இது என்ன சொல்கிறது?
Dec 20, 2021 31 tweets 5 min read
😷ஓமிக்ரான்: What We Know So Far? #TSLExplainer

👉உலகின் முதல் கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட் தொற்று பதிவாகி இன்றுடன் 25 நாள்களாகின்றன. ஆரம்பத்தில் நம்மிடையே போதுமான Data இல்லாததால், #ஓமிக்ரான் பற்றி எந்தவொரு உறுதியான முடிவுக்கும் வரமுடியாமல் இருந்தனர் நிபுணர்கள். #Omicron 👉 தற்போது 25 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், ஓமிக்ரானின் தன்மை குறித்து நமக்கு புதிய தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. அவை என்ன?